மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

04-Jul-2009

செல்ஃபோன் படங்கள் - I

ஒரு நல்ல புகைப்படக்காரரால் ஐந்நூறு ரூபாய் பெறுமானமுள்ள டிஸ்போசபிள் கேமராவிலேயே மாஸ்டர்பீஸ்களை எடுக்க முடியும் என்கிறார் கென் ராக்வெல். அப்படிப் பார்க்கையில் செல்ஃபோன் படங்கள் நிச்சயம் நன்றாகத்தான் இருக்க வேண்டும். இரண்டு/மூன்று மெகாபிக்சல் கேமராக்களிலேயே அற்புதமான தொழில்நுட்பம் இருக்கிறது. கதை தான் முக்கியமே தவிர எந்த பேனாவில் எழுதுகிறோம் என்பது அவசியமல்ல. அதனால் தான் பிட் போட்டியிலிருந்து சிலபல இணைய போட்டிகளிலும், கல்லூரி அளவிலான போட்டிகளிலும் தாழ்வு மனப்பான்மை ஏதுமின்றி பெரிய பெரிய லென்ஸ்காரர்களுடன் சரிசமமாக எனது படைப்பையும் தந்திருக்கிறேன். சுயதம்பட்டம் என்றில்லை. ஒளிப்படம் எடுக்கும் பலர் அதை வெளியிடாமல் ஒளித்து ஒளித்து வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். தமிழில் புகைப்படப் பதிவர்கள் சொற்பமே. அத்தனை பேரும் கவித்துவமான பல தருணங்களை தாண்டி வருகிறோம், ஏறத்தாழ எல்லோரிடமுமே ஒரு கேமிரா கூடிய அலைபேசி இருக்கிறது. சுட்டுத்தள்ளலாமே?
முதல் கேமிராவான மோட்டரோலா எல்-7 மற்றும் பத்து நாள் வைத்திருந்த ஐ-ஃபோன் படங்கள் கைவசமில்லை. மோட்டோ மிங் ஏ1200 மற்றும் சோனி எரிக்சன் ஜி700 படங்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. நோக்கியா என் 70, 73, 6300, கே 810-ஐ, டபிள் யூ 350-ஐ முதலிய பற்பல நண்பர்களின் கருவிகளிலும் படங்கள் எடுத்திருக்கிறேன், சிலவற்றை வைத்திருக்கிறேன்.

கல்லூரி விடுதி காரிடார்கள்

ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி ஓரம்
அச்சு அசலான படம் - பிற்சேர்க்கை ஏதுமில்லை.

கழிவறை விழிகள்

போரூர் ஏரி

டார்ச் லைட்

பவர் சேவர் பல்பு

ஜன்னலொளி
ஆட்டோ இரவு
மோட்டோரோலாவின் மிங் ஏ1200-ல் (சிவாஜியில் மொட்ட ரஜினி வச்சிருப்பாரே) ஃபோக்கஸ் மாற்ற முடிந்தது. அதனால் சிலபல மேக்ரோ ஷாட்கள் சோதிக்க முடிந்தது. அதில் எடுத்த படங்களே இவை.

புதிதாக எஸ்.எல்.ஆர் கேமரா ஒன்று வாங்கியிருப்பதால் அலைபேசி படங்கள் இனி எடுப்பது பெருமளவு குறையும் எனவே இதுவரை எடுத்த படங்களை தொகுதிகளாக தரலாம் என்ற எண்ணத்தில் இந்த பதிவு.
_____________________________________________________________________

20 comments:

Mark K Maity 4 July 2009 at 10:02 pm  

really nice

ஆயில்யன் 5 July 2009 at 12:22 am  

மொபைல் காமராவுல இம்புட்டு கலக்கியிருக்கீங்க சூப்பரூ :)))

ஆயில்யன் 5 July 2009 at 12:22 am  

//புதிதாக எஸ்.எல்.ஆர் கேமரா ஒன்று வாங்கியிருப்பதால் அலைபேசி படங்கள் இனி எடுப்பது பெருமளவு குறையும்///

வாழ்த்த்துக்கள் :)))))))))

வினோத்கெளதம் 5 July 2009 at 12:22 am  

அடப்போப்பா சும்மா நைட் எல்லாம் கண் முழிச்சு பாராட்ட வேண்டியது இருக்கு நீ பண்ணுற வேளைக்கு..

நட்புடன் ஜமால் 5 July 2009 at 9:11 am  

நல்லாயிருக்கு

உங்க தன்னம்பிக்கையும் ...

வெங்கிராஜா 5 July 2009 at 1:03 pm  

Mark K Maity நன்றி!
ஆயில்யன் நன்றி!
வினோத்கெளதம் நன்றி!
நட்புடன் ஜமால் நன்றி!
புதிதாக ஃபாலோ செய்யும் நந்து f/o நிலா அண்ணனுக்கும் நன்றிகள்!

பிரவின்ஸ்கா 5 July 2009 at 2:55 pm  

புகைப்படங்கள் நல்லாருக்கு.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

அ.மு.செய்யது 5 July 2009 at 6:36 pm  

எப்ப‌டிங்க‌ இப்ப‌டில்லாம் ??

அதுவும் செல்ஃபோன் கேமிராவுல‌...

போட்டோக்கார‌னுக்கு பொற‌ந்த போட்டோகார‌ன்யா நீ...

வெங்கிராஜா 5 July 2009 at 8:32 pm  

நன்றி பிரவின்ஸ்கா!
நன்றி செய்யதுண்ணே! நெஞ்ச நக்கிட்டீங்க! ஹிஹி...

Vita Stunder 5 July 2009 at 9:20 pm  

Stunning shots!!

Have a great sunday!
Anna

வெங்கிராஜா 5 July 2009 at 9:37 pm  

Oh! Welcome to India, Vita. These are photographs from a Motorola A1200 mobile. I'm just putting these up cause I've bought a basic SLR and will probably shoot very less on my mobile phones. Watch this space for more. The next series of photos will show up in a while.

Anonymous 5 July 2009 at 10:11 pm  

Sorry - you have no monochrome and none of your interesting images meet the criterion.
Please join in when you have a suitable picture - it does not have to be Black and White, a monochrome may be, at a stretch, shades of red and white or some such. Sepia is quite popular with our participants.

Nundhaa 5 July 2009 at 11:08 pm  

ஒரு சில நல்ல படங்களுடன், cellcam பற்றிய நல்ல பதிவும் கூட, SLRஇல் சீக்கிரம் விளையாடத் துவங்கவும் :)

சேரல் 6 July 2009 at 7:21 am  

வெங்கிராஜா,

உங்கள் வலைப்பூவுக்கு இப்போதுதான் முதன்முறையாக வருகிறேன். நல்ல பதிவு இது. நல்ல முன்னுரையுடன் நீங்கள் அளித்திருக்கும் படங்கள் அனைத்தும் மிக அருமை. கல்லூரி காரிடாரின் முதல் படம், டார்ச் லைட், பவர் சேவர் பல்ப், ஜன்னலொளி, இந்தப் படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. நீங்கள் சொல்வதைப் போலக் கதை தான் முக்கியமே தவிர, எந்தப் பேனாவில் எழுதுவதென்பது முக்கியமில்லை. உங்களுக்குள் இருக்கும் புகைப்படக்கலைஞனைப் பத்திரமாகப் பாதுகாத்து வாருங்கள். பலர் பாதி வழியில் தொலைத்துவிடுகிறார்கள். தொடர்ந்து இது போன்ற உங்கள் கைவண்ணங்களைப் பதிவிடுங்கள். உங்களின் பிற பதிவுகளை நான் இனிமேல்தான் படிக்க வேண்டும் :)

-ப்ரியமுடன்
சேரல்

வெங்கிராஜா 6 July 2009 at 12:31 pm  

Aileni, no worries. I didn't read your regulations mandatory. I just thought I could link it. Thanks for the tip. I'll post my B/W photos as my next installment and link them.

நன்றி நந்தா. எஸ்.எல்.ஆர் கொஞ்சம் பிடிபடவில்லை. அத்தனை சுலபமில்லை என்றாலும் சுமார் படங்கள் வருகின்றன. ஃபேஸ்புக்கில் நண்பர்களுக்காக வெளியிட்டிருக்கிறேன். கொஞ்சம் தேர்ந்த பின்பு வருகிறேன்.

நன்றி சேரல். உங்களது கொக்குகள் கவிதை என்னை மிகவும் ஈர்த்தது. மீண்டும் குறிப்பிடத்தோன்றியது. உங்களைப்போன்ற அன்பர்களின் ஊக்குவிப்பு என்னை எப்போதும் பாதிவழியில் தவறவிடாதென்ற நம்பிக்கையுடன்...

வால்பையன் 6 July 2009 at 10:38 pm  

வாவ்,

படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு!

தீப்பெட்டி 14 July 2009 at 5:55 pm  

அட இப்படியெல்லாம் கூட மொபைல்ல படங்கள் எடுக்கலாமா!!!

எல்லாமே அருமை வெங்கி..

Vinith 20 July 2009 at 1:30 pm  

nice pictures.

naanum ungala madiri thaan.... kannula padara scenes ellathaiyum photos eduppen... i love photography :)

indha madiri photos naanum try panni irukken.... will share it soon :)

வெங்கிராஜா 20 July 2009 at 1:44 pm  

வால் அண்ணே... நன்றி!

தீப்பெட்டி... இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடுறீங்க...

Vinith, Please do. It all starts like that. I started clicking random things last december. Only now I've grown confident of buying an assorted device which could help me create pictures and pictures alone. Good luck!

ஆ! இதழ்கள் 21 July 2009 at 7:03 pm  

கலக்கிட்டீங்க... எப்படி இத பாக்காம உட்டேன்?

சரி D40 வாங்கிருக்கதா கேள்விப்பட்டேன். பட்டைய கிளப்புங்க...

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP