கிழமைக்கொரு கீதம்
தும்பீ வா என்று மலையாளத்தில் போட்ட பாடலை அண்ணல் இளையராஜா அவர்கள் விஜயகாந்த் நடனமாட தனது குரலில் சங்கத்தில் பாடாத கவிதை என்று இசைத்தார். துபாயில் அவரது நிகழ்ச்சி ஒன்றில் அதே பாடலை வெறும் சங்கதிகளால் பாடியிருக்கிறார்.
ஓரளவுக்கு மொட்சார்ட்டையும், பீத்தோவனையும் கேட்டிருக்கிறேன். ரஹ்மானையும், சமகால இந்தி இசையயும் ஏதோ அறிந்திருக்கிறேன். இது எல்லாவற்றுக்கும் சிகரம். சொல்லிலடங்காத விந்தை இந்தக் குரலுக்குள் ஒளிந்திருக்கிறது. ஆளை அடித்து வீழ்த்தும் இசை. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத குரல். வெறும் உடைத்துப்போட்ட எழுத்துக்களை கோத்து எப்படி இந்த மனிதனால் இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்த முடிகிறது? கண்கட்டு போல வித்தைகளை காட்டியபடி தனது மேதமையின் துளியை சிந்தியபடி சென்றுகொண்டே இருக்கிறார். ஒரு கணம் தீயாகவும், மறுகணம் காற்றாக அதே தீயை அணைக்கவும் செய்யும் சுரங்களை இவரால் மாத்திரமே வார்த்தெடுக்க முடியுமோ!" இவர் இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை!", "இவர் மேனாட்டில் இருந்திருந்தால்.. " இத்தியாதி கூற்றுகளை எல்லாம் முதலில் புறந்தள்ள வேண்டும்- அவர் நம் புகழ், நமது சின்னம். வார்த்தைகள் சிக்கமாட்டேன் என்கின்றன. சுருக்கமாக, யாமறிந்த கலைஞர்களுள் இளையராஜாவைப்போல் எங்கும் காணோம்.
11 comments:
ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க, ஒரு தேர்ந்த எழுத்தாளனை போல்.
இளையராஜா சமக்கால அதிசயம்.
எழுத்தாளனா?! ரொம்ப புல்லரிக்க வைக்குறீங்களே... இருப்பினும் நன்றி! இளையராஜாவைப் பற்றி பேசுகையில் இப்படித்தான் நேர்ந்துவிடுகிறது.. சொற்களாகவே என்னை எங்கோ இட்டுச்சென்றுவிடுகின்றன.
சமீப ஆறு மாத காலமாக இளையராஜா இசையில் ஜானகி அம்மா பாடிய தும்பி வா பாடல் தான் எனது ரிங் டோன்... அவரது அனாயசய குரலும், மேஸ்ட்ரோவின் இசைக்கலப்பும் மயக்கக் கூடிய ஒன்று. I am a die heart fan of Ilayaraja. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
தும்பீ வா புரியலைங்க... அதனால எனக்கு சங்கத்தில் எழுதாத கவிதை பிடிச்சிருக்கு! மேலும், இது ரெண்டையும் விட இங்க குடுத்திருக்கிற வீடியோவுல வர்ற தன-னா இன்னும் இஷ்டமாயிருக்கு.
Die Hard-னு தானே சொல்லுவாங்க.. Die heart- இது புதுசா இருக்கு.. :P
அருமையான முத்தான எழுத்துக்கள் :-0
தொடர்ந்து எழுதுங்கள் தலை
@ வெங்கிராஜா
// வாழ்த்துக்கள் சுரேஷ். //
ரொம்ப ரொம்ப சந்தோசம் வெங்கிராஜா
//மிகக் குறுகிய காலத்திற்குள் பதிவுலகத்தில் உங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டீர்கள். //
இன்னும் ஒரு தூண்டு க்கூட கிடைக்கல
முத்ல தூண்டு கிடைச்சு அப்புறமா தான் அதை வச்சி இடம் போடனும்
ரொம்ப ந்ன்றி மைல்ஸ் டூ கோ :-)
//திரட்டிகளின் வாக்குகளிலும், விகடனின் தளத்திலும் முன்னே நிற்கிறீர்கள். //
மக்களின் மனதில் இடம் பெறனும் அதான் என்க்கு மிக பெரிய ஆசை தல
//என்னைப் போன்ற புதிய பதிவர்களுக்கு நல்ல உதாரண வலைப்பூ.//
ரொம்ப சந்தோசம் :-) கண்டிப்பா நிங்க சொன்னதை காப்பாத்திக்க நான் நிறையா உழைக்க வேண்டும்
//ஆனாலும் எழுத்துப்பிழை மட்டும் ஒருமுறை சரிபார்க்கலாமே தலைவா!//
சரி தலை போதுவாவே நம்ம கொஞ்சம் வீக் .... கண்டிப்பா சரி பண்ணிட்டு வருகிறேன் :-) உங்கள் அருமையான இந்த கருத்துக்கு என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள்
//கடைசி பெஞ்சு மாணவன். // இது நால உங்களை எனக்கு ரொம்ப பிடிக்குது ஹ் ஹா
ungal pathasari picture arumai nalla design thalai keep writing
i joined as your follower
//அருமையான முத்தான எழுத்துக்கள் :-0
தொடர்ந்து எழுதுங்கள் தலை//
ரொம்ப நன்றிங்க...
//ungal pathasari picture arumai nalla design thalai keep writing
i joined as your follower//
பின்னூட்டங்களுக்கும் ஃபாலோ பண்றதுக்கும் இன்னுமொரு நன்றி சுரேஷ் (பேரை சொல்லியே கூப்பிடட்டுமா, இல்ல சக்கரகட்டி..சாந்தனு-னு ஏதும் கூப்பிடவா?)...
//
//கடைசி பெஞ்சு மாணவன். // இது நால உங்களை எனக்கு ரொம்ப பிடிக்குது ஹ் ஹா //
நம்ம எப்பவுமே கடைசி பெஞ்சு தான்! இப்பகூட க்ளாஸ் பங்க் அடிச்சுட்டு தான் பின்னூட்ட பதில் போடுறேன்!
"தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சதயி ஊன்ஜளிடம்" - இந்த வரிகள் எனக்கு ஒழுங்கு படுத்தப்பட்ட சப்தமாகத்தான் அறிமுகம். மற்ற படி எனக்கும் அர்த்தம் தெரியாது. ஆனாலும் "சந்தத்தில் பாடாத கவிதை" பாடலில் இல்லாத சில Modifications இதில் இருக்கும். அதே சமயத்தில் ஜானகியம்மாவின் குறளிலுள்ள ஜிம்னாசிசம் ஐயய்யோ... ஒன்னும் பன்னுவதற்கில்லை மறுபடியும் மறுபடியும் கேட்பதைத் தவிர. (சாகடிக்கிற இசைங்க அவரோடது...)
பிழைக்கு மன்னிக்கவும்.
/--சங்கத்தில் எழுதாத கவிதை பிடிச்சிருக்கு!--/
எப்பவும் எழுத்து எழுத்துன்னு யோசிப்பிங்களோ! :-) அது "எழுதாத கவிதை" இல்ல "பாடாத கவிதை" :-) just for fun. Don't be mistaken me.
//இந்த வரிகள் எனக்கு ஒழுங்கு படுத்தப்பட்ட சப்தமாகத்தான் அறிமுகம்.அதே சமயத்தில் ஜானகியம்மாவின் குறளிலுள்ள ஜிம்னாசிசம் ஐயய்யோ... ஒன்னும் பன்னுவதற்கில்லை//
ஜானகி அம்மா பாடின பாடலை நானும் வச்சிருக்கேன். ராஜாவின் குரலும் ரம்மியமானதே! ஆனா நடுவுல ராஜாவே கவிதை பாடுற மாதிரி வர்ற சரணம் நிறைய பேருக்கு பிடிக்கலை. உண்மைதான்.
//எப்பவும் எழுத்து எழுத்துன்னு யோசிப்பிங்களோ!//
சரியாப் போச்சு! ...எழுத்தாவது! நான் பொழுதுபோக்கிற்காக எழுதுபவன். உண்மையில் உக்கிரமான எழுத்து அதை தொழிலாய் கொண்டிருப்பவனிடமிருந்து தான் வரும். பாரதி, புதுமைப்பித்தன் போல.
//just for fun. Don't be mistaken me.//
நீங்க கும்மி அடிங்க.. சீரியஸாவது.. மண்ணாவது!
அந்த மாதிரி மேஸ்ரோவோட வாய்ஸ் புடிக்கதவங்க வரிசையில என்ன சேத்துடாதிங்க... அவரோட பல பாடல்களை உருகி உருகி கேட்டிருக்கேன். 1.பூம் பாறையில் போட்டும் வைத்த, 2. என்ன என்ன கனவு கண்டாயோ 3.ஜனனி ஜனனி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... "சங்கத்தில்" பாடலில் வரும் சங்கதியையும் சேர்த்து.
உக்கிரமான எழுத்துதான் எழுத்தா என்ன?
http://online-tamil-books.blogspot.com/2009/04/unmai-kalantha-naat-kurippu-muthulingam.html
அதிலுள்ள முத்துலிங்கத்தின் கதைகளைப் படித்து பாருங்கள்... இப்படியும் எழுத முடியும் என்பது தெரியும்! சம்பவத்தையே கதை போல கட்டுரையாக்குபவர்.
Post a Comment