மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

17-May-2009

வளைக்கரம்

16 வயதில் காகிதங்கள் சல்லிசாக கிடைத்த சந்தோஷத்திலும் வகுப்பில் ஓரளவுக்கு 'எலுத்துப்பிளையிண்ரி' தமிழ் எழுதத் தெரிந்த இறுமாப்பிலும் கவிதை என்று நினைத்து எழுதியது. மன்னித்தருள்க.

எத்தனையெத்தனையோ
உடைந்த வளையல்கள் நினைவுக்கு வருகின்றன...
கோலாட்டம் ஆடுகையில்
விழுந்துடைந்த தங்கையுடையது,
துணியலசுகையில்
அவிழ்ந்துடந்த வேலைக்காரியுடையது,
காற்றாடி விடுகையில்
கழன்றுகொண்ட அண்டைவீட்டுத்தோழியுடையது,
சீரியல் கிளிசரினில்
கரைந்துடைந்த பாட்டியுடையது,
எம்பிராயட்ரி போடுகையில்
வழுக்கிவிழுந்த மாமியுடையது,
பிரம்பெடுக்கையில்
நலிந்துபோன ஆசிரியையுடையது,
நான் மட்டும் பார்த்துரசிக்க
கலைடோஸ்கோப்புக்காக
விரும்பி மட்டும் கொடுக்கப்பட்ட
என் தாயினுடையது!

-22.9.06
_______________________________________________________________

10 comments:

Nundhaa 17 May 2009 at 7:36 pm  

not bad at all ... actually ... hmmm ... well ... taking into account that you wrote this at age 16 and you will be atleast 17 now ... "It's good" :)

வெங்கிராஜா 17 May 2009 at 9:05 pm  

வாங்க நந்தா...!
இப்போ 19 ஆயிருச்சு... இன்னும் ஒண்ணும் முன்னேறுனாப்ல தெரியலை.. எங்கனயாச்சும் ஏதாவது உருப்படியா பிடிபடும்ங்கிற ஒரே நம்பிக்கையில தான் எழுதிகிட்டு இருக்கேன். இது எல்லாம் 2006-ல வச்சிருந்த வலைப்பூ ஒண்ணுல எழுதினது! தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன்...

வால்பையன் 19 May 2009 at 1:16 pm  

16 வயசுலயே இப்படியா?

வெங்கிராஜா 19 May 2009 at 3:35 pm  

அப்போதிலிருந்தே மரண மொக்கையா-ன்னு கேக்குறீங்களாண்ணே?

தமிழ்ப்பறவை 20 May 2009 at 10:46 pm  

16 வயசுலேயே முதிர்ச்சி தெரிகின்றது.தங்களின் சமீபத்திய படைப்புகளைப் படிக்க வேண்டும்.

வெங்கிராஜா 20 May 2009 at 10:50 pm  

முதல் முறை வலைப்பூவுக்கு வருகை தந்ததற்கு நன்றி தமிழ்ப்பறவை.. பின்னூட்டம் புல்லரிக்க வைக்கிறது. ஹிஹி! நன்றி. சமீபத்திய படைப்புகளும் தளத்தில் இருக்கிறது.. அவசியம் விமர்சிக்கவும். மீண்டும் நன்றிகள்!

எம்.எம்.அப்துல்லா 21 May 2009 at 10:33 am  

அண்ணே உண்மையச் சொல்லுங்க‌ 16 வயசுலயா எழுதுனீங்க? என்ன சொல்லி பாராட்டுறதுன்னே புரியல‌.

வெங்கிராஜா 21 May 2009 at 11:21 am  

அண்ணா... வருகைக்கு நன்றி. தன்யனானேன்.
இப்போ 2-வது இயர்..(என்னைய போயி அண்ணன்-னு எல்லாம்...!) மூணு வருஷம் முன்னாடி மையம் (a.k.a TFM page) என்றொரு தளம் இருக்கிறதே தெரியுமா? அங்கு எழுதியது...

மீண்டும் வருக!

ஆதவா 22 May 2009 at 8:02 am  

நல்லா இருக்குங்க... பதினாறு வயசிலயா... நீங்களுமா??? இந்த பாழாய்ப்போன கவிதை உங்களையும் விட்டு வைக்கலையா?

பிரவின்ஸ்கா 14 June 2009 at 7:13 pm  

//நான் மட்டும் பார்த்துரசிக்க
கலைடோஸ்கோப்புக்காக
விரும்பி மட்டும் கொடுக்கப்பட்ட
என் தாயினுடையது //

ரொம்ப புடிச்சிருக்கு

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP