மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

09-May-2009

எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்னை என்ன நினைப்பான்?

ஆங்கிலப் பதிவு ஒன்றினுக்கு இட்ட பின்னூட்டம் தான் கருப்பொருள். பதிவுலகமே அரசியல் பதிவேடாக மாறிவிட்ட இந்தத்தருணத்தில் நமது மனதில் உதயமாகும் எண்ணங்களையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரிவிக்கும் பொருட்டே இந்தப் பதிவு. பொதுவாகவே படிக்கும் பதிவுகளில் பாதிக்கு மேலே பின்னூட்டம் போடுவது எனது வழக்கம். தோழர் ஒருவர் ஆங்கில வலைப்பூ ஒன்றில் 'வாழ்க்கை மாற வாக்கை மாற்றுங்கள்' என்ற தலைப்பில் எழுதியிருந்தார். உரல் இதோ.
இதன் சரத்துகள் பின்வருமாறு:
* நான் ஆளும் கூட்டணியின் எதிர்ப்பாளன் என்பதை வெளிப்படையாக தெரிவித்துக்கொள்கிறேன்.
* ஊடகங்களின் சித்தரிப்புக்கு மாறாக காங்கிரஸ் ஒரு வேலைக்காவாத கட்சி என்பதையும், அதனை ஆட்சிப்பொறுப்பிலிருந்து வீசியெறிய வேண்டும் என்பதையும் முதலிலேயே தெளிவுபடுத்திவிடுகிறேன்.
* கோத்ராவை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கும் தொலைக்காட்சிகள் சீக்கிய படுகொலையை மறந்து விடுவது பொறுப்பின்மை, இன்னும் சொல்லப்போனால் பேடித்தனம். மோதியை ஹிட்லரைப் போல பாவிப்பதும் சிறுபிள்ளைத்தனமே.
* 10000 சீக்கிய சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டதை மறைத்து 800 இசுலாமிய அன்பர்கள் எரிந்ததை பெரிதாக்கிப் பேசுவது தொழில் தர்மமே அல்ல. குவாட்ரோச்சியை போஃபர்ஸ் வழக்கிலிருந்து விடுவித்ததற்கு தக்க பின்புலங்களும் விளக்கப்படவில்லை. கோத்ராவில் மரணமடைந்த 300 இந்துக்களும் மறக்கடிக்கப்படிருக்கிறார்கள்.
* காந்தஹார் விமானக் கடத்தலையும் மும்பை சம்பவத்தையும் ஒப்பிட்டு எது சரியான அணுகுமுறை என்று மதிப்புக்குரிய பொதுஜனமே தீர்மானிக்கட்டும். பொடா, யு.ஏ.பி.ஏ குழப்படிகளையும் நிகழ்த்திய இறையாண்மைமிக்க காங்கிரஸிடம் இன்னுமொரு முறை தலையைக் கொடுப்பது ஆபத்தானது.
* முடிவில் வாசகர்களும், பொதுமக்களும் இந்த ஊடகங்களின் அரைகுறை அழிச்சாட்டியங்களால் ஈர்க்கப்படாமல் சுயசிந்தனையோடு வாக்களித்து பாரத்ததில் மாற்றம் மலர வழி செய்வார்களாக
- என்று முடித்திருந்தார். இப்பதிவிற்கு எனது பின்னூட்டம் பின்வருமாறு:

எங்கு காணினும் டீக்கடை பெஞ்சுகளாய் பதிவுலகமும், ஒட்டுமொத்த இந்திய வலையுலகமும் ஆர அமர ஆத்திக்கொண்டிருப்பதால் கண்கள் இரண்டால் சுவாதியிடம் தஞ்சம் புகுந்திருக்கும் இந்த வேளையில் என் நண்பன் ஒருவனால் எனது தலையை நானே சுவரில் முட்டிக்கொள்கிறேன். கழிவறையில் தாளிட்டு ஒன்றுக்கு போகும் போது கூட அரசியல் அரட்டை அடிக்கும் அவனது சிலுமிஷம் எப்போது முடியும் என்று வழிமீது விழி வைத்து காத்திருக்கிறேன்.

//ஊடகங்கள் காங்கிரஸின் பணம் வாங்காத பிரச்சார மேடைகளாகிவிட்டன//
மண்ணாங்கட்டி. 'மரியாதை' படத்தை தரவிறக்கம் செய்ய க்யூவில் போட்டிருக்கிறேன். கேப்டன் எங்களை சொர்க்கலோகத்திற்கு இட்டுச் செல்வார்.

//மோதியை இசுலாமியர்களின் ஜென்ம விரோதி என்று ஊடகங்கள் தம்பட்டம் அடிக்கிகின்றன//
என்ன இழவோ! இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டுமென விரும்புகிறீர்கள் என்னை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் இவரது பெயரைத் தான் நான் பரிந்துரைப்பேன். இருப்பினும் நான் துதிக்கும் மந்திரம் என்னவோ 49-ஓ தான்.

//இந்த விஷயத்தில் ஐ.மு கூட்டணியை விட தே.மு கூட்டணி இன்னும் சிறப்பாகக் கையாண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்//
நிச்சயமாக, ஒவ்வொரு விஷயத்திலும். குறிப்பாக தமிழகத்திலும் அதைத் தாண்டியும் பற்றி எரியும் விஷயத்தில்.

//அனிருத் கணபதி கூறியதாவது:
Bloody hypocrites!//
இன்னும் தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்தவும். உதாரணங்களுக்கு செல்லவும்: http://youswear.com மேலும் விவரங்களுக்கு விக்கிபீடியாவின் அதிகாரப்பூர்வமான 'மெட்ராஸ் பாஷை' பக்கத்திற்கு செல்லவும்.

//அனிருத் ராமச்சந்திரன் கூறியதாவது:
அட.. ஆமாம்! மேலும், ஐ.மு கூட்டணி ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற கேந்திரங்களில் இட ஒதுக்கீட்டடினை உருவாக்கி அசுத்தம் செய்தார்களே என்பதை சொன்னேனா?//
சுத்த பேத்தல். இன்னும் சொல்லப்போனால், இட ஒதுக்கீட்டை நான் மிகத் தீர்க்கமாக வரவேற்கிறேன். 'அசுத்தம் செய்தல்' என்பது 'எவாளது' வாயிலிருந்து வரும் வார்த்தைகள் என்பதைப் பற்றி மௌனம் காப்பதே சாலச் சிறந்தது என்று நம்புகிறேன். மட்டுமின்றி, இது தொண்ணூற்றி ஒன்றாம் அணியிலிருக்கும் சி.பி.ஐ(எம்)-மின் பங்கு குடைச்சல்.

//இது 13ம் தேதிக்கு முன்னால் நான் எழுதும் கடைசி அரசியல் பதிவாக இருக்காது.//
தணிக்கை செய்யப்பட்ட சொற்களால் நிரம்பி வழியும் ஒரு ஆக்ரோஷமான பதிவினை எதிர்பார்க்கிறேன். ஆவன் செய்யவும். யாரேனும் டி.எம்.கே-வின் வயதில் மூத்தவரை ஆசை தீர திட்டுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன். ('எம்' என்பது சரும ரோமங்களைக் களைந்தெறியும் சவத்தபயல்களினைக் கேலி செய்ய பயன்படுத்தும் குறிச்சொல் ஆகும்)

பி.கு 1: அசல் இடுகையிலிருந்தும், பின்னூட்டத்திலிருந்தும் சில பகுதிகள் மாத்திரம் நீக்கப்பட்டுள்ளன.
சாய்ந்த எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பவை மட்டுமே எனது தனிப்பட்ட கருத்துகளாகும். பி.கு 2: இதில் எதையும் நீங்கள் உங்கள் கருத்துகளாக கொள்ள அவசியமில்லை. விமர்சனமோ, தங்களது பார்வையையோ சொல்வது போதுமானது. கருத்துத் திணிப்பு பயங்கரமான விளைவுகளைத் தரவல்லது.

____________________________________________________________

17 comments:

Nundhaa 9 May 2009 at 8:42 pm  

"மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்"

இதை நீங்களா எழுதினீர்கள் ... சரி யார் எழுதினால் என்ன ... அற்புதம் ...

அப்புறம் ... ”மேரே தேரே குஜ்ஜுக்குதிய்யா!” என்பது actually ... "மைனே தேரே துஜ்ஜுகோ தியா” என்றிருக்க வேண்டும் ... :)

Nundhaa 9 May 2009 at 8:48 pm  

on the way ... உங்கள் எதிர்வினைகளை ரசித்தேன் ...

வெங்கிராஜா 9 May 2009 at 9:46 pm  

நன்றிங்க.. எழுதுனது நானே தான்!
அது வந்துங்க.. நமக்கு ஹிந்தி அரைகுறையா தான் தெரியும்.. அண்ணல் கவுண்டமணி அப்படி சொல்றாப்லன்னு தான் நினைச்சேன்.. மாத்திடுறேன்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nundhaa 9 May 2009 at 10:30 pm  

வெங்கி ... sorry ... actually ... மைனே தில் துஜ்ஜுகோ தியா ... என்றிருக்க வேண்டும் ... இப்போது தான் பாடலை மீண்டும் கேட்டேன் ... Shri 420 என்ற படத்தில் raj kapoor (தயாரிப்பும் இயக்கமும் இவரே) மற்றும் nargis நடித்தது ... Mukesh, Lata Mangeshkar, Manna Dey, Asha Bhonsle, Mohammed Rafi - பாடகர்கள் ...

Nundhaa 9 May 2009 at 10:47 pm  
This comment has been removed by the author.
Nundhaa 9 May 2009 at 10:48 pm  

மீண்டும் சிந்தித்துப் பார்க்கையில் ... எதையும் மாற்ற வேண்டாம் ... மேரே தேரே துஜ்ஜுகோ தியா ... என்றே இருக்கட்டும் ... ஏனெனில் இது ... தங்கத் தலைவர் கவுண்டமணி ... கூறியதாயிற்றே ... :)

வெங்கிராஜா 9 May 2009 at 11:10 pm  

பாருங்க.. நம்மளை தலைவர் எவ்வளவு சிந்திக்க வைக்குறார்னு.. கவுண்டமணி ஒரு தீர்க்கதரிசி!

வால்பையன் 11 May 2009 at 7:24 pm  

நடக்கட்டும் நடக்கட்டும்!

aniramzee 13 May 2009 at 12:02 pm  
This comment has been removed by the author.
வெங்கிராஜா 13 May 2009 at 12:24 pm  

வருகைக்கு நன்றி வால் அண்ணே! பின்னூட்டத்துல ஏதோ உள்குத்து இருக்குறாப்ல இருக்குதுங்களே!

aniramzee 13 May 2009 at 12:31 pm  
This comment has been removed by the author.
aniramzee 13 May 2009 at 1:06 pm  
This comment has been removed by the author.
வெங்கிராஜா 13 May 2009 at 1:07 pm  

I say you're OC/FC and hence oppose reservation. Well I'm not economically backward either, but I oppose the very idea of yours for the obvious reason.

*It is not so easy to forge Community documents and cheat for seats, plus it really is very very less in the real scene too. On the other hand if you do it the other way round, there would be a lot of fakers which is worse.

*Only city bred half-baked people who missed IIT-NIT-IIM-AIIMS talk about all this bull!

*I actually observe that the oppression is far more ridiculous in North as well.

*Anywhere in India the sons of MooKas you refer to will be meek in comparison to the sons of millionaires faking to be beggars in the scheme you suggest.

*You mean to say poor people of the forward caste should be allowed in reservation barring rich people in SC/ST right? But it actually will go far more bitter. Reason- FC people even though poor will remain educated. Many many rich sons of the backward classes will remain uneducated. This is a fact, though it is stupid.

*Take 2008-2009s IIT-Madras' admission list and check the percentage of intake by caste. Tell me the number of SC people who entered without the quota. (I know the NIT-Trichy's archi list of our batch. There wasn't a single name outside the reservation)

Reservation MUST be based on caste, strictly. I can go on giving points but the sad fact that you were born to parents of OC/FC community will never make you understand the state of this country and *its people*.

aniramzee 13 May 2009 at 1:44 pm  
This comment has been removed by the author.
aniramzee 13 May 2009 at 1:49 pm  
This comment has been removed by the author.
வெங்கிராஜா 13 May 2009 at 6:43 pm  

//I hope my ranting on a blog hasn't deprived them any further.//

I've given you enough reasons why your theory of reservation isn't fair. Now when you don't have much of an argument in the cards, personal level attacks come up. Don't blame me again, that was a sidenote out of a frustrated post-explanation-repeated-irritation from your side. This line is the official confirmation. You can't be consoled. And about my anna univ thingy, I anyways didn't want there. P.S: My general ranking was 34 again, I could have got it instead of a OBC-R boosted 21.

aniramzee 14 May 2009 at 2:58 pm  

x

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP