மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

17-Apr-2009

சுண்டக்கஞ்சி

1.
நினைவுகள் மலர மாட்டேன் என்கின்றன
காய்த்து பழுத்து புளுத்துவிடுகின்றன.
7.4.2008

2.
அரிதாரம் பூசிக்கொண்டு
வாயசைக்காமல்,
ராக அபிநயங்களொடு
சிலாகிக்காமல்
நமக்கு மட்டும் புரியாத
ஏதோ ஒரு மொழியில்
புதுக்கவிதைகளோடு
அக்குபஞ்சர்
செய்துவிட்டுப்போகிறது அந்தக் கொசு.
22.9.2006

3.
என்னதான் பாழ்மண்டபமாக
இருப்பினும் இன்னமும்
சலிப்போடு வாழ்ந்துகொண்டிருக்கிறது-
ஓர் ஆமை!
7.9.2006

_____________________________________________________________

9 comments:

vinoth gowtham 24 April 2009 at 2:16 am  

எதன்னு சொல்ல எல்லாமே நல்லா இருந்தா..

வெங்கிராஜா 24 April 2009 at 7:58 am  

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? பாராத்திரி 2 மணிக்கு பின்னூட்டமா! தொடர்ந்து பக்கபலமாக இருந்து வருகிறீர்கள். மிக்க நன்றி.
விவேக்: "ஆனா பேபி... இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்குற வரைக்கும் தமிழ் நாட்டுல உன்ன யாரு அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது!" (இதெல்லாம் எனக்கே ஓவரா இருக்கு..)

Suresh 24 April 2009 at 3:56 pm  

மச்சான் உன் பின்னூட்டம் பார்த்தே யுவகிருஷ்னா பதிவில் ;) ரசித்தேன்
அதற்க்கு ஒரு மிக பெரிய கைதட்டு

அப்புறம் உன் கவிதை அருமை
//நினைவுகள் மலர மாட்டேன் என்கின்றன
காய்த்து பழுத்து புளுத்துவிடுகின்றன//
அழகு

//அக்குபஞ்சர்
செய்துவிட்டுப்போகிறது அந்தக் கொசு.//

:-) ஹ ஹ அருமை சிரிப்புடன்

//என்னதான் பாழ்மண்டபமாக
இருப்பினும் இன்னமும்
சலிப்போடு வாழ்ந்துகொண்டிருக்கிறது-
ஓர் ஆமை!//

ஆக என்ன உவமை ;) ஒரு ஐகு மாதிரி ;

வோட்டு போட்டாச்சு மச்சான்

Suresh 24 April 2009 at 3:57 pm  

/விவேக்: "ஆனா பேபி... இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்குற வரைக்கும் தமிழ் நாட்டுல உன்ன யாரு அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது!" (இதெல்லாம் எனக்கே ஓவரா இருக்கு..)//

ஹா ஹா

வெங்கிராஜா 24 April 2009 at 5:58 pm  

சுரேஷ்... உங்களை முன்னே பின்னே பார்த்தது கூட இல்ல.. ஆனா வெகு இயல்பா என்னை எப்போதிலிருந்தோ அறிந்தவன் போல பாவித்து பேசுறீங்க.. உங்கள் வலைப்பூ நெட்வொர்க் எப்படி வேகமா பரவுதுன்னு இப்ப புரியுது. நல்ல நண்பர்களை தேடித்தரும் ப்ளாகருக்கும், வலைப்பூ திரட்டிகளுக்கும் நம் நன்றிகள்! பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழா!

Karthikeyan G 27 April 2009 at 5:57 pm  

Label Super!!

//உங்களுக்கு புடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... பிடிக்கலைன்னாலும் ஓட்டு போடுங்க...
நீங்க ஓட்டு போட்டா மட்டும் போதும்! நீங்க ஓட்டு போட்டா மட்டும் போதும்!
//

முடியல..
User-id, password எல்லாம் கேட்குது. அப்டினா என்னானே தெரியலே.

கார்த்திகைப் பாண்டியன் 28 April 2009 at 5:31 pm  

மூணாவது ரொம்ப நல்லா இருக்கு.. தொடர்ந்து எழுதுங்க..

yathra 28 April 2009 at 8:23 pm  

மூன்றுமே மிகவும் பிடித்திருக்கிறது வெங்கிராஜா, தாங்கள் நிறைய எழுத வேண்டுகிறேன்.

வெங்கிராஜா 29 April 2009 at 2:17 pm  

கார்த்திகேயன்ஜி, கார்த்திகைப் பாண்டியன், யாத்ரா - நன்றி.

ஜி- அவையெல்லாம் வலைப்பூ திரட்டிகள். அந்த தளங்களில் என்னைப்போல பிற வலைப்பதிவர்களின் பதிவுகள் இனம் பிரிக்கப்பட்டு திரட்டப்படும், அங்கே குறிப்பிட்ட பதிவுகளுக்கு வோட்டு போடப்போட பதிவு பிரபலமாகும் சென்று பாருங்கள்.

கா.பா- நன்றி, நிச்சயமாக!

யாத்ரா- உங்களது கவிதைகளைப் படிக்கையில் எழுந்த உணர்வுகளின் வடிகாலே இந்த உளறல். நான் தான் உங்களிடம் எனக்கு உந்துதல் அளிக்க வேண்ட வேண்டும்

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP