மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

17-Aug-2009

வனவிலங்கு புகைப்படங்கள்

புகைப்படங்களை இணையத்தில் வெளியிட நிறைய ஜகா இருக்கிறது. ஃபோட்டோ ப்ளாக் எனப்படும் Genre (ஸான்ரு / பகுப்பு?) இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வழக்கில் இருக்கிறதென்று கூகுளாண்டவர் சொல்கிறார். இன்னமும் அனேக இந்தியர்கள் ஃப்ளிக்கரிலேயே ஏன் விழுகிறார்கள் என்று புரியவில்லை. அது பதிவு மாதிரி அல்ல, வெறும் ஒரு ஆல்பம் தான். பட டிசைனர்கள் டீவியண்ட் ஆர்ட்-டில் கூடுகிறார்கள், அதுவும் ஒரு விதமாய் கலெக்ட் செய்து ஒத்த துறையினரிடம் சஜெஷன் கேட்பதற்கு மட்டுமே. தீவிர ஆர்வலர்களும், புகைப்பட வித்தைக்காரர்களும் பிக்சல் போஸ்டில் இருக்கிறார்கள். என்ன தான் தரம் கூடியதெனினும் இது வேர்ட்பிரஸ்.ஆர்க் போல பர்ஸை பதம் பார்க்கும் வழிவகை (வொய் ப்ளட்? சேம் ப்ளட்). இவை தவிர ப்ளாகர், வேர்ட்பிரஸ் (அந்த மோனோக்ரோம் தீம் சும்மா நச்!), மூவபிள் டைப் (இதில் தமிழ்ப்பதிவர்கள் யாரும் இருக்கிறார்களா? வியத்நாம், கொரியா மக்கள்ஸ் எல்லாம் இங்குண்டு!) என்றுமே கூட ஃபோட்டோக்காரர்கள் இருக்கிறார்கள், நம்ம பிட் குழுவினர் மாதிரி. இதுவும் தவிர நண்பர்களின் கூடாரங்களான ஆர்குட், ஃபேஸ்புக்கிலும் மக்கள் கோடிக்கணக்கான படங்களை வெளியிடுகிறார்கள். என்னுடைய பெர்சனல் சாய்ஸ் அமினஸ்3. ரொம்ப குறைச்சலாகத்தான் பயனர்கள் இருக்கிறார்கள், ஆனாலும் அட்டகாசமான இலவச சேவை. அவசியம் போய்ப்பாருங்கள். டைனி பிக்கிலோ ஃபோட்டோ பக்கெட்டிலோ போடுவதை விட இங்கு போட்டு லிங்க்கலாம் என்பது திண்ணம். போப்பா... ப்ளாகரில் தான் போடுவேன் என்று அடம் பிடிப்பவர்கள் இந்த தீம் முயன்று பாருங்கள், அமினஸ்3, பிக்சல் போஸ்ட் மாதிரி இண்டர்ஃபேஸ் கொண்டுவரப் பார்திருக்கிறார்கள்.

வேண்டுகோள்: தமிழில் கதை, கவிதை எல்லாம் எழுதுபவர்கள் கூடவே எங்கிருந்தாவது சுட்டு படம் போடுகிறீர்கள், அவசியம் புகைப்படக்காரரின் பெயரையோ, லிங்கையோ கொடுங்கள். இன்னும் ஒரு படி மேலே போய், படம் எடுக்கும் பதிவர்கள் சீவீயார், கருவாயன், அனந்த் ஏனையோரின் படங்களைப் போடலாம், பொருத்தமாக (அனுமதியோடவே தான்). நல்லா இருக்கும்ல?

நிக்கான் டி-40ல் எடுத்த ஆரம்பப் படங்கள், கிண்டி பூங்காவிலிருந்து.
Click on photos to enlarge. People who want photos with original resolution shall mail me.


டிஸ்கி: ப்ளாகருக்கு கிறுக்கு பிடித்திருக்கிறதா? எல்லா தளங்களிலும் முதலில் அப்லோடு செய்யும் படம் முதலில் பப்ளிஷ் ஆகும், இல்லையா? இங்கு ஏன் ரிவர்ஸ் ஆகிவிடுகிறது? சரி, இங்கிருக்கும் விலங்குகள் வாயிலிலிருந்து கொல்லை வரை எடுத்து, வைசி-வெர்ஸா பப்ளிஷ் ஆகிவிட்டன. மயில், வெள்ளைக்கழுகு, சிலந்தி, துரு ஏறிய பெஞ்சு, இந்தியக்குரங்கு, ஆந்தை, லெமூர் குரங்கு, பெலிகன், நாரை, கல் பறவை என எல்லாம் ஒரு தினுசான தலைகீழ் நிரலில் இருக்கின்றன.
_____________________________________________________________________

7 comments:

Sujay 24 August 2009 at 11:19 am  

வெங்கி இன்னும் சில படங்கள் உள்ளது, கட்டாயம் ஏற்றப்படும். அமினஸ்3 நன்றாக உள்ளது. என் சிறந்த படங்கள் போட ஒரு இடம் தேடிக்கொண்டிருந்தேன். இது சரி வரும் என்று எதிர்ப்பார்கிறேன். என் ப்ளாகர் பக்கத்திற்கு ஒரு நல்ல தீம் வேண்டும். ஆராய பொறுமை இல்லை...பார்த்த எதுவும் என்னை ஈர்க்க இல்லை. ஏதாவது கிடைத்தால் சொல்லும்.

அழகான மயிலுடன் உபயோகமான தகவல்கள்...

அ.மு.செய்யது 24 August 2009 at 11:38 am  

வெங்கி,

கிண்டி பூங்காவை வளைத்து வளைத்து எடுத்து அசத்தியிருக்கிறீர்கள்.

அடுத்து..என்னுடைய பதிவில்,உங்கள் புகைப்படங்களை உபயோகிக்கும் போது,கண்டிப்பாக உங்கள் பெயரையும்
படத்தையும் போடுகிறேன்.

Vidhoosh 24 August 2009 at 11:39 am  

நம்ம கிண்டி பூங்காவா? அருமை...
சூப்பர்.
வித்யா.

சேரல் 24 August 2009 at 5:06 pm  

//சிலந்தி, துரு ஏறிய பெஞ்சு//

வெங்கி,

இவை இரண்டும் என் விருப்பங்கள். அழகான புகைப்படங்கள்.

-ப்ரியமுடன்
சேரல்

வெங்கிராஜா 24 August 2009 at 8:36 pm  

தீம் ஒன்று பரிந்துரைத்திருக்கிறேனே... திரும்ப போய்ப்பாருங்கள், இந்த பதிவிலேயே ஒரு லிங்க் இருக்கிறது. சரியாக வேலை செய்யாவிட்டால் தெரியப்படுத்தவும், மெயில் அனுப்புகிறேன் சுஜய்.

நன்றி செய்யது. உடனுக்குடன் இப்படி ஒரு ஆமோதிப்பா! பில்லாவில் ரகுமான் சொல்லுவாரே... "நான் அப்படிங்கறத விட நாம அப்படிங்கறதுக்கு பவர் ஜாஸ்தி! நன்றிகளைத்தவிர என்ன சொல்ல முடியும் என்னால்?

நன்றி விதூஷ். நம்ம கிண்டியே தான். அன்று எஸ்.பி.ஓ.ஏ பிள்ளைகள் டூருக்கு வந்திருந்தார்கள்... அவர்களும் கொள்ளை அழகு! எடுக்க முயற்சித்தேன், ஆசிரியர்கள் அத்தனை விரும்பவில்லை.

நன்றி சேரல். உங்கள் கவிதைகளுக்கும் பொருந்தினால் உபயோகித்துக்கொள்ளுங்கள். பின்னூட்டத்திற்கு நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் 29 August 2009 at 11:11 pm  

நான் தேடிக்கொண்டிருந்த தகவல்கள் (ஆனா பயன்படுத்துவேனா தெரியாது, ஹிஹி..) நன்றி.!

வெங்கிராஜா 30 August 2009 at 2:31 pm  

பின்னூட்டத்திற்கு நன்றி சார். அடிக்கடி வந்து போகவும். :)

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP