மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

31-May-2009

மீன், பறவை, குதிரை மற்றும் சில

பூச்சிகளின்
ரம்மியமான உலகத்தில்
மனிதர்கள் அருவருப்பானவைகள்.

திரியில் மரணம்
வாலில் பிரசவம்
மெழுகுவர்த்தி.

தொட்டி மீனுக்கு
பருவமழை
வேண்டாம்.

மலையிலிருந்து
போட்டால் விழாது -
பறவை.

கால் உடைந்தாலும்
ஓடும் குதிரை -
இரங்கராட்டினம்.

______________________________________________________________

20 comments:

தீப்பெட்டி 31 May 2009 at 9:11 pm  

//திரியில் மரணம்
வாலில் பிரசவம்
மெழுகுவர்த்தி//


பிரமாதம் வெங்கி..

Nundhaa 31 May 2009 at 9:12 pm  

நன்றாக இருக்கிறது வெங்கி ... The fish in the sea is not thirsty என்ற ஓஷோவின் புத்தகமும், ஒரு fantasy திரைப்படத்தின் ஒரு காட்சியும் (படப் பெயர் நினைவில் இல்லை - காட்சி மட்டும் கிட்டதட்ட இதை ஒத்து இருக்கும் - கதாநாயகி இரவில் மனுஷியாகவும் பகலில் பறவையாகும் மாறுவாள், கதாநாயகன் இரவில் ஓநாயாகவும் பகலில் மனிதனாகவும் மாறுவான்) evocative-ஆக என் நினைவிற்கு வருகின்றன - உங்கல் 2 & 3 கவிதைகளைப் படித்ததும் ...

தமிழினி 31 May 2009 at 9:27 pm  

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

vinoth gowtham 31 May 2009 at 9:28 pm  

நல்லா இருக்குப்பா..

கவிக்கிழவன் 31 May 2009 at 11:09 pm  

இலங்கையில் இருந்து யாதவன்

உங்கள் படைப்பு நன்றாக உள்ளது
அருமையான வரிகள்

அ.மு.செய்யது 31 May 2009 at 11:53 pm  

எதை மேற்கோள் காட்டுவது என்றே தெரியவில்லை.

அனைத்து ஹைக்கூக்களும் அருமை.

வித்தியாசமான ஆக்கம் வெங்கி சார்..

ஆதவா 1 June 2009 at 10:29 am  

எனக்கு ஹைக்கூக்களில் அவ்வளவு பரிச்சயமில்லை. எனினும் உங்கள் கவிதைகள் நன்றாகவே வந்துள்ளன. குறிப்பாக முதல் கவிதை ரொம்பவும் பிடித்திருக்கிறது!!!

வெங்கிராஜா 1 June 2009 at 11:18 am  

தீப்பெட்டி, நந்தா, தமிழினி, வினோத், கவிக்கிழவன், செய்யது, ஆதவா.. அனைவரின் கடமை உணர்ச்சி கண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். நேத்து போட்ட பதிவுக்கு அதுக்குள்ள 7 பின்னூட்டமா? நன்றி... நன்றி!

MayVee 1 June 2009 at 3:13 pm  

arumai

meena 1 June 2009 at 3:16 pm  

நல்ல கவிதைகள்...
அற்புதமான சிந்தனை அண்ணா...

KISHORE 1 June 2009 at 7:33 pm  

really good

Anonymous 1 June 2009 at 7:54 pm  

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

நன்றி
தமிழ்ர்ஸ்

வெங்கிராஜா 1 June 2009 at 11:41 pm  

மே வீ: நன்றி. உங்க டிஸ்ப்ளே படம் அட்டகாசம்!
நன்றி மீனா.. வாடா போடா என்றே கூப்பிடலாம்.. எதற்கு அந்நியப்படணும்?
தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி கிஷோர்!
முதல் பக்கத்தில் இட்டு உதவி புரியும் தமிழர்ஸ் திரட்டிக்கும் நன்றிகள் பல!

Suresh 2 June 2009 at 5:14 pm  

வோட்டு போட்டாச்சு..

கவிதை பிராமதம் தலைவா

/மலையிலிருந்து
போட்டால் விழாது -
பறவை.//

ஹா அழகு

திரியில் மரணம்
வாலில் பிரசவம்
மெழுகுவர்த்தி.

Anonymous 5 June 2009 at 11:28 am  

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்

Karthikeyan G 5 June 2009 at 9:19 pm  

Super!! நன்னா இருக்கு..

வெங்கிராஜா 6 June 2009 at 12:27 am  

வருக கார்த்திகேயன்ஜி, வருக சுரேஷ்!
நன்றிகள் பல!
:D

ஷண்முகப்ரியன் 11 June 2009 at 8:59 pm  

உங்கள் அனைத்துக் கவிதைகளுமே’the'கவிதைகள்,வெங்கி.வாழ்த்துகள்.

பிரவின்ஸ்கா 14 June 2009 at 7:16 pm  

கவிதை நன்றாக இருக்கிறது .
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

சேரல் 16 July 2009 at 11:02 am  

//திரியில் மரணம்
வாலில் பிரசவம்
மெழுகுவர்த்தி.

தொட்டி மீனுக்கு
பருவமழை
வேண்டாம்.

மலையிலிருந்து
போட்டால் விழாது -
பறவை.
//

Fantastic!

-priyamudan
sEral

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP