மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

04-Jun-2009

32 கேள்விகள்

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
வெங்கடேஷ் தான் இயற்பெயர், மொத மொத ஈ-மெயில் ஐ.டி-காக தேடும் போது ஒரு பேர்லயும் சிக்கல... வேற வழியே இல்லாம இந்த பேர்ல ஐ.டி சிக்குச்சு. அப்படியே இதுவே வசதியா போச்சு.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
சரியாக ஞாபகமில்லை. ஏதோ சண்டையில் அம்மா பேசாமல் இருந்த போது என்று நினைக்கிறேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ஹை ஸ்கூலுக்கு முன்னாடி பிடிச்சிருந்துச்சு. இப்பொல்லாம் எழுதறதே இல்ல... நம்ம படிப்பும் அதுக்கேத்தாப்ல வரையுறது மட்டுந்தேன்...

4.பிடித்த மதிய உணவு என்ன?
தலை வாழை இலையில் வரிசையாக பரிமாறப்படும் விருந்து சாப்பாடு. மணிப்பாலில் கிடைக்கும் சப்பாத்தி இன்னும் நினப்புலயே இருக்குது. ஒரு மாசத்து லீவுல ஆசை தீர சாப்பிட்டுக்கணும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
வயதையும், பாலையும் பொறுத்தது.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளிப்பதே பிடிக்காது. சாங்கியத்துக்கு தான் குளியலெல்லாம். ஆனாலும், பல நாள் கழிச்சு வேலை எதுவும் இல்லாதப்ப பக்கத்து பீச்சுல போய் விளையாடிட்டு, குளிச்சுட்டு மணிக்கணக்கா வந்து ஷவர்லயோ டப்லயோ குளிக்க பிடிக்கும். இதுலயே நாளெல்லாம் போயிரும். செம கெத்து!

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள், பேச்சு.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த: பெரிதாக ஒன்றுமில்லை. திடீரென்று ஏதாச்சும் 'மேட்டர்' பிடிச்சுப்போய் ஈர்க்கப்பட்டு கொஞ்ச நாள் வெறிபிடிச்ச மாதிரி அதுவே கதியா இருப்பேன். அந்த கவனம்.
பிடிக்காதது: எதிர்பார்த்தது தான். கவனம் நிக்காது. சீக்கிரமே கலைஞ்சுரும்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
-பாஸ்-

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மாவும், தங்கையும்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
சிகப்பு சட்டை, வெளிர் மஞ்சள் நிறக் குழாய்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கிட்டத்தெட்ட ஏழு மாசம் கழிச்சு வந்து பார்க்கையில் வீட்டில் இருக்கும் சின்ன சின்ன பொருட்களின் சப்தங்கள், விந்தைகள்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம்.

14.பிடித்த மணம்?
மாவு மில்லில் மிளகாய்ப் பொடி, பெட்ரோல், வெல்டிங் யார்டில் கருகும் உலோகம், ரொம்ப புதிய/ பழைய புத்தகத்தை திறக்கையில் எழும் வாசம்... இப்படி வியர்ட் ஃப்ராக்ரன்சஸ்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
ஜோ: வலைப்பக்கங்களுக்கு வருவதற்கு முன்னரே பரிச்சயமானவர். சிறப்பாக காரணங்கள் என்று ஏதுமில்லை.
மண் குதிரை: எப்போதும் கவிதை எழுதிக்கொண்டிருக்கும் இவரை கொஞ்சம் உரைநடையில் ரசிக்க வேண்டி.
எம்.பி.உதயசூரியன்: இவரது அடுக்குமொழிக்கும், அடைமொழிகளுக்கும் பரம் ரசிகன் நான்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அழைக்க எண்ணிய ஹாலிவுட் பாலாவின் அனைத்து விமர்சனங்களும், குறிப்பாக ஃபுல் மெட்டல் ஜேக்கட்.
தீப்பெட்டியின் வலைப்பூ பறிபோனதென்று கேள்விப்பட்டேன். இப்போது புதிதாக தொடங்கியிருக்கும் பதிவேட்டில் மழை களவாடிய முத்தம்.

17. பிடித்த விளையாட்டு?
கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் - பார்க்க.
கேரம் - விளையாட.

18.கண்ணாடி அணிபவரா?
ஆம்.

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
என்னுடைய மொழி, நிலம் பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவனுக்கு காட்டுகையில், அவனை என்னுடைய அடையாளங்களைக் கண்டுகொள்ளச் செய்கிற, ரசிக்க வைக்கிற படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
ஆண்பாவம்.

21.பிடித்த பருவ காலம் எது?
அவ்வளவு முதிர்ச்சியெல்லாம் இன்னும் வரலைங்க.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
கொஞ்ச நாளா ஒண்ணும் படிக்கலை. பல நாளா படிக்காம இருக்குற நாளை மற்றுமொரு நாளே, சில தி.ஜா புத்தகமெல்லாம் வாசிக்கலாம்னு இருக்கேன்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அடிக்கடி. கடைசியா பார்த்த படத்தோட டி.வி.டி கவர்கள்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்: வேறென்ன யுவதிகளின் சிணுங்கல்கள் தான்.
பிடிக்காத சத்தம்: இம்சைக்குரிய காலர் ட்யூன்கள்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கடைசியா சுத்திட்டு வந்த கோவா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ம்ஹூம்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
செய்யாத தவறுக்கு பழி சுமத்தப்பட்டு மன்னிப்பும் கேட்க வேண்டிய ஒரு தருணம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சோம்பேறித்தனம், அவ்வப்போது வெளிப்படும் 'பெர்வெர்ட்டட்' எண்ணங்கள்.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
கொடைக்கானல்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
அப்படியெல்லாம் திட்டமிட்டு, ஆசைப்பட்டு வாழ்பவனல்ல... போகிற போக்கில் வாழ்க்கையின் சக்கரை நிமிடங்களை சுகிக்க விரும்புபவன்.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
-பாஸ்-

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அவ்வளவு ஜாஸ்தியெல்லாம் வாழ்ந்து கிழிக்கல.
______________________________________________________________

14 comments:

ஆதவா 4 June 2009 at 12:53 pm  

நல்ல பதில்கள் வெங்கிராஜா. இன்னும் இளமையின் கறைகள் நீங்காத பருவத்தில் நீங்கள் (நானும்) சிறப்பான பதில்கள்!!

பல்ப் ஃபிக்ஸன் பார்த்தீங்களா... ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான் நான் பார்த்தேன். ஸ்க்ரீன்ப்ளே ஓகே.. ஓவரால் எனக்குப் பிடிக்கலை! குறிப்பா, நான் ரொம்பவும் எதிர்பார்த்த, உமா, படம் முழுக்க வரவில்லை!

வாழ்த்துகள்

கார்க்கி 4 June 2009 at 12:54 pm  

/தலை வாழை இலையில் வரிசையாக பரிமாறப்படும் விருந்து சாப்பாடு//

ரைட்டு.. அவரா நீங்க?

தீப்பெட்டி 4 June 2009 at 1:07 pm  

பதில்கள் அருமை வெங்கி..
ரொம்ப இயல்பா இருந்தது..

//என்னுடைய மொழி, நிலம் பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவனுக்கு காட்டுகையில், அவனை என்னுடைய அடையாளங்களைக் கண்டுகொள்ளச் செய்கிற, ரசிக்க வைக்கிற படங்கள்//

இதுதான் வெங்கி...

( வழக்கம் போல நக்கல்னு நினைக்க வேண்டாம் ;)

வெங்கிராஜா 4 June 2009 at 2:23 pm  

//பல்ப் ஃபிக்ஸன் பார்த்தீங்களா... ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான் நான் பார்த்தேன். ஸ்க்ரீன்ப்ளே ஓகே.. ஓவரால் எனக்குப் பிடிக்கலை! குறிப்பா, நான் ரொம்பவும் எதிர்பார்த்த, உமா, படம் முழுக்க வரவில்லை!//

பல்ப் ஃபிக்ஷனைப் பற்றி பதிவெழுதலாம்-னு நெனைச்சேன். (ஆங்கிலப் படங்களில் மிக அதிகம் முறை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று) சில படங்களுடன் நாம் பழகவேண்டும் என்பார்கள். இது அந்த ரகம். படத்தின் போஸ்டர்/ டி.வி.டி கவரை பாருங்களேன்... க்ளாஸ்! அண்ணன் பாலா, அன்பு முரளிக்கண்ணன், தல கேபிள் எல்லாரும் களத்துல தீவிரமா இருக்க நம்ம ஏன் காலை உடணும்னு இன்னும் தள்ளி போட்டுகிட்டு இருக்கேன். இப்பதான் சினிமா பார்க்கவே ஆரம்பிச்சிருக்கேன்.. அதுக்குள்ள எதுக்கு அதெல்லாம்னும் ஒரு எண்ணம்...

வெங்கிராஜா 4 June 2009 at 2:23 pm  

//
/தலை வாழை இலையில் வரிசையாக பரிமாறப்படும் விருந்து சாப்பாடு//

ரைட்டு.. அவரா நீங்க?
//

வாங்க கார்க்கி! என்ன செய்யுறது. பந்தாடப்படும் வாழ்க்கை. நீங்க ஆந்திரா, நான் கர்நாடகம்.

வெங்கிராஜா 4 June 2009 at 2:24 pm  

//இதுதான் வெங்கி...//
நன்றி தீப்பெட்டி. சாதாரண கருத்து தானே, அதுதானே கலையின் சாரமே? நம்மால் நெரூதாவின் கவிதையையும், பிக்காசோவின் ஓவியத்தையும் அதனால் தானே பிடிக்கிறது?

//( வழக்கம் போல நக்கல்னு நினைக்க வேண்டாம் ;)//
அடப்பாவிகளா?! இத்தனை நாளா பின்னூட்டினதெல்லாம் நக்கலா?

Suresh 4 June 2009 at 5:27 pm  

நேர்மையான அழகான பதிலகள் நண்பா :-)

உங்களை பற்றி இன்னும் அறிந்து கொள்ள உதவியது நன்றி நட்புடன் சுரேஷ்

Suresh 4 June 2009 at 5:27 pm  

//மாவு மில்லில் மிளகாய்ப் பொடி, பெட்ரோல், வெல்டிங் யார்டில் கருகும் உலோகம், ரொம்ப புதிய/ பழைய புத்தகத்தை திறக்கையில் எழும் வாசம்... இப்படி வியர்ட் ஃப்ராக்ரன்சஸ்.
/

நல்ல ரசனை

Suresh 4 June 2009 at 5:28 pm  

//பிடிக்காத சத்தம்: இம்சைக்குரிய காலர் ட்யூன்கள்
/

ஹா ஹா :-)

vinoth gowtham 4 June 2009 at 7:57 pm  

Super..Venki..

வெங்கிராஜா 4 June 2009 at 9:09 pm  

//நல்ல ரசனை//
ரசனையாவது... மிளகாய்ப்பொடிக்கும் ரசனைக்கும் எங்கருந்துங்க சம்மந்தம் வந்துச்சு... எல்லாம் அப்படியே வர்றது தான்.. சில நேரத்துல காசு குடுத்தெல்லாம் பெட்ரோல் வாங்கி நுகர்ந்து பார்த்திருக்கேன்... மாவு மில்லுக்கு சின்ன வயசிலிருந்தே அம்மா கூட போய்ட்டு வர்றதுண்டு...

வெங்கிராஜா 4 June 2009 at 9:11 pm  

Much obliged Vinoth.. Very welcome! :D

பித்தன் 5 June 2009 at 6:45 pm  

//19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
என்னுடைய மொழி, நிலம் பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவனுக்கு காட்டுகையில், அவனை என்னுடைய அடையாளங்களைக் கண்டுகொள்ளச் செய்கிற, ரசிக்க வைக்கிற படங்கள்.//

அருமை

வெங்கிராஜா 6 June 2009 at 12:33 am  

வாங்க பித்தன். அதுதானே கலையின் அற்புதமே!

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP