மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

16-Jun-2009

அவளும் அவள் சார்ந்தவையும்


டை
யா

வரிகள்.

உன்னை எட்டாவது அதிசயம் என்றெல்லாம் வருணிக்கமாட்டேன், எனக்கு ஏழேழு அதிசயமும் நீதான்!

நீ அடித்துக்கொல்லும் கொசுக்களைவிட நான் துரதிர்ஷ்டசாலி, உன் விரல்நுனிகூட என் மேல் படமாடேன் என்கிறதே!

நிலவின் நிழல் எங்கே விழுகிறது என்று கண்டுகொண்டேன் - உன் காலடியில்!

ஓவியக்கண்காட்சிக்கு உன்னை அழைத்துச்செல்லத் தேவையில்லை, உன் வீட்டில் தான் கண்ணாடி இருக்கிறதே!

நான் அனுமனைப்போல நெஞ்சைக்கிழிக்க மாட்டேன், ஒருவேளை நீ கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டால்?

நெருப்பு வைக்க வைக்க மணம்பரப்பும் ஊதுபத்தியைப்போல காதலால் என்னை நீ துன்புறுத்த துன்புறுத்த தெறிக்கின்றன கவிதைகள்!

தயவுசெய்து ஓட்டப்பந்தயம் பார்க்கப் போய்விடாதே, வீரர்கள் எல்லாரும் இலக்கை விட்டுவிட்டு உன்னை நோக்கி ஓடிவந்துவிடுவார்கள்!

உன் உடலில் எங்கே தித்திப்பு இருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கையில், நான் அதைப்பருகிவிட்டதால் என்னைக் கொட்டுகிறது தேனீ!

இரண்டு கனிமங்கள் இணைகயில் மறைந்து போகின்றன இரண்டுமே, உருவாகிறது ஒரு புதிய கனிமம் - நம் கண்களையும் காதலையும் போல!

நான் கவிதைகள் எழுதுவது இவர்களெல்லாம் இரசிப்பதற்காக அல்ல,தப்பித்தவறியாவது அவை உன் விழியில் விழுந்து "அட!" என்று சொல்லமாட்டாயா என்ற நப்பாசையில் தான்!
________________________________________________________________

11 comments:

தமிழினி 16 June 2009 at 6:53 pm  

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

அக்னி பார்வை 16 June 2009 at 7:18 pm  

//உன்னை எட்டாவது அதிசயம் என்றெல்லாம் வருணிக்கமாட்டேன், எனக்கு ஏழேழு அதிசயமும் நீதான்! ///

சூப்பர்

ச.முத்துவேல் 16 June 2009 at 9:53 pm  

/நான் அனுமனைப்போல நெஞ்சைக்கிழிக்க மாட்டேன், ஒருவேளை நீ கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டால்?/

சர்தான் peakல இருக்கீங்கபோல. நல்லாயிருங்க.

வெங்கிராஜா 17 June 2009 at 11:37 am  

//சர்தான் peakல இருக்கீங்கபோல. நல்லாயிருங்க.//

ஹிஹி... ஒரு வேகத்துல எழுதிப்புட்டேன்!

நன்றி அக்னிப்பார்வை மற்றும் தமிழினி!

வசந்த் ஆதிமூலம் 17 June 2009 at 12:27 pm  

பின்தொடருபவனின் வாழ்த்துகள்.

வெங்கிராஜா 17 June 2009 at 12:54 pm  

//பின்தொடருபவனின் வாழ்த்துகள்.//

அய்யய்யோ.. அப்படியெல்லாம் இல்லைங்க சார்.. அம்மணி யாரும் இன்னும் சிக்கல...

வால்பையன் 17 June 2009 at 1:49 pm  

ஓட்டு போட்டாச்சு தலைவா

வால்பையன் 17 June 2009 at 1:51 pm  

அப்படியே அதை தூக்கிட்டு பிடிச்சாலும் பிடிக்காட்டியும் பின்னூட்டம் போடுங்கன்னு வையுங்க!

வம்பு விஜய் 17 June 2009 at 6:37 pm  

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

தீப்பெட்டி 18 June 2009 at 6:23 pm  

கார்க்கி பதிவ ரொம்ப படிச்சீங்கன்னா இப்படித்தான்..

வெங்கிராஜா 18 June 2009 at 6:31 pm  

ஹிஹி... அவரு இதுலயே ஊறுனவரு சகா... அப்படி சாதாரணமா என்னையெல்லாம் வச்சு அவர கோவிக்க வைக்காதீங்க... இதெல்லாம் சும்மா.. சர்ஃபேஸ், ஷேலோ.
திருத்தியாச்சு வால் அண்ணே!
விஜய், இப்படி காப்பி-பேஸ்ட் பின்னூட்டங்கள் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்று அன்போடு எச்சரிக்கிறேன். வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP