மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

02-Aug-2009

நண்பர்கள் தின வாழ்த்துகள்!

ஜென்சி அம்மாவின் மேன்மை குணங்களை அண்ணன் ரவிஷங்கர் எழுதியிருந்தார். பின்னூட்டத்தில் இழை இழையாக பிரியாத குரல் அது என்று போட்டிருந்தேன். அதற்கு பதிலாக, அது ராஜாவின் ரெக்கார்டிங் தரம் என்று சொன்னார் ரவி. எனக்கு இதில் டெக்னிக்கல் பட்டறிவு சுத்தமாக கிடையாது. திரையிசையைத் தவிர பெரிய ஞானமும் இல்லை. எப்போதாவது சிம்பொனி, ராக் எல்லாம் கேட்பேன். பாப் சுத்தமாக பிடிக்காது. மெட்டல் தான் என்னுடைய ஃபேவரிட். வீடியோவுக்காக சிற்சில பாடல்கள் பிடிக்கும். தொடையைத்தட்டி தட்டி வீட்டுப்பெரியவர்கள் எல்லாரும் கேட்பார்கள். தங்கை பரதம் கூட ஆடுவாள். நமக்கு தான் ஒன்றும் உருப்படியில்லை. வலைப்பூ தொடங்கிய புதுசில் பிடித்த பாடல்களை கிழமைக்கொரு கீதம் என்ற பெயரில் சிலாகித்தேன். பின்னாளில் பிடிக்காமல் போய் டெலீட்டிவிட்டேன். இப்போதெல்லாம் ஒலக சினிமா சவுண்ட் ட்ராக்குகள் பிடிக்கின்றன. உபயம்: என்னியோ மொரிக்கோனி. யூடியூபில் சமீபத்தில் சுட்டவை இவை. நம்மூர் இளைஞர்கள் இமிடேட் செய்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது.. சூப்பர்ப். இவர்கள் எல்லாம் கண்டுகொள்ளப்படாமலேயே போய்விடுவது தான் துயரம். அன்பர்கள் சப்ஸ்க்ரைப், பின்னூட்டம் எல்லாம் போட்டால் மகிழ்ச்சியடைவார்கள்(வேன்).அப்புறம் இது, நண்பர்கள் தின ஸ்பெஷல்! உளங்கனிந்த வாழ்த்துகள் நண்பர்களே!கொசுறு: யூட்யூப் காணொளிகளை தரவிறக்கம் செய்ய இரண்டு சுலபமான வழிகள் உள்ளன. ஒன்று, இந்த யூட்யூப் டௌன்லோடர். தரவிறக்கம் மட்டுமின்றி, எம்.பி3, ஐபாட் போன்ற கருவிகளுக்கு ஏற்றார்போல் உருமாற்றமும் செய்யலாம். மற்றொன்று ஐ.டி.எம் எனப்படும் இண்டர்நெட் டௌன்லோட் மேனேஜர். கிட்டத்தெட்ட தரவிறக்க நேரத்தை பாதியாக்குகிறது. அபரிமிதமான வேகம்.
_____________________________________________________________________

10 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) 2 August 2009 at 6:51 PM  

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

துபாய் ராஜா 2 August 2009 at 7:44 PM  

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் 2 August 2009 at 8:04 PM  

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.

மண்குதிரை 3 August 2009 at 11:00 AM  

வாழ்த்துக்கள்

ஆ! இதழ்கள் 3 August 2009 at 1:46 PM  

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் வெங்கி...

அனைத்தும் இனிமையான பாடல்கள்...

வீட்டில் போய் கேட்கிறேன்.

:)

நேசமித்ரன் 3 August 2009 at 3:53 PM  

வெங்கி.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

வால்பையன் 3 August 2009 at 6:44 PM  

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

சப்ராஸ் அபூ பக்கர் 3 August 2009 at 7:33 PM  

உங்களுக்கும், எல்லா நண்பர்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.....

sakthi 3 August 2009 at 10:20 PM  

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

யாத்ரா 4 August 2009 at 2:16 AM  

I really enjoyed venky. especially with punnagai mannan bit. superb. thanks pa

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP