மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

29-Jun-2009

ஆப்பிள்


வார்த்தைகள் அர்த்தமற்று போய்விட்ட வனாந்திரத்தில் நான் அமர்ந்திருக்கும் அமிர்த வேளையில் நேரம் ஒரு பொருட்டே அல்ல. எனது ஜீவனற்ற உடலைத் தின்றுகொண்டிருக்கும் தாபத்தை வீழ்த்தும் உனது மோகக்கணை என் விமோசனக் கனியை குறிபார்க்க வல்லதா? வீறு கொண்டு எழும் காமமெனும் விலங்கு வீரியமானதொரு ஆயுதம் என்ற நம்பிக்கையில் ருத்ரானந்த தாண்டவத்தில் நாம் இணையவோமாக.
உனது ஸ்பரிசம் எனது மேனி முழுவதையும் ஆக்கிரமிக்கிறது. தந்தியடிக்கும் உதடுகளை விழுங்கும் உனது வாய் வழியாக நமது அடிப்படை திரவியங்கள் உடல்களிருந்து வெளியேறி நமது ஆதிக்கூறுகளின் தோல் போர்த்திக்கொண்டு வெப்பம் காய்கின்றது. நம் நடன அரங்கேற்றத்தின் முத்திரைகளுக்கு ஜதி சொல்வதும் நாமே தான். நெற்றியில் தாரையாய்ப் பெருகும் வியர்வையினூடே அக்குளிர் சாகடிக்கப்படும் அதே வேளையில் எனது பாதங்களை ஏந்தும் உனது வளமான தோள்கள் குளிரை உயிர்ப்பிக்கின்றன. ஆகம நெறிகளின் தாள்களைத் தகர்த்தெறிந்து கூடலது மோகமொழி வசனகவிதையென சப்தம் எழுப்புகிறது. மகரந்தம் சிந்திக்கொண்டேயிருக்க உயிரின் மெல்லிய மலரிதழ் விரிந்து விரிந்து மூடுகிறது. இசை வடிவமொன்றின் நேர்த்தியில் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிய வில்லைகள் சரிவதன்ன நமது சாரீர சங்கமம் நில்லாமல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. துல்லியமான ஒளிக்கீற்று உன்னையும் என்னையும் குருடாக்கிச்செல்ல முற்படுகையில் வண்ணத்துப்பூச்சியின் தேகம் ஒப்ப கண்களை இறுக்க மூடும் போது எழும் மனச்சித்திரங்கள் நிறங்களில் வெடித்துச் சிதறுகின்றது. ஆடைகளைப் பற்றும் என் கரங்களை வன்மத்தோடு தடுத்து உனது ரோமங்களைக் கோத ஆணைகள் பிறப்பிக்கிறாய். நாக்கினை அவ்வப்போது கடித்துவிடுகிறேன், நகங்களால் என்னுயிரையே கிழிக்க நினைக்கிறேன், இடையில் சட்டென பெருகும் கண்ணீரில் கரைந்து போகின்ற காதலில் வழிகிறது கொஞ்சம் குருதி. மரணத்தின் கதவுகளுக்கு அருகிலிருக்கும் எனக்கு கரைகளில் துள்ளும் மீன்கள் உயிர் துறக்கும் தருணத்தில் அலையிழுத்துக்கொள்ளுவதை போல எனது விமோசனக்கனிக்கு பாதை தெரிகிறது. போதையில் நெளியும் நமது பொம்மை உடல்கள் ஏகாந்தத்தில் லயித்திருக்க தீயின் சுவாலைகள் நுழைவாயிலை அகழியாய் உருமாற்றுகிறது. புதைகுழியிலிருந்து தவழ்ந்து செல்லும் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து அதே பழைய கோப்பையில் மீண்டும் மதுவருந்த முனைகிறாய்.
இனி என்னை ஏழு கடல்களுக்கும் ஏழு மலைகளுக்கும் அப்பாலிருக்கும் அமானுஷ்ய கோட்டைக்கு இட்டுச்செல்லும் நாயகன் ஒருவன் என்னை மீட்டெடுக்கும் வரை நான் மறுபடி காத்திருக்க வேண்டும்.
_________________________________________________________________________________________________

8 comments:

வினோத்கெளதம் 30 June 2009 at 12:23 am  

வெங்கி,
என்ன சொல்லுவேன்..எங்கயோ போயிட்டு இருக்க..

நட்புடன் ஜமால் 30 June 2009 at 6:26 am  

நல்ல ஒரு கவிதை போல உள்ளது


(அதாவது கவிதையாகவும் எழுதி இருக்கலாம் ...)


வார்த்தைகள் எல்லாம் அருமையாக இருக்கு ...

வால்பையன் 30 June 2009 at 12:30 pm  

யாரை பார்த்து இப்படி கெட்டு போனிங்க!

Magesh 1 July 2009 at 11:48 am  
This comment has been removed by the author.
வசந்த் ஆதிமூலம் 1 July 2009 at 6:21 pm  

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ அடிக்குது. அண்ணா கலக்குறீங்க...

தீப்பெட்டி 2 July 2009 at 11:12 am  

முன்பின் தெரியா நவீனம்?!..

கலக்கல் வெங்கி..

வெங்கிராஜா 2 July 2009 at 8:56 pm  

ஹிஹி.. நன்றிகள் அனைவருக்கும்...
வினோத்: ரொம்ப சாதாரண எழுத்து நண்பா!
வால் அண்ணே: இதுக்கு மேலே என்ன கெட்டுப்போகணும்?
ஜமால் சார்: எல்லாம் உங்க ஆசீர்வாதம்
வசந்த்: நவீனம்னாலே நம்மளுக்கெல்லாம் வாயில வீணை வாசிக்க வரும் பாசு.. அடிச்சு உடலாம்!
தீப்பெட்டி: வரவர ரொம்ப புல்லரிக்க வைக்குறீங்களே சார்!

வெயிலான் 6 August 2009 at 12:32 pm  

நேற்று தான் நாடோடி இலக்கியன் உங்களை அறிமுகப்படுத்தினார்.

நல்லா எழுதறீங்க.

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP