மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

26-Apr-2009

மறுபிறவி

சுவரில் பெருநிழலாய்
மெழுகின் நுனித்தீயை
தின்றுகொண்டிருந்த பூச்சி,
நெருப்பொளி இருட்டடிக்க
நிழல்களின் மரணம்
பிம்பம் புகையின் வண்ணம்.
உரசிய பொறியின் தீபம்
கருமையின் நிசப்தம் கலைத்து
மீண்டும் வட்டமிடும் நிழல்.
_______________________________________________________________________

16 comments:

yathra 28 April 2009 at 8:30 pm  

இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது வெங்கிராஜா,

//நெருப்பொளி இருட்டடிக்க நிழல்களின் மரணம்//

கற்பனை மிகவும் அழகாயிருக்கிறது.

//கருமையின் நிசப்தம் கலைத்து மீண்டும் வட்டமிடும் நிழல். //

அருமையா இருக்கு, நீங்க நிறைய எழுதணும்.

Krishna Prabhu 28 April 2009 at 9:25 pm  

புதுக்கவிதை நன்றாக இருக்கிறது... நெறைய எழுதுங்க வெங்கி...

Suresh 28 April 2009 at 10:12 pm  

அருமையான வார்த்தகளை வைத்து விளையாடி விட்டாய் வோட்டும் போட்டாச்சு

vinoth gowtham 29 April 2009 at 12:07 am  

அருமையான கவிதை..
அதே தான் நானும் சொல்றேன் நிறையா எழுது..

மண்குதிரை 29 April 2009 at 2:54 pm  

சொல்லும் தொனியை ஒழுங்குபடுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

தவறாக நினைக்க வேண்டாம். என்னுடைய தனிப்பட்ட கருத்து.

வாழ்த்துக்கள் வெங்கி!

வெங்கிராஜா 29 April 2009 at 3:01 pm  

நான்கில் மூணு பங்கு படிக்கவும், ஒரு பங்கு எழுதவும் பெரியவர்கள் சொல்கிறார்கள். இப்போதைக்கு அளவாக எழுதவே ஆசைப்படுகிறேன். வாழ்த்துகள் பெரிய அளவில் ஊக்கமளிக்கிறது. மிக்க நன்றி யாத்ரா, கி.பி, சுரேஷ், வினோத்.

கார்த்திகைப் பாண்டியன் 29 April 2009 at 3:03 pm  

//நெருப்பொளி இருட்டடிக்க நிழல்களின் மரணம் பிம்பம் புகையின் வண்ணம். //

வார்த்தைகளை இன்னும் கொஞ்சம் சரியாக ஒழுங்கு பண்ணி இருக்கலாம் என்று தோன்றுகிறது நண்பா.. நல்லா இருக்கு..

கார்த்திகைப் பாண்டியன் 29 April 2009 at 3:03 pm  

//தங்கத் தலைவர் கவுண்டமணி:
"ராமையா ஒஸ்தாவைய்யா!
ராமையா ஒஸ்தாவையா!
பின்னூட்டம் போடுங்கைய்யா!
பின்னூட்டம் போடுங்கய்யா!
மேரே தேரே குஜ்ஜுக்குதிய்யா!
மேரே தேரே குஜ்ஜுக்குதிய்யா!"//

இது சூப்பரு...:-)

வெங்கிராஜா 29 April 2009 at 4:28 pm  

வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி மண்குதிரை, கார்த்திகைப் பாண்டியன். கூர்மையாக வேண்டித்தானே வலைப்பூ எல்லாம்.. தொடர்ந்து குறைகளைச்சுட்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ரசித்ததில் மகிழ்ச்சி கா.பா!

வால்பையன் 29 April 2009 at 6:17 pm  

அண்ணே கவிதை நல்லாயிருக்கு!
ஆனா எனக்கு தான் புரியல!

வெங்கிராஜா 29 April 2009 at 7:08 pm  

புரிஞ்சுட்டா அது எப்படி சகா கவுஜயாவும்?
இது என்ன இது அண்ணன்னு எல்லாம்?!

aravind karthik 30 April 2009 at 4:20 pm  

வெங்கி அண்ணா..

புரியாம இருந்தாத்தான் கவிதையா ?

:கிக்கிக்கி:

வெங்கிராஜா 30 April 2009 at 5:48 pm  

ஏங்க மது (எ) அ.கா..குழந்தை படம் போட்டுட்டா என்னைய அண்ணன்னு கூப்பிடுறதா? அது சும்மா குசும்புக்கு சொன்னதுங்கோ...

டக்ளஸ்....... 1 May 2009 at 4:53 pm  

நாலுதடவை படிச்சிட்டேன்..!
சத்தியமா புரியல..!
ஒருவேளை அதுதான் கவிதையா?

வெங்கிராஜா 2 May 2009 at 1:47 am  

பிரச்சனையே இல்லை டக்ளசு... உட்டுத்தள்ளுங்க! (நிச்சயமா அர்த்தம் சொல்லணுமா?)

அனுஜன்யா 5 May 2009 at 12:29 pm  

நல்லா இருக்கு வெங்கி. உங்களால் இன்னும் நன்றாக எழுத முடியும் என்றும் தோன்றுகிறது. நிறைய வாசிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நிச்சயம் அது எழுத்தில் தெரியும்.

அனுஜன்யா

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP