மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

17-Aug-2009

ட்ரிவியா

Trivia

வெளிவரும் மூச்சுக்காற்றிலிருந்து ஒரு சூறாவளி பிறக்கிறது. ரேடியோவின் ஒலியலைகள் என் டம்மாரத்தைக் கிழித்துவிட்டு மூக்கில் சிவப்பாக சுரக்கிறது. அக்கா மகனின் சின்னசின்ன ஹெலிகாப்டர் பொம்மைகள் நிலாவில் மோதி உடைகின்றன. ஊற்றிக்கொண்டிருக்கும் வோட்கா கோப்பையின் விளிம்புகளைப் பெயர்த்து எரிமலைப் பிரவாகம் போல அறையெங்கும் தெறிக்கிறது. எழுந்து காலை எடுத்து ஒரு எட்டுவைக்க அதலபாதாளத்திற்குள் தள்ளப்படுகிறேன். கண்ணீரும், வியர்வையும் கலந்து உடலெங்கும் அருவியாய் கொட்டுகிறது. எல்லாமே பெரிசு பெரிசாக தெரிகிறது. சாவித்துவாரம் வழியாக வெளியே வந்து உடல் பொத்தென்று தபால் பெட்டிக்குள் விழுகிறது. கைவிரல்கள் கண்களின் கோணம் தாண்டி நீள்கிறது. பயத்தில் ஓடத்துவங்கும் போது உலகம் வேகமாக சுழல்கிறது. நிலைகுலையும் நான் ஏதுமற்ற வெற்றிடத்தில் விழுந்துகொண்டே இருக்கிறேன். மிட்டாய் வாங்கலாம் கைவீசு, ராஜா தேசிங்கு குதிரை, குரு ப்ரும்மா குரு தேவோ குரு ஷாக்ஷாத், மைல்ஸ் டு கோ பிஃபோர் ஐ ஸ்லீப், பரிசுத்த ஆவியே! பரம பிதாவே! She sells sea shells on the seashore, நாட் தட் ஐ லவ் சீசர் லெஸ், ஐ லவ் ரோம் மோர், வானம் எனக்கொரு போதி மரம், வீ டோண்ட் நீட் நோ எட்ஜுகேஷன், வேன் காஹ், அய்ன் ராண்ட், மகேந்திரனின் உதிரிப்பூக்கள், ஆர்ட் ஆஃப் லிவிங்... எல்லாம் பெரிசு பெரிசாக கண்மணிகளில் நிழலாடின. சிலபல தாவணிகளும் பஃப் கை வைத்த சுடிதார்களும், ஸ்லீவ்லஸ் ஜாக்கெட்டுகளும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களில் பல்லைக்காட்டிக்கொண்டிருந்தார்கள். என்னைத்தவிர எல்லாரையும் ஊதிப் பெரிசாக்கிவிட்டார்களா இல்லை என்னை கசக்கி சிறுசாக்கிவிட்டார்களா என்று பிடிபடவில்லை. புத்தக அலமாரிகளில் எழுத்துகள் எல்லாம் என் ***னை விட பெரிசாக இருக்கின்றன. எல்லாம் ஒரு புகைமூட்டத்திற்குள்ளேயே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஈக்களும் ஈசல்களும் என்னை விழச்செய்கின்றன. கற்றாழையின் பசையில் சிக்கிக்கொண்டு ஏ ஸ்பேடு சீட்டின் மேல் பக்கவாட்டாக ஒட்டிக்கொள்கிறேன். புகைமூட்டத்துடன் இப்போது ஒரே நீர்க்குமிழிகள் வேறு. சகிக்கமுடியாத வாசனையில் கிடத்தப்படுகிறேன். குளிரத்தொடங்குகிறது, தொண்டை எல்லாம் எரிகிறது. எங்காவது ஏதேனும் விளக்கிலிருந்து பூதம் வருமென்ற நம்பிக்கையில் புழுக்கைகளின் குவியல்களில் மேரியோவைப்போல தாவித்தாவி கோரப்பற்கள் கொண்ட நச்சுச்செடிகளில் இருந்து தப்பியோடுகிறேன். அலமாரியின் ஓரத்தில் ஒரு புக்மார்க் தடுக்கி நறுமணமும் துர்நாற்றமும் சரிபாதியாக கலந்திருந்த அந்த ஏதோவுக்குள் நீந்தி அகழியின் கரைசேர்ந்தேன். கடைசி சொட்டோடு இழுத்துச்செல்லப்பட்ட நான் தின்ற அரை பாக்கெட் சிப்ஸ், கோழித்தொடை, ஸ்ப்ரைட்டோடு மேஜை மீது வழிந்துகொண்டிருந்தேன்.
_____________________________________________________________________

12 comments:

Cable Sankar 17 August 2009 at 9:33 am  

சரக்கடிச்சு மட்டையானதை அழகாய் சொல்லியிருக்கிறீர்களா.. வெங்கி..?

Vidhoosh 17 August 2009 at 10:41 am  

இப்படிதான் உளறுவீங்களோ?
--வித்யா

வெங்கிராஜா 17 August 2009 at 12:06 pm  

ஹிஹி..
நன்றி கேபிளண்ணே...
நன்றி விதூஷ்!

மண்குதிரை 17 August 2009 at 12:10 pm  

-:)

சேரல் 17 August 2009 at 2:12 pm  

//என்னைத்தவிர எல்லாரையும் ஊதிப் பெரிசாக்கிவிட்டார்களா இல்லை என்னை கசக்கி சிறுசாக்கிவிட்டார்களா//

:)

-priyamudan
sEral

Sujay 18 August 2009 at 10:44 am  

ஒரு குடிமகனின் உலகத்தை தெளிவாக காட்ட முயன்றது பாராட்டத்தக்கது.

வெங்கி, இன்னும் சில நல்ல புகைப்படங்களை சீக்கிரமே எதிர்பார்க்கலாம், என் பக்கத்தில் .

ஆ! இதழ்கள் 18 August 2009 at 11:25 am  

இவ்வளவு கேவலமாகவா இருக்கும்? எனக்கு வேண்டாம்.

:)

நேசமித்ரன் 18 August 2009 at 9:24 pm  

:)

Your beard suits this article..!

Achilles 19 August 2009 at 1:46 pm  

Nice one... :)

வெங்கிராஜா 22 August 2009 at 4:26 pm  

வருகைக்கு நன்றி மண் குதிரை. :)
நன்றி சுஜய்.. உங்கள் குதிரைப்படங்கள் வெகுவாக கவர்கின்றன! தொடர்க!
அனந்த்... எனக்கும் தெரியாது, ஆனா நானும் ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டேன் பாருங்க, அதுக்காக ஒரு சின்ன பிட்டு!
நேசன் சார்... நம்பிட்டீங்களா? அய் ஜாலி!
நன்றி ஏஷில்ஸ்!

ஆதிமூலகிருஷ்ணன் 29 August 2009 at 11:18 pm  

ரொம்ப மெதுவாகத்தான் வாசித்தேன்.. அப்படியும் தலைசுத்துது..

(அவனா நீயி..)

வெங்கிராஜா 30 August 2009 at 2:48 pm  

ஹிஹி... தேங்க்ஸ்.

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP