மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

03-Aug-2009

கொலாஜ் 04.08.2009

நேற்று நர்சிம் அண்ணன் என்னை பதிவில் ரெஃபர் செய்திருந்தார் (சுஜாதா டயலாக் வேறு). செம குஜாலாகிவிட்டேன். கிருஷ்ணப்பிரபு, சேரல், நேசமித்ரன் எல்லாரும் கூகுள் ஸ்டேட்டஸ் மெசேஜ் பற்றி LOL போட்டார்கள். ரிக்வஸ்ட் அனுப்பியவுடன் நாடோடி இலக்கியன், ஜ்யோவ்ராம், கேபிள் சங்கர் என்று பலர் சாட்டில் அக்செப்ட் செய்துவிட்டனர். அனுப்பும் மடலுக்கு மாதவராஜ், எம்.பி.உதயசூரியன், சீவீயார், லக்கிலுக் எல்லோரும் பதில் போடுகிறார்கள். ட்விட்டரில் பினாத்தல் சுரேஷ், என்.சொக்கன், பா.ராகவன், புருனோ என்று பலர் டி.எம், ரிப்ளை எல்லாம் செய்கிறார்கள். ஃபேஸ்புக்கில் மணிபாரதி, ஓசை செல்லா, ஆசிப் மீரான் எல்லாரும் நட்பு பாராட்டுகிறார்கள். வண்ணத்துப்பூச்சியார், அகநாழிகை எல்லாரும் தொலைபேசியில் அழைக்கிறார்கள். தமிழர்களின் ஆங்கிலப்பதிவு வட்டங்களில் இது நடக்காது. பின்னூட்டத்திற்கு பதில் சொல்லக்கூட கவுரதை பார்ப்பார்கள். பேசாமல் ப்ளாக்கை டெலீட்டிவிடலாமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு விருந்தோம்பலுக்கு நன்றி நண்பர்களே!

நேற்று நண்பர்கள் தின வாழ்த்தோடு கரோக்கே மாதிரி தமிழ்ப்பாடல்களின் கித்தார், பியானோ வார்ப்புகளை கொடுத்திருந்தேன். அதில் குறிப்பாக ஷெபின் என்ற இளைஞர் ஏகப்பட்ட பாடல்களுக்கு அப்படி போட்டிருக்கிறார். கண்கள் இரண்டால் தான் என்னுடைய ஃபேவரிட். கம்பியிலேயே வார்த்தை மாதிரி துல்லியமாக வருகிறது. ரிப்பீட்டுகிறேன், இவர்களையெல்லாம் சப்ஸ்க்ரைப் செய்தால் சந்தோஷப்படுவார்கள்(வேன்). யூடியூப் ரொம்ப சுவாரசியம் நிரம்பியது. வைரல் எனப்படும் மில்லியன் பார்வையாளர் கணக்கைத்தாண்டிய வீடியோக்கள் மாதம் ஒன்றாவது வருகிறது. பேட்டில் அட் க்ரூகர், க்றிஸ்டியன் த லயன், பென்னி லாவா வரிசையில் கேட்பரீஸ் விளம்பரம், சமீபமாக. இது இப்படியிருக்க சோபிக்கண்ணை வைத்து தமிழில் எதற்கு காமெடி, கீமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்?


உரையாடல் போட்டி முடிவுகளை ஆர்வமாக எதிர்நோக்குகிறேன். அதுல பாருங்க, இதை விட பெருசா அடுத்த நிகழ்வை செய்யுறது தான் சவாலே! உலக சினிமா, போட்டிகள், இன்னும் விரிவடையும் அமைப்பிற்கும் ஆதரவுக்கரம் நீட்டும் அனைவருக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும். அங்கு போட்ட பின்னூட்டம்:
எந்தப்படத்தை திரையிடுவது என்பது பற்றி ஒரு கலந்துரையாடல் வைக்கலாம், உங்கள் பதிவிலேயே. மேலும் மாதாமாதம் தமிழிலும் ஒரு படம் திரையிடப்பார்க்கலாம்... அக்ரஹாரத்தில் கழுதை, மோகமுள் மாதிரி அரிய, பலரும் பார்த்திராத படங்கள் என்று. சப்-டைட்டிலில் ஏகப்பட்ட டீட்டெய்ல்ஸ் தொலைந்துவிடும் அபாயம் இருப்பதால் பெரும்பாலும் உலக சினிமா (ஆங்கிலம் தவிர்த்து) அவ்வளவு எடுபடுவது கஷ்டமே. இங்கு யாத்ரா சொன்னதை வழிமொழிகிறேன். மேலும், முதல் ஞாயிறு என்பதை விட எந்த ஞாயிறு நிறைய பேருக்கு சௌகரியமாக இருக்கும் என்று ஒரு வாக்கெடுப்பும் வைப்பது நலம். இதுகுறித்து தனியாக ஒரு தளம் நிறுவலாமே சார்? இப்படி விஷ் லிஸ்ட் எல்லாரும் சொன்னால் பிரயோஜனப்படும்.

எஸ்.எல்.ஆர் வாங்கி விட்டாலும், முன்னே அலைபேசியில் இருந்த வேகமும் மொபைலிட்டியும் வரவில்லை. பழக்கமும் இல்லாததால், வ்யூஃபைண்டரில் ஒன்றும், எல்.சி.டி-யில் ஒன்றும் விழுகின்றன. ஐ.எஸ்.ஓ என்பது ஒரு தொழில்நுட்ப ஆச்சரியம். வெளிச்சம் மிகக்குறைவான அல்லது இரவுகளில் புகைப்படம் எடுக்க உதவும் காம்பென்சேஷன். இப்போதைக்கு பி/ஏ/எஸ் மோட்களில் தான் பயின்றுகொண்டிருக்கிறேன். இரவு இரண்டு மணிக்கு எடுத்த இரண்டு படங்கள் இவை. ஐ.எஸ்.ஓ உடன்/இல்லாமல். இது ஒரு டெஸ்ட் ஃபோட்டோ. இதைப்பற்றி ஒரு இழவும் தெரியாமலேயே சோதிக்கையில் அகப்பட்டது. என்ன, ட்ரைபாட் அல்லது நல்ல திட அடித்தளம் இல்லாமல் எடுக்கமுடியவில்லை. எஸ்.எல்.ஆர் குறித்த டிப்ஸ் வரவேற்கப்படுகின்றன. (படங்களை கிளிக்கிப் பெரிதாக பார்க்கவும்)க்விக் கன் முருகன் என்று ஒரு ஹிந்திப்படம் தயாராகிறது. அதிகாரப்பூர்வமான தளம், ட்விட்டர், ஃபேஸ்புக், வலைப்பூ என்று எல்லா வட்டாரங்களிலும் வக்கிரக் குப்பை. தென்னிந்திய சினிமா நாயகர்களை நையாண்டி செய்யும் பெயரில் வழக்கம் போல நம்மைக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள். ஆரியர்கள்-திராவிடர்கள் என்ற முன்ஜென்ம பாக்கியதைகள் எல்லாம் களைந்து பார்த்தால், நாம் என்ன அவர்களை விட மட்டமாகிவிட்டோம்? நமக்கிருக்கும் ஆங்கில உச்சரிப்பு, தோல் நிறம், ரசனை, தொழில்நுட்பம் என்று எதில் இளைத்தவர்கள் நாம்? இந்த சேடிசத்தில் சிரிக்க என்ன இருக்கிறது என்று புரியவில்லை. எதற்கு இந்த பொச்சரிப்பு? படத்தில் நாசர் போன்ற ஆளுமைகளும் இருப்பது தான் எரிச்சலைக்கிளப்புகிறது. நு.க.பி.நி என்று லேபிள் போட்டு பதிவுலகம் கொஞ்சம் கிழிக்கக்கடவது. சைட்பாரில் இருப்பது சாட்சியாக சென்ற வாரம் மூன்று படங்கள் பார்த்தேன். அதில் டர்டி ஹேரியின் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் சொல்லும் பீபுள்ஸ் ஃபேவரிட் பட்டாசு வசனம் இது:

I know what you're thinking. "Did he fire six shots or only five?" Well, to tell you the truth, in all this excitement I kind of lost track myself. But being as this is a .44 Magnum, the most powerful handgun in the world, and would blow your head clean off, you've got to ask yourself one question: Do I feel lucky? Well, do ya, punk?
டிஸ்கி 1: அந்த படத்தின் ப்ளாக்கில் QGM-இன் ஃபேவரிட் நடிகர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் என்று போட்டிருப்பதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
டிஸ்கி 2: முதல் பத்தியில் குறிப்பிட்டிருக்கும் பதிவர்களின் பெயருக்கு முன்னால் அண்ணன், சகா, குரு, தல, வாத்தியார், பாசு எல்லாம் சேர்த்தே படிப்பது உங்கள் கடமை.
_____________________________________________________________________

15 comments:

Karthikeyan G 4 August 2009 at 12:45 PM  

//யூடியூப் ரொம்ப சுவாரசியம் நிரம்பியது. வைரல் எனப்படும் மில்லியன் பார்வையாளர் கணக்கைத்தாண்டிய வீடியோக்கள் மாதம் ஒன்றாவது வருகிறது. //

யூடியூப் வாசகர் கமெண்டுகள் அதைவிட சுவாரசியமானவை.

:)

Vidhoosh 4 August 2009 at 2:04 PM  

:) உரையாடல் சிறுகதைப் போட்டி மூலம் தான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன். அதிலிருந்து இது வரை, அதிகம் பின்னூட்டம் இடவில்லை என்றாலும், நேரமிருக்கும் போதெல்லாம் ஒரு வார்த்தை சொல்லிப் போவேன்.
இந்த அவியலும், வசனமும் சூப்பர்.:)
--வித்யா

வண்ணத்துபூச்சியார் 4 August 2009 at 2:41 PM  

வெங்கி ராஜா,.. நீ கலக்கு ராஜா.

வாழ்த்துகள்..

Krishna Prabhu 4 August 2009 at 3:09 PM  

/-- தமிழிலும் ஒரு படம் திரையிடப்பார்க்கலாம்... அக்ரஹாரத்தில் கழுதை, மோகமுள் மாதிரி அரிய, பலரும் பார்த்திராத படங்கள் என்று. --/

ஜான் அப்ராஷாம் (அக்ரஹாரத்தில் கழுதை) போன்ற சிறந்த கலைஞர்களின் படைப்புகள் நமக்கு கிடைப்பதில்லை. அடூறார் அவரை சிலாகித்து எழுதி படித்த ஞாபகம்.

நல்ல தமிழ் குறும்படங்கள் கூட தேடித் தேடித்தான் பெறவேண்டி இருக்கிறது.

நல்ல முயற்ச்சி தொடருங்கள் நண்பரே.

நேசமித்ரன் 4 August 2009 at 3:55 PM  

அடுச்சு ஆடுஙக வெங்கி
பின்றீங்க போங்க

Cable Sankar 4 August 2009 at 6:58 PM  

ரைட் ஸ்டார்ட் மீசிக்..

ஆ! இதழ்கள் 4 August 2009 at 8:59 PM  

நன்றாக உள்ளது வெங்கி...

யாத்ரா 5 August 2009 at 2:48 AM  

நல்ல பகிர்வு வெங்கி, உங்கள் யூடியூப் பகிர்வும் புகைப்படங்களும் அருமை.

RR 5 August 2009 at 7:21 AM  

இன்ஸ்பெக்டர் 'Harry Callahan'(Eastwood) நம்ம தலைவர் ரஜினிக்கெல்லாம் அப்பா...........அப்படியே இந்த லிங்க் குடுத்திருந்த இன்னும் நல்லா இருந்திருக்கும் வெங்கிராஜா. http://www.youtube.com/watch?v=kQ0SEYOSx68

பதிவு கலக்கல்.

Nundhaa 5 August 2009 at 11:00 AM  

This montage is interesting

வெங்கிராஜா 5 August 2009 at 6:10 PM  

//யூடியூப் வாசகர் கமெண்டுகள் அதைவிட சுவாரசியமானவை.//
அதிலயும் சாம் ஆண்டர்சன் வீடியொவுக்கெல்லாம் செம காமெடியான கமெண்ட் இருக்கும்.. ரைட்டு பாஸ்!

நன்றி Vidhoosh. பின்னூட்டங்கள் இடாமல் போனாலும், அவசியம் வாசித்துவிட்டு செல்லவும். சாவகாசமாக குறைகளை மெயிலில் அனுப்புங்க.

நன்றி Kartikeyan G

நன்றி வண்ணத்துபூச்சியார்

நன்றி Krishna Prabhu.
//நல்ல தமிழ் குறும்படங்கள் கூட தேடித் தேடித்தான் பெறவேண்டி இருக்கிறது.//
புத்தகங்கள் பற்றி பதிவு போடுகையில், இது மாதிரி முயற்சிகளும் எடுங்க சார். பயன்படும்.

நன்றி Cable sankar

நன்றி நேசமித்ரன்

நன்றி RR. அதுவும் வெஸ்டரன் படங்களில் தலைவர் பிச்சு உதறிடுவார்!

நன்றி ஆ! இதழ்கள்

நன்றி யாத்ரா

நன்றி Nundhaa

வால்பையன் 5 August 2009 at 6:30 PM  

//பதிவர்களின் பெயருக்கு முன்னால் அண்ணன், சகா, குரு, தல, வாத்தியார், பாசு எல்லாம் சேர்த்தே படிப்பது உங்கள் கடமை//

பொழைக்க தெரிஞ்ச புள்ள!


//”நு.க.பி.நி”//

இதுக்கு என்ன அர்த்தம்!

வெங்கிராஜா 5 August 2009 at 6:57 PM  

இந்தாங்க சார்... வெளக்கம்.
பார்த்து, படிச்சு, புரிஞ்சு தெளிவா நடந்துக்கங்க..

http://10hot.wordpress.com/2009/07/30/tamil-bloggers-acronyms-twitter-shortforms-expansions/

RR 6 August 2009 at 6:10 AM  

//
இந்தாங்க சார்... வெளக்கம்.
பார்த்து, படிச்சு, புரிஞ்சு தெளிவா நடந்துக்கங்க..

http://10hot.wordpress.com/2009/07/30/tamil-bloggers-acronyms-twitter-shortforms-expansions
//

அட்டகாசம்! அருமையான அறிமுகம், ரொம்ப நல்லா இருக்கு இந்த site, கண்டிப்பாக உபயோகப்படும்.
நன்றி வெங்கிராஜா

(அட இது கூட நல்லா இருக்கே [ அ.அ.அ அட்டகாசம்! அருமையான அறிமுகம்])!

Sujay 11 August 2009 at 9:29 AM  

என்னை கேட்டால் இப்போது இரவில் எடுப்பதை தவிர்க்கலாம்,மாலை நேரத்தில் அஸ்தமன வேலையில் பழகலாம். போக போக எளிதாகிவிடும்...இரவுகளில்,நான் ஐ.எஸ்.ஓ பக்கம் அதிகம் பிரவேசிப்பது இல்லை. ஆவல் இருந்தாலும், அதிக நேரமும், பொறுமையும் தேவை. இரண்டுமே இங்கு கொஞ்சம் குறைவு. டர்டி ஹேரி அருமையான, நான் ரசித்த படங்களில் ஒன்று, வித்தியாசமான படம். கொஞ்சம் கடினம்தான் எனக்கு, ஆனால் தமிழில் சொல்வதே ஒரு தனி சுகம்தான்.

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP