மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

22-May-2009

வெற்றுத்தாள்.

மை காய்ந்த பழைய பேனா
டிராயரின் அடியில் கிடந்தது
நொடியில் தோன்றிய கவிதை ஒன்றை
மறப்பதற்குள்ளாக எழுத முனைந்து
கிறுக்கிப் பார்த்தும் எழுதவில்லை
குலுக்கிய விசையில் தெறித்த துளிகளில்
ஒளிந்துகொண்டிருக்கிறது என் கவிதை.
______________________________________________________________

15 comments:

கடைக்குட்டி 22 May 2009 at 7:22 pm  

நல்லா இருக்குங்க வார்த்தைப் ப்ரயோகம்

கடைக்குட்டி 22 May 2009 at 7:30 pm  

//உங்களுக்கு புடிச்சா ஓட்டுப் போடுங்க... புடிக்காட்டியும் ஓட்டுப் போடுங்க..
நீங்க படிச்சா மட்டும் போதும்......நீங்க படிச்சா மட்டும் போதும்....
//

என்னுடைய பழைய பதிவுகளில் நான் இப்பிடி போடுவேன் :-)

வால்பையன் 22 May 2009 at 8:06 pm  

கண்டுபிடிச்சி எடுத்துட்டு வாங்க
நல்லாயிருக்குன்னு பின்னூட்டம் போடுறேன்!

அம்புட்டு அப்பாவி நான்!

வெங்கிராஜா 22 May 2009 at 9:08 pm  

கடைக்குட்டி.. பாராட்டுக்கு நன்றி.. வலைப்பூவை ஃபாலோ பண்றதுக்கு ரொம்ப நன்றி!
வால் அண்ணே.. நீங்க அப்பாவியா?!

ஆதவா 22 May 2009 at 9:57 pm  

எனக்கு இந்தமாதிரி கவிதைகளைப் பற்றிய கவிதைகள் ரொம்ப பிடிக்கும்!!!! ரொம்ப நல்லா இருக்குங்க வெங்கிராஜா. இந்த கவிதையை இன்னும் கொஞ்சம் நீட்டி எழுதியிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்,. சட்டுனு வெட்டினமாதிரி இருந்தாலும் பிரமாதமா இருக்கு!!!!

வாழ்த்துக்கள்!!!!

vicki 23 May 2009 at 10:48 am  

adade!

nalla kavidhai
vivasaayi

வெங்கிராஜா 23 May 2009 at 11:09 am  

வருக ஆதவா.. ஆலோசனைக்கு நன்றி. ஒரு நொடியில் நிகழும் நிகழ்ச்சியை விவரித்துவிட்டு, அனுபவத்தின் பயனாய் நிகழும் ரசததிரந்தத்தை வாசகனின் கற்பனைக்கு அனுகூலமாக்குவதே தேவலை-னு பட்டுது. இன்னமும் உங்கள் 'கடவுளைக் கொல்லுதல்' கவிதை ஓடிக்கொண்டிருக்கிறது மனத்திரையில். அண்ணன் மாதவராஜ் கூட எழுதியிருக்கிறார். செம!

நன்றி விவசாயி அண்ணே. அடிக்கடி இங்கு சந்திக்கவும்.. (உங்க ப்ளாக் என்னாச்சு?)

தீப்பெட்டி 23 May 2009 at 9:03 pm  

நல்லாயிருக்கு வெங்கி...

Nundhaa 25 May 2009 at 3:37 pm  

nice

வெங்கிராஜா 25 May 2009 at 8:09 pm  

நன்றி நந்தா... நன்றி தீப்பெட்டி!

Anonymous 26 May 2009 at 8:10 am  


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

வசந்த் ஆதிமூலம் 28 May 2009 at 12:50 am  

வாழ்த்துக்கள்!

$anjaiGandh! 29 May 2009 at 10:06 am  

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. என் ப்ளாக்ல வாரா வாரம் கவிதைப் போட்டி நடக்குது.கலந்துக்கலாமே.

வெங்கிராஜா 29 May 2009 at 10:37 am  

சஞ்சய் காந்தி! வாங்கண்ணே... நிச்சயம் கலந்துக்கறேன். வருகைக்கும், அழைப்புக்கும், ஃபாலோ செய்வதற்கும் மிக்க நன்றி!
வசந்த் ஆதிமூலம்.. நன்றிகள்!

பிரவின்ஸ்கா 14 June 2009 at 7:14 pm  

அருமை

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP