மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

08-Jun-2009

07.06.2009 படமும், பதிவர் சந்திப்பும்.

அதிகம் பேசாத குறுகிய வட்டங்களுக்குள் புழங்கும் 'ரிசர்வ்ட்' ரகத்தைச் சேர்ந்தவன் நான் . எனினும் புதிதாக கிடைத்த பதிவர் வட்டத்துக்குள் நுழைந்தது யோகம் தான். மார்ச் 30லிருந்து தான் ஆக்டிவ்-வாக பதிவுலகில் செயல்பட்டு வருகிறேன். வயதும் ஞானமும் இவர்களின் அலைவரிசையின் அருகில் கூட இல்லை. அத்தனை பேரும் திடமான வேலையில் இருப்பவர்கள், என்னைப்போல இரண்டு மடங்கு அனுபவத்தை சம்பாதித்து வைத்திருப்பவர்கள். இரண்டொரு பின்னூட்டம், சிலபல மின்னஞ்சலகள்... இதற்குள்ளேயே தங்களது குழாமில் என்னையும் சேர்த்துக்கொண்டு "டீ சாப்பிட்டாச்சா?" என்று அக்கறையோடு விசாரித்த அண்ணன்மார்கள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் நேற்று மதிப்புக்குரிய அண்ணன் சிவராமன் அவர்கள் ஆழ்வார்பேட்டையில் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு/ உலக சினிமா அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அண்ணாச்சி ஆசிப் மீரான், சூப்பர்ஸ்டார் லக்கிலுக், அன்பு அதிஷா, அருமை நண்பர் முரளிகண்ணன், பாஸ் நர்சிம், சினிமா தகவல் பெட்டகம் வண்ணத்துப்பூச்சியார், புன்முறுவல் பூத்த கேபிள் சங்கர், கவிஞர் யாத்ரா, பிரவின்ஸ்கா, அகநாழிகை 'பொன்' வாசுதேவன் சார், தண்டோரா, அக்னிப்பார்வை, கேமராவும் கையுமாய் இருந்த ஜாக்கி சேகர் எனப் பலரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. என்னை இது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு வரவழைத்து மட்டுமில்லாமல் வழியனுப்பியும் வைத்த அண்ணன் சிவராமன் அவர்களுக்கு அத்தனை நன்றிகளும் உரித்தாகுக.

படத்தைப்பற்றி நான் அதிகம் சொல்ல அவசியமே இல்லை. இருந்தாலும்... (அவ்வளவு லேசில் தப்பிக்க முடியாது)
* கிம் கி டுக் ஒரு கிறிஸ்துவர். இத்தனை அழகாக புத்தமத கோட்பாடுகளை அவர் எடுத்துரைத்த பராக்கிரமம் பிரமிக்க வைக்கிறது.
* இந்த உரலைத் தொடர்ந்தால் படத்தின் ஜென்/ பௌத்த சித்தாந்தங்கள் இன்னும் தெளிவாக புரியும்
.
* ஓவியம், சிற்பம், தற்காப்பு, இசை என பல்வித கலை வடிவங்களை ஒருங்கிணைத்த விதம்- பயன்படுத்தப்படும் வண்ணங்களே படத்தின் பெரும் பலம்.
* கட்டிடக்கலையில் கதைக்கும் Symmetry, Axiality, Tangentiality, Unity, Flow, Focus, Proportion இன்னபிற குறிகள் திரைக்கதையில் வியாபிக்கும் அழகு.
* ராம நாராயணன் போன்றவர்கள் எப்படி விலங்குகளைப் பாத்திரமாக்குவது என்று பார்த்து தெளிய வேண்டிய படம்.
________________________________________________________________________

14 comments:

Nundhaa 8 June 2009 at 5:02 pm  

//

அதிகம் பேசாத குறுகிய வட்டங்களுக்குள் புழங்கும் 'ரிசர்வ்ட்' ரகத்தைச் சேர்ந்தவன் நான் . எனினும் புதிதாக கிடைத்த பதிவர் வட்டத்துக்குள் நுழைந்தது யோகம் தான்.

//

- ரசித்தேன் ... தவிர இந்தப் படத்தை பற்றிய உங்கள் பார்வை எளிமையாக, அருமையாக இருந்தது ... by the way I liked the photo you have presented in PIT June 2009 contest that symbolises the aged ...

"அகநாழிகை" 8 June 2009 at 5:39 pm  

அன்பு வெங்கி,
அழகாக பதிவிட்டுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

வெங்கிராஜா 8 June 2009 at 7:15 pm  

நன்றி நந்தா! பார்ப்போம்.. மாத இறுதியில சாதகமான அறிவிப்பு வருதான்னு...!
அகனாழிகை சார்... வலைச்சரத்திற்கு வாழ்த்துகள்! உங்களை சந்தித்ததிலும் மகிழ்ச்சி!

அ.மு.செய்யது 9 June 2009 at 12:24 am  

அருமையான பதிவு.

பதிவர் சந்திப்புகளை நான் தாங்க மிஸ் பண்றேன்.

yathra 9 June 2009 at 1:24 am  

அன்பு வெங்கி, உங்களை நேற்று சந்தித்ததில் மிகவும் மிகழ்ச்சி. மிக அருமையாக நிகழ்வை பதிவு செய்திருக்கிறீர்கள்.

கடைக்குட்டி 9 June 2009 at 11:59 am  

இவ்வளவு ஓட்டுப் பட்டையா???

லோட் ஆகுறதுக்குள்ள தாவு தீந்துடுது பாஸூ...

லக்கிலுக் 9 June 2009 at 1:19 pm  

//ராம நாராயணன் போன்றவர்கள் எப்படி விலங்குகளைப் பாத்திரமாக்குவது என்று பார்த்து தெளிய வேண்டிய படம்.
_________________________//

வாவ். சூப்பர் :-)

வால்பையன் 9 June 2009 at 7:06 pm  

ஓட்டு போட்டாச்சு!

ஆ.முத்துராமலிங்கம் 9 June 2009 at 7:08 pm  

நல்ல பதவு! அடுத்த தடவை நானும் களந்து கொள்ளனும்!!

வெங்கிராஜா 9 June 2009 at 11:08 pm  

லக்கி அண்ணனின் பின்னூட்டமா! லக்கி டே! :))))
நன்றிகல் வால் அண்ணே!
முத்துராமலிங்கம்... அவசியம் வாங்க.. நல்ல அனுபவமா இருந்துச்சு!

வெங்கிராஜா 9 June 2009 at 11:10 pm  

செய்யது... அமீரகமா?
நன்றி யாத்ரா... பாக்கியம் செய்தவன் நானே!
கடைக்குட்டி... கொஞ்சமா அவகாசம் குடுங்க... சரி செய்திடுறேன்..

jackiesekar 11 June 2009 at 11:39 am  

உண்மையில் உங்கள் எழுத்து என்னை வசிகரித்து விட்டது உடனே பாலோயர் ஆகி விட்டேன் ,பாத்து பேசி இருக்கின்றீர்கள் ஆனால் முகம் நினைவில் இல்லை வெங்கி...
வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் 11 June 2009 at 12:14 pm  

எளிமையான ஆனால் அருமையான பதிவு.

இவன் 12 June 2009 at 8:27 am  

ஓட்டு போட்டாச்சு... படத்தையும் கூடிய சீக்கிரமே பார்க்கிறேன்

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP