மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

23-Jul-2009

செல்ஃபோன் படங்கள் - II

மெகாபிக்சல் என்பதில் இன்னும் பலருக்கு தவறான புரிதல் இருந்து வருகிறது. அது ஒரு விளம்பரத் தந்திரம் மட்டுமே. ஒரு ஆறு மெகாபிக்சல் படத்தையும் ஒரு பத்து MP படத்தையும் ஒரே அளவு காகிதத்தில் (20"X30" வரை) அச்சிட்டால் எந்தவித வேறுபாடும் நம் கண்களுக்கு புலப்படாது என்பதே மெய். சாதாரணமாக செல்லும் இடத்தின் நினைவாக படம் பிடிப்பதற்கு 5 MP கேமராக்களே போதுமானது. சற்றே உயர் தரத்தில் ப்ரிண்ட் போட மட்டுமே 6 முதல் 12 வரை MP தேவைப்படும். அதற்கும் மேல் செமி-ப்ரொஃபெஷனல், ப்ரொஃபெஷனல் ஆசாமிகளுக்கு மட்டுமே தேவை. மெகா என்றால் ஒரு மில்லியன் என்ற கணக்கே. முன்னாளில் படத்தை பிலிம் சுருளில் விழும் ஒளியாக பதிவு செய்து அதை இருட்டறையில் டெவலப் செய்தனர். இன்று ப்லிம் சுருளுக்கு பதில் சிலிக்கான் வந்துவிட்டது. அந்த சின்ன சென்சாரில் மேல்-கீழ், இட-வலம் என்று கோடுகள் ஒரு க்ரிட்-டை உருவாக்குகின்றன. இந்த சின்ன சின்ன சதுரங்களில் ஒளி டிஜிட்டல் மெகாபைட்களாக சேமிக்கப்படுகிறது. இந்த சதுரங்களின் எண்ணிக்கையையே மெகாபிக்சல் என்று குறிப்பிடுகின்றனர். பத்து மில்லியன் குட்டி குட்டி சதுரங்கள் அந்த சிறிய தகடில் இருந்தால் பத்து மெகாபிக்சல் கேமரா, அவ்வளவே. கடைக்காரர் விசாரிக்கையில் எத்தனை மெகாபிக்சல் என்ற ரீதியில் வித்தியாசம் காட்டி விற்க முயன்றால் கபர்தார்!
கொசுறு: பி&எஸ், எஸ்.எல்.ஆர் வகை கேமராக்களில் படம் பிடிப்பவர்கள் கருப்பு வெள்ளையில் படம் பிடிக்கத்தோன்றினால் கலரிலேயே முதலில் பிடித்துவிட்டு, பின்பு கணிணியில் ஃபில்டரிங் மாற்றுவது நலம். கேமிராவின் சென்சார் தன் வலுவை சில மாற்றுகள் குறைத்துக்கொண்டே டீஃபால்ட்டாக கருப்பு வெள்ளையில் படம் பிடிப்பதாகச் சொல்கிறார்கள். கணிணியில் நிறம் மாற்றுவதால், கருப்பு-வெள்ளையின் ஷேட்கள் இன்னும் மெருகேறி ஷார்ப்பாக இருக்கும் என்றும் சொல்கிறர்கள். இனி, கருப்பு-வெள்ளைப்படங்கள் இரண்டாம் தவணையாக.

ஒரு மரத்தக்கை


ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் போஸ்டர் பார்த்திருக்கிறீர்களா?


பெர்ஸ்பெக்டிவ்!

உணவு விடுதி ஒன்றில்

வரைகலை அறை

மேக்ரோ

சீப்பு!
உடுப்பி மடம் - சிற்பங்கள்
உடுப்பி மடம் - கல் தூண்

பாதம்!
CAD Laboratory


இவற்றில் கடைசி சில படங்கள் மோனோக்ரோம் வகையைச்சார்ந்தவை. ஆனால், வெறும் கருப்பு வெள்ளை அல்ல.
_____________________________________________________________________

22 comments:

நட்புடன் ஜமால் 23 July 2009 at 9:37 am  

சீப்பு

ரொம்ப சூப்பர்.

Vidhoosh 23 July 2009 at 9:58 am  

மரதக்கை அழகு. மேக்ரோ, சீப்பு இரண்டும் இரசித்தேன்.

உடுப்பி மடம் எதுவும் பேசவில்லையே??? தூண் ரொம்ப உம் என்று இருக்கு. கொஞ்சம் வேலையைக் காட்டி இருக்கலாமோ?

ஆ! இதழ்கள் 23 July 2009 at 10:40 am  

perspective, macro and combs were good. More than the shot, the eyes behind the camera are more important. All the shots said that.

expecting your slr shots.

:)

மண்குதிரை 23 July 2009 at 10:48 am  

excellent vengi

அ.மு.செய்யது 23 July 2009 at 11:36 am  

செல்ஃபோன் ஐ வைத்தை கவிதை எழுதும் ஒரு மாமேதையை இங்கு நான் பார்க்கிறேன்.

நீங்கள் பேசப்பட வேண்டும் என்பது என் ஆவல்.

Vilvarasa Prashanthan 23 July 2009 at 2:30 pm  

எனது வலைப்பதிவை பாருங்கள் ..
எல்லா படங்களும் செல்ஃபோனால் மட்டுமே எடுத்தவை .....

http://prashanthanphotos.blogspot.com/

ஆதவா 23 July 2009 at 3:04 pm  

ரொம்ப பிரமாதமான புகைப்படங்கள்..

செல்போனில் எடுத்த நல்ல புகைப்படங்கள் என்னிடமும் உள்ளன. முடிந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

பிகு. என்னிடம் எந்த கேமராவும் இதுவரை இல்லை.. ஆனால் புகைப்படக் கலையில் விருப்பம் அதிகம்!!!

சேரல் 23 July 2009 at 5:03 pm  

எல்லாப் படங்களுமே அருமை வெங்கிராஜா! குறிப்பாக நம்ம நிறத்துல இருக்கிறது எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு. அதாங்க கருப்பு வெள்ளை......

-ப்ரியமுடன்

சேரல்

யாத்ரா 23 July 2009 at 5:51 pm  

எல்லா படங்களுமே கவிதை மாதிரி இருக்கு வெங்கி, ரொம்ப நல்லா இருக்கு.

வெங்கிராஜா 23 July 2009 at 6:17 pm  

நிறைய பாராட்டுகள்... எதிர்பார்க்கவில்லை. எஸ்.எல்.ஆர் வச்சு வித்தையை அவ்வளவா காட்ட முடியலை... கத்துக்குட்டி லெவல்-ல தான் இருக்கேன். கூடிய விரைவில் பதிவிடுகிறேன். நன்றி மக்களே.. ஜமால் அண்ணே, Vilvarasa Prashanthan, மண்குதிரை, சேரல், ஆதவா, யாத்ரா.


தூணில் பழுப்பாகிப்போன மூப்பு பிடித்திருந்ததால் சேர்த்துவிட்டேன் விதூஷ்.. மற்றபடி, அந்த ஃபோட்டோவில் அதிக சமாச்சாரமில்லை.

செய்யது அண்ணே, எல்லாம் உங்க ஆசீர்வாதம்!

அனந்த் சார், நன்றி! மு.மேத்தாவின் வரிகள்ல சொல்லணும்னா
"விழிகள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களுக்கு கிடைத்ததென்னவோ
ஜன்னல் கம்பிகள் தான்."
நம்ம கையில என்ன இருக்கு?!

வில்வரசன்.. உங்கள் தளம் வந்தேன்... அந்த கட்டிடத்தை வச்சு சும்மா ஜாலம் காட்டியிருக்கீங்க! சூப்பர்ப்! நிறைய படங்கள் பிடிச்சுது. தொடர்ந்து பதிவிடவும்.

ஆதவா, நிச்சயம் பதிவிடவும். பேசாம யாராவது புகைப்படக்காரங்களை ஏதாச்சும் ஃபோடோ தொடர் பதிவு ஆரம்பிக்க சொல்லலாமா?

Nundhaa 23 July 2009 at 6:57 pm  

Camera tutorial and the photos (உணவு விடுதி ஒன்றில், சீப்பு!) are good

வால்பையன் 23 July 2009 at 7:09 pm  

மூன்றாவது எனக்கு பிடிச்சிருந்தது!

// நட்புடன் ஜமால் said...

சீப்பு//

அருமையான கலைஞனை இப்படி சீப்பான கலைஞன்னு ஒற்றை வார்த்தையில் திட்டலாமா?

Anonymous 23 July 2009 at 8:11 pm  

Excellent B&W. Welcome to the Monochrome Weekly.

வெங்கிராஜா 23 July 2009 at 9:55 pm  

வால்பையன்... பெயருக்கேற்ற குறும்புண்ணே!
நன்றி நந்தா.
Aileni, thanks for visiting again! FYI, the passage deals with the Megapixel myth and a tip on creating digital monochrome pictures. Care to watch this space! I wish I could keep you posted. Thanks.

Vinith 24 July 2009 at 12:50 pm  

super venki. kalakkiteenga...

ennooda neenda naal aasai + ungaloda undhudhal = pugaippadam patriya padhivu ready.....

idharkku mun, neengal Motorola phonil eduthadhaaga sonneergal. ippozhudhum adhe thaana alladhu veru edhenum camerava?

வெங்கிராஜா 24 July 2009 at 1:09 pm  

இது கொஞ்சம் அட்வான்ஸ்ட் விராஜன். சோனி எரிக்சன் கே810-ஐ, ஜி700-ஐ வகை அலைபேசிகளில் எடுத்தது. குறிப்பிட மறந்துவிட்டேன், நினைவுறுத்தியதற்கு நன்றி. உங்களது பதிவை ஆவலாக எதிர்நோக்குகிறேன். உந்துதல்-னு எல்லாம் போட்டு என்னை பெரிய பையனாக்கிறாதீங்க... இதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல! :)

Vinith 24 July 2009 at 3:46 pm  

அதானே பாத்தேன். சோனி'ல தான் இந்த தரம் வரும். என் பதிவு ரெடி வெங்கி. பாருங்க :)

Anonymous 24 July 2009 at 4:28 pm  

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

வெங்கிராஜா 24 July 2009 at 8:30 pm  

செய்திவளையம் நிர்வாகிகளுக்கு நன்றிகள்!
வினித்.. சியர்ஸ்! பதிவு பார்த்தேன்... அசத்தல்! அடுத்தடுத்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன்!

குடந்தை அன்புமணி 25 July 2009 at 11:42 am  
This comment has been removed by the author.
குடந்தை அன்புமணி 25 July 2009 at 11:55 am  

படங்களும், மெகாபிக்சல் பற்றிய தங்களுடைய விளக்கம் அருமையாக இருக்கிறது.

எனது வலைக்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றி தோழரே...

பிரவின்ஸ்கா 1 August 2009 at 9:26 pm  

அருமை.

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP