மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

21-Jul-2009

இ.பி.அ


"அதை யாருப்பா அசிங்கமா வாங்கி கையில எல்லாம் மாட்டிகிட்டு... உள்ள வாங்கி வெளிய வித்துற வேண்டியதுதான்!"
-கிருஷ்ணன் (எ) கவுண்டமணி, எம்.ஏ.. எம்.ஏ.. ஃப்ளாஸஃபி ஃப்ளாஸஃபி!


தேவையில்லாமல் நீட்டி முழக்க அவசியமிருக்காது என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த விருதுச் சங்கிலியில் கோத்துவிடும் அந்த ஆறு பேராவது வந்து பார்த்து பின்னூட்டமிட்டு, இணைப்பும் தரப்போகிறார்கள். ஹிட்டுகள் உத்தரவாதம். பின்ன என்னதுக்கு வியாக்கியானமும், உபந்நியாசமும்? மேட்டர் இதுதான். பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட அண்ணன் செ.ரவி (சோடா எங்கப்பா?) அவர்கள் தொடங்கிவைத்த இந்த இண்டரஸ்டிங்க் ப்ளாக் அவார்ட் (ஏன் சார், அதை தமிழிலேயே எழுத வேண்டியதுதானே?) ஒருவழியாக இந்த பக்கம் காற்றோடு வந்து சேர்ந்துவிட்டது. (நானும் ரவிடிதான்..!) அளித்த கவிஞர் சேரல் அவர்களுக்கு நன்றிகள். ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்படி, அதை அறுவருக்கு தரச்சொலியிருக்கிறார்கள். (எவ்வளவோ பண்றோம்.. இதப் பண்ணமாட்டமா?) பெரும்பாலும் இந்த கௌரவம் (அப்படித்தானே?) போய்ச்சேராத திசைகளுக்கு இதை தரப்பார்க்கிறேன். இவர்களையும் வாழ்த்துவீர்களாக. (ஏன்பா... நீங்களும் இதை ஆறு பேருக்கு கொடுத்துருவீங்களாம்பா)

1. பிரபு ராம்: இணைய நண்பர் தாம். சுருக்கமாக, நகைச்சுவையாக ஆங்கிலத்திலும் தமிழிலும் பதிபவர். தீவிர கவுண்டமணி ரசிகர். உள்ளூர் முதல் உலகப்படம் வரை அங்கலாய்ப்பவர். வயசுக்கு சற்றும் பொருந்தாத இண்ட்டெசெக்சுவல்.

2. ஹாலிவுட் பாலா: ஆங்கிலப் பட விமர்சகர். நான் பார்த்தவரையில் தொடர்ந்து இந்த தளத்தில் இயங்கிவரும் வெகுசில தமிழ்ப்பதிவர்களில் ஒருவர். ஆழ்ந்த ரசனையும், அற்புதமான மொழிநடையும் உடையவர்.

3. சுபாங்கன்: டெக் ப்ளாகர். இயல்பான தமிழில் கஷ்டமான கணிணி சமாச்சாரங்களை என் போன்ற மட்டிகளுக்கு புரியவைப்பவர். இலங்கைத்தமிழர்.. ஒரே வயதுக்காரர் வேறு. ஏற்கனவே ஹா.பா-விற்கு சொன்னதே தான். இந்த தளத்தில் இயங்கிவரும் வெகுசிலரில் ஒருவர்.

4. அனந்த்: புகைப்படக்காரர். அருமையான கோணங்களில் தனித்துவமான நிறங்களை சிறைபிடிப்பவர். இன்ஸ்பிரேஷன். இத்தனைக்கும், பலர் வெறும் விடுமுறையில் சம்பிரதாயமாக கொண்டுசெல்லும் பி&எஸ் வகை கருவி ஒன்றினால் முழுவருமானம் ஈட்டுமளவிற்கு படங்களைச் சுட்டுத்தள்ளுபவர்.

5. காம்ப்ளிக்கேட்யூர்: இவரையும் 'மையம்' என்ற ஃபோரமின் மூலமே அறிவேன். இசை, படங்கள், இலக்கியம் என்று ஏகப்பட்ட துறைகள் சார்ந்து ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதும் அளவிற்கு படிப்பாளி. சமீபத்தில் கமலஹாசன் நடத்திய திரைக்கதை பயிற்சிப்பட்டறைக்கு தேர்வானவர். இவரது ஆங்கிலம்... ஒரே குஷ்டமப்பா!

6. வினித்: நல்ல நண்பர். இசை விமர்சனங்கள் எழுதிக்கிழிப்பவர். துல்லியமான கணிப்புகள், தனது ப்ளேலிஸ்டுகள், விரிவான விமர்சனங்கள், பாடல்களினூடே சுவாரசியமான ப்ரிலூட், இண்டர்லூட், போஸ்ட்லூட்களை வெட்டி விமர்சிப்பவர். சென்னைவாசி, தமிழிலும் எழுதினால் தேவலை.

மற்றபடி இதை முதுகுசொறிதல் என்றெல்லாம் லேபிள் ஒட்டவேண்டாம். அப்படியே தன்னிச்சையாக தோன்றி செய்ததே, இவருக்குத்தான் தரவேண்டும் என்று திட்டமிட்டெல்லாம் தரவில்லை. விடுபட்டவர்கள் என்றே ஒரு பெரிய பட்டியல் உண்டு: ப்ரொஃபைலுக்கு சென்று பார்க்கவும்.
_____________________________________________________________________

17 comments:

Vinith 21 July 2009 at 6:32 pm  

mikka magizchchi vengki avargaLee...
manamaarwdha nanRi maRRum vaazththugaL...

ஆ! இதழ்கள் 21 July 2009 at 6:53 pm  

வாவ்... இதுக்கு மேல ஒண்ணும் வேண்டாம்ங்க.

அப்புறம் புகைப்படக்காரர் என்றால் professionalனு நினைத்துக் கொள்ளப் போறாங்க. சும்மா ஆர்வக்கோளாறுல சுட்டுத்தள்ளுறது.

நன்றி. மிக்க மகிழ்ச்சி.

வால்பையன் 21 July 2009 at 7:04 pm  

மகிழ்ச்சி நண்பரே!

உங்களிடன் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

வினோத்கெளதம் 21 July 2009 at 8:13 pm  

வாழ்த்துக்கள் நண்பா..

நேசமித்ரன் 21 July 2009 at 8:28 pm  

கொடுத்தாரும் பெற்றோரும்
மென் மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்கள்

என் கவிதைக்கு நீங்கள் தந்திருக்கும் மரியாதைக்கு என்றும் நன்றி கடன் உண்டு..!

Vinith 21 July 2009 at 8:49 pm  

கூடிய விரைவில் தமிழில் சில பதிவுகள் எழுதுகிறேன் வெங்கி. :)

செந்தழல் ரவி 21 July 2009 at 9:15 pm  

புது முத்துக்களை அறிமுகம் செய்திருக்கீங்க, வாழ்த்துக்களும் நன்றிகளும்.......

செந்தழல் ரவி 21 July 2009 at 9:15 pm  

உங்க வலைப்பூவில் இருக்கும் பாதசாரி படம் சூப்பர்.

வெங்கிராஜா 21 July 2009 at 9:27 pm  

விராஜன் (எ) வினித்.. தமிழில் பதிவது மிகவும் வரவேற்கத்தக்கது! அப்படியே உங்கள் பதிவுகளை திரட்டிகளிலும் (Social Bookmarking sites: Tamizhmanam, Tamilish..) இணைப்பீர்களாக..

நன்றி அனந்த். இந்த பட்டத்தை ஒலிம்பிக் ஜோதியா பாவிச்சு நீங்களும் பாஸ் பண்ணி உடுங்க.. //"அப்ப நீங்க ஹோட்டல் ஓனர் இல்லையா?"//

தொடர்ந்து என் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு வரும் வால்பையன் அண்ணனுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

நன்றி வினோத் கௌதம்.

நன்றி நேசமித்ரன். இது என்ன பெருங்காமெடியா இருக்கு? நல்லா கவிதை எழுதினா நாலு பேரு மேற்கோள் காட்ட தான் செய்வாங்க... இது உலக நியதிதானுங்களே!

செந்தழல் ரவி சார்! வாங்க வாங்க! ஆகா.. நம்ம ப்ளாக்குக்கும் பிரபல பதிவர்கள் வர ஆரம்பிச்சுட்டாய்ங்களே.. இனி சும்மா அடிச்சு ஊத்த முடியாதா? நன்றி சார். ஏதோ மடிப்பொட்டி இருக்குறதுனால் இதையெல்லாம் செய்ய முடியுது..

Cable Sankar 21 July 2009 at 9:47 pm  

வாழ்த்துக்கள்.. வெங்கி.. மேலும் உங்கள் புதிய அறிமுகத்துக்கும் சேர்த்து.

வெங்கிராஜா 21 July 2009 at 9:56 pm  

நன்றி கேபிளாரே! இந்த நேரத்தில்.. இந்த விருது என்னை வந்து சேர ஒருவிதத்தில் காரணமாக இருந்த எனது 50 ஃபாலோயர்களுக்கும் நன்றி சொல்லியாகவேண்டும்! 50-வதாக சேர்ந்த உங்களையும் சேர்த்து!

Subankan 21 July 2009 at 9:58 pm  

நன்றி தல, மிக்க மகிழ்ச்சி. விருதுபெற்ற ஏனையோருக்கும் பாராட்டுக்கள்.

யாத்ரா 21 July 2009 at 11:54 pm  

பல ஸ்வாரஸ்யமான புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள், மிக்க நன்றி, அனைவருக்கும் வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் 22 July 2009 at 6:19 am  

யாவருக்கும் வாழ்த்துகள்.

மண்குதிரை 22 July 2009 at 11:52 am  

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

வெங்கிராஜா 22 July 2009 at 1:33 pm  

சுபாங்கன்... உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்!
யாத்ரா... ஆம், இவர்களுக்கு உரிய கவனம் கிடைப்பதில்லை. சுபாங்கனுக்கு 800 ஃபீட்பர்னர் வாசகர்கள் இருக்கையிலும் அனேகம் பேரைப் போய்ச்சேர்ந்த்ததாக தெரியவில்லை.
ஜமால் அண்ணே.. நன்றி!
நன்றி மண்குதிரை!

dagalti 23 July 2009 at 3:08 pm  

நன்றி है !

+

Goundamani line from Chinnathambi when his wife and F-i-L praise his 'greatness'

"ஐயோ....என்னிக்கு சிக்கிட்டு சின்னாபின்னம் ஆகப்போறேனோ தெரியல"

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP