மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

29-Mar-2009

ஐந்நிலம்

மரத்திற்கு பின்
மறையும் மலை-
தூரம்.

என்றோ தொலைந்த செருப்பை
மாட்டி நடந்தேன்
சருகுகளின் ஓசை.

புல்நுனி பனித்துளி
சறுக்கி விழுந்தது
சேற்றில் சலனம்.

காதில் கூழாங்கற்கள்
உறைந்து கிடந்தது
கடல் அலை.

சட்டென விழித்தேன்
இன்னும் ஈரமாகவே இருக்கிறது
குடுவை.

3 comments:

மண்குதிரை 31 March 2009 at 1:39 pm  

வாழ்த்துக்கள் வெங்கி !

வெங்கிராஜா 1 April 2009 at 1:01 am  

மிக்க நன்றி மண்குதிரை. தொடர்ந்து வருகை புரியவும்!
:)

பிரவின்ஸ்கா 14 June 2009 at 7:11 pm  

நல்லா இருக்குங்க

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP