மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

10-Jul-2009

ஆறாம் அறிவு

கௌரியை 
கௌரி என்றும் வாசிக்கலாம் 
கௌரி என்றும் வாசிக்கலாம்.


இத்தனை அழகென்று 
எதிர்ப்பார்க்கவில்லை 
கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் 
வானவில்.

கண்டுபிடிப்பவர்க்கு சன்மானம் 
காலையில் சோலையிலிருந்த 
"பனித்துளிகளைக் காணவில்லை"

வேண்டாமென 
வெட்டி எறிந்த 
பால் பாக்கெட் நுனியில் 
உயிர் வாழ்கின்றன 
சில எறும்புகள். 

கொஞ்சம் 
விளையாட்டுக்கு பிறகு 
மழையை ரசித்தபடி 
குடையை 
தூக்கி வீசுகிறது 
குரங்கு .
 
கண்ணன் பாதத்தை 
வினோதமாய் பார்த்து 
வாலாட்டுகிறது 
சங்கிலி பூட்டிய நாய்.
_____________________________________________________________________

15 comments:

பாலா 10 July 2009 at 7:03 pm  

ennakku anthalavu arivu illai (that mean 6th sense)

rasithen sir

super aana
inammum 100 % enaku puriyala saare

பாலா 10 July 2009 at 7:03 pm  

ennakku anthalavu arivu illai (that mean 6th sense)

rasithen sir

super aana
inammum 100 % enaku puriyala saare

வால்பையன் 10 July 2009 at 7:47 pm  

சூப்பர் தல!

பிரவின்ஸ்கா 10 July 2009 at 9:22 pm  

//வேண்டாமென
வெட்டி எறிந்த
பால் பாக்கெட் நுனியில்
உயிர் வாழ்கின்றன
சில எறும்புகள் //

அருமை .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Nundhaa 11 July 2009 at 9:33 pm  

ஒரு சில கவிதைகள் நன்று ... கொஞ்சம் முயற்சித்தால் ஹைக்கூவாக்கிவிடலாம் ... மற்றதெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை ...

வெங்கிராஜா 12 July 2009 at 6:38 pm  

"உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாலா!"

நன்றி வால் அண்ணே, ப்ரவின்ஸ்கா!

எது எது பிடிக்கலைன்னு சொன்னா தேவலை நந்தா..

Nundhaa 12 July 2009 at 10:13 pm  

எது பிடித்திருக்கிறது (எது Near Haiku) என்று மட்டும் சொல்கிறேன் -
//

இத்தனை அழகென்று
எதிர்ப்பார்க்கவில்லை கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் வானவில்

வேண்டாமென வெட்டி எறிந்த பால் பாக்கெட் நுனியில் உயிர் வாழ்கின்றன சில எறும்புகள்

கொஞ்சம் விளையாட்டுக்கு பிறகு மழையை ரசித்தபடி குடையை தூக்கி வீசுகிறது குரங்கு

//

தீப்பெட்டி 14 July 2009 at 5:52 pm  

நல்லாயிருக்கு பாஸ்..

சேரல் 16 July 2009 at 10:26 am  

arumai venkiraajaa!

mika rasiththen.

-priyamudan
sEral

சேரல் 16 July 2009 at 10:28 am  

enakkup pidiththavai,
//கௌரியை
கௌரி என்றும் வாசிக்கலாம்
கௌரி என்றும் வாசிக்கலாம்.இத்தனை அழகென்று
எதிர்ப்பார்க்கவில்லை
கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில்
வானவில்.

வேண்டாமென
வெட்டி எறிந்த
பால் பாக்கெட் நுனியில்
உயிர் வாழ்கின்றன
சில எறும்புகள்.


கொஞ்சம்
விளையாட்டுக்கு பிறகு
மழையை ரசித்தபடி
குடையை
தூக்கி வீசுகிறது
குரங்கு .


கண்ணன் பாதத்தை
வினோதமாய் பார்த்து
வாலாட்டுகிறது
சங்கிலி பூட்டிய நாய்.
//

-priyamudan,
sEral

மண்குதிரை 18 July 2009 at 12:04 pm  

நல்லா இருக்கு வெங்கி. நந்தா குறிப்பிடுவை ரொம்ப நல்லாயிருக்கு

வெங்கிராஜா 18 July 2009 at 1:27 pm  

சேரல், தீப்பெட்டி... தொடர்ந்து பக்கம் வந்து கருத்துகளை சேர்ப்பித்துக்கொண்ட்டிருக்கும் உங்களுக்கு நன்றிகள். :)

நன்றி நந்தா... இம்ப்ரூவ் பண்ணப் பார்க்கிறேன்... :D

நன்றி மண்குதிரை. மீண்டும் அதே பொலிவுடன் பதிவுலகில் வலம் வாருங்கள்... :P

kartin 21 July 2009 at 7:42 pm  

boss..

வணக்கம்!!
வியந்திருக்கிறேன்.. நிகழ்ந்திருக்கிறது!!
சாக்லேட் ஐ விட பால் பாக்கெட் இனிக்கிறது!!
நரசிம்-க்கு நீங்களிட்ட பின்னூட்டம் ஒரு வரலாறு!!
தொடர்கிறேன் பெருமகிழ்வுடன் :))

வெங்கிராஜா 21 July 2009 at 8:00 pm  

//நரசிம்-க்கு நீங்களிட்ட பின்னூட்டம் ஒரு வரலாறு!!//
எதச்சொல்லுறீங்க?

//வியந்திருக்கிறேன்.. நிகழ்ந்திருக்கிறது!!
சாக்லேட் ஐ விட பால் பாக்கெட் இனிக்கிறது!!//
:D
பால் பாக்கெட்டை விட எனக்கு சாக்லேட் தான் பிடித்திருக்கிறது. அதில் பிறந்தநாள் முடிச்சையும் லாவகமாக போட்டிருக்கீங்க! வாழ்த்துகள்!

D.R.Ashok 28 August 2009 at 8:27 pm  

ஆறாம் அறிவு"

நல்லாயிருக்கு young man
//கண்ணன் பாதத்தை வினோதமாய் பார்த்து வாலாட்டுகிறது சங்கிலி பூட்டிய நாய்//

எனக்கென்னவோ இது அதிகம் கவர்கிறது.

(பனித்துளி,பால், வானவில் nice ones)

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP