கொலாஜ் 21.9.09
வெள்ளி விழா!
தனித்தளம் தொடங்கி வெற்றிகரமான 25-வது வாரம்! தோழர்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துகள்.
~
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வருடாவருடம் கட்டிடக்கலை மாணவர்களுக்கான இந்தியக் கூட்டமைப்பான NASA National Association for Students of Architecture-இன் தென்னிந்திய கலந்தாய்வு, போட்டிகள் இன்னபிற நடைபெற்றது. கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் 17 கல்லூரிகள் பங்குகொண்டன. முக்கியப் போட்டியின் சாரம் 'Blob'-itecture எனப்படும் வடிவில்லா வடிவங்கள் கொண்ட கட்டிடக்கலை. இதற்கான எங்கள் கல்லூரி மாணவர்களின் கட்டிட வடிவமே குஜிலிபான்ஸாக எனக்கு பட்டது... இரண்டு மரங்கள் அருகருகே இருப்பதாக வைத்துக்கொள்வோம்- பனித்துளிகள் படர்ந்த இரண்டு மரங்கள். இங்கே மரங்களை அகற்றினால், வெறும் பனித்துளிகள் படிந்திருந்த வெளி நமக்கு கிடைக்கிறது, கட்டிட வடிவமாக அந்த வடிவற்ற வடிவத்தைக் கற்பித்துக்கொண்டு கவின்கலை காட்சியரங்கம் ஒன்றை வடிவமைத்தோம். இப்போட்டியில் இரண்டாம் பரிசை எங்கள் கல்லூரி மாணவர்கள் பகிர்ந்து கொண்டோம். ஆட்டம்-பாட்டத்தில் நாங்கள் க்ராண்ட் சாம்பியன்கள்! மைக்கேல் ஜாக்ஸனின் வாழ்க்கை வரலாற்றை நடன-நாடகமாக அரங்கேற்றிய போது, திரையைக் கிழித்துக்கொண்டு எம்.ஜே-வின் மூன்வாக் செய்த கணம் அரங்கமே அதிர்ந்தது! ஒட்டுமொத்த தரவரிசையிலும் இரண்டாம் இடத்தை எங்கள் பல்கலைக்கழகமே பிடித்தது. இது தவிர, புகைப்படப் போட்டி ஒன்றும் நடந்தது. 'Power and control' என்ற தலைப்பில் எனது படத்தையும் அனுப்பினேன். மீட்டருக்கு மேல் போட்டுக்கொடுத்தார்கள்.
~
உன்னைப்போல் ஒருவன் படம் பார்க்க ஆவலாய் இருக்கிறது. இன்னொரு காரணம் சதிலீலாவதி, மே மாதம் போன்ற படங்களில் கு.ந-வாக இருந்து இப்போது ரீ-எண்ட்ரி தந்திருக்கும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. அவரது சுவாரசியமான பதிவு ஒன்று இங்கே.
~
எனக்கு மிகப்பிடித்த 'கண்கள் இரண்டால்' பாடலை மிஞ்ச ஒரு பாடல் அதற்குப்பின் வரவில்லை, IMO. ஏற்கனவே ஷெபின் கித்தாரில் செய்த அற்புதத்தை நண்பர்கள் தினப்பதிவில் சொல்லியிருந்தேன். படத்தில் இடம்பெறும் புல்லாங்குழல் மெட்டு ஐஸ்க்ரீமில் வழியும் தேன் ரகம். கூடவே ஹிந்தி வீடியோ ஒன்றினுக்காக டி.ஜே ரீமிக்ஸ் வடிவம் ஒன்றும், கவர் மற்றும் குழல் வடிவங்களும் இதோ. நன்றி ஜேம்ஸ் வசந்தன் சார்!
~
டெட்.காம் உலகப்புகழ்பெற்ற மனிதர்களின் பேச்சுகளை தொகுக்கும் ஒரு வலைத்தளம். சுஜாதா க.பெ-வில் இதைப் பற்றி சொல்லியிருந்தார். கிருபா சார் ட்விட்டரில் இதன் சென்னை அத்தியாயம் பற்றி எழுதியிருந்தார். வி.எஸ்.ராமச்சந்திரனின் பேச்சு டெட்.காமில் சேர்க்கப்பட்டிருக்கிறது. டெட்.காமில் டாப் 10 வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன், அதிலும் குறிப்பாக ஜானி லீ வழங்கிய சொற்பொழிவில் Wii ரிமோட் என்ற 50$ சமாச்சாரத்தைக்கொண்டு அவர் செய்யும் வித்தைகள் ரொம்ப ரொம்ப விந்தையாக இருந்தது! ஆறு நிமிஷம் மட்டுமே பேசி, வாய்பிளக்க வைத்துவிட்டார்!
~
விநாயகர் சதுர்த்தி முடிந்து அடுத்து ரமலான் விடுப்புகள் வந்துவிட்டன. ஆயுத பூஜை விடுமுறைகள் வேறு வேகமாக வருகின்றன. சீரியல், பெர்ஃபார்மென்ஸ், ரியாலிட்டி, டாக், விமர்சனம், வெட்டிப்பேச்சு எல்லாம் பார்ப்பதை நிறுத்தி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. கே தொ.கா அல்லது செய்திகள் பார்ப்பேன். கவுண்டமணி என்ற நிகரற்ற கலைஞன் தோன்றினால் மட்டும் நகைச்சுவை. கடந்த வி.ச.வி-யில் அப்படி இப்படியென்று 20-25 படங்கள் வளைத்து வளைத்து பார்த்தாச்சு. அடுத்த அசைன்மெண்ட் இப்போது ரெடி. பார்க்க ஆசைப்படும் திரைப்படங்கள்: முகவரி, அலைபாயுதே, சத்யா, ஆஹா என்ன பொருத்தம், ரமணா, இருவர், முதல்வன், ஆண்பாவம், கண்ட நாள் முதல், கில்லி, நெற்றிக்கண். மூன்று படங்களாவது காணக்கிடைத்தால் திருப்தியடைவேன். தீபாவளிக்கு சந்திரமுகியாமே?
~
நர்சிம் அண்ணன் 'ஏதாவது செய்யணும் பாஸ்' பதிவை அவரது என்'ணங்கள் பதிவில் லிங்கியிருந்தார். 180 பேர் அங்கிருந்து மட்டும் அந்த பதிவு வந்து சேர்ந்திருக்கின்றனர். நன்றிண்ணே! அவருக்காகவாவது அந்தப் பதிவின் தொடர்ச்சியை எழுதவேண்டும். இப்போது ஹை-ஸ்பீட் படங்களின் மேல் பித்து பிடித்ததுபோல துளி, நகரும் வாகனங்கள், பறவைகள் எல்லாவற்றையும் எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறேன். டிப்ஸ் வெல்கம். பதிவுலகத் தொடர்புகள் அதிகரித்துக்கொண்டிருப்பதாலும், பதிவுகள் படிப்பதும் படிப்படியாக ஜாஸ்தியாவதலும் சும்மா ஒரு சேஞ்சுக்கு வலைப்பக்க விமர்சனங்கள் எழுதலாமென்று பார்க்கிறேன். எனி கமெண்ட்ஸ்? ஹாலிவுட் பாலாண்ணே நான் எழுதுவதாகச் சொன்ன பல்ப் ஃபிக்ஷன் பதிவை ரொம்ப எதிர்பார்ப்பதாக சொன்னார். பயமாக இருந்தாலும், சத்தியமா எழுதுறேன் பாஸ்! பல்கலைக்கழகக்காரர்கள் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்களே!
பி.கு: கேபிள் சங்கர் அண்ணன் தனது படத்தின் போஸ்டரில் மேலே இருக்கும் உறைந்த துளியை உபயோகிக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். பதிலுக்கு என்ன கேட்கலாம்?
____________________________________________________________________________________________________
12 comments:
////
கற்பித்துக்கொண்டு கவின்கலை காட்சியரங்கம் ஒன்றை வடிவமைத்தோம்
////
அதனோட ஃபோட்டோ போட்டிருக்கலாமே வெங்கி! :)
/////
சும்மா ஒரு சேஞ்சுக்கு வலைப்பக்க விமர்சனங்கள் எழுதலாமென்று பார்க்கிறேன்
/////
என்னை விட அதிகமா சந்தோசப்படுறவங்க யாராவது இருப்பாங்களா! :) :)
பொறுமையா எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு வாங்க. வெய்ட்டிங்!!!!!!
//////////
பார்க்க ஆசைப்படும் திரைப்படங்கள்: முகவரி, அலைபாயுதே, சத்யா, ஆஹா என்ன பொருத்தம், ரமணா, இருவர், முதல்வன், ஆண்பாவம், கண்ட நாள் முதல், கில்லி, நெற்றிக்கண்.
///////////
இதில் சத்யா, ஆண்பாவம், நெற்றிக்கண் - என்னோட எவர் க்ரீன். நெற்றிக்கண் டிவிடி இருக்கு (இருந்தது. இப்ப தமிழ்மசாலா பிரேம் கிட்ட இருக்கு). மற்ற் ரெண்டு படங்களின் டிவிடி எவ்வளவோ முயன்றும் கிடைக்கலை.
இந்தியா வரும்போது (??) தேடிப்பார்க்கனும்.
போட்டோ வழக்கம் போல கலக்கல்..
எம்.ஜே மூன் வாக் நீங்க தான் பண்ணிங்களா வெங்கி ???
ரமலான் வாழ்த்துகளுக்கு நன்றிகள் !!!
//அதனோட ஃபோட்டோ போட்டிருக்கலாமே வெங்கி! :)//
சீனியர்கள் தான் பெரும்பாலும் உழைத்தார்கள். அதை நான் போடுவது நியாயமாகாதல்லவா?
//என்னை விட அதிகமா சந்தோசப்படுறவங்க யாராவது இருப்பாங்களா! :) :) //
டன்!
//மற்ற் ரெண்டு படங்களின் டிவிடி எவ்வளவோ முயன்றும் கிடைக்கலை.//
என்னிடம் ஆண்பாவம் டி.வி.டி இருக்கு. ஆண்பாவமும், சத்யா கூகுள் வீடியோவுலயும் இருக்கு. ப்ரிண்ட் தான் பிசிறடிக்கும். டி.வி-யில் படம் பார்க்கும் அனுபவமே தனிருசி!
//போட்டோ வழக்கம் போல கலக்கல்..//
நன்றி! முதல் பரிசு ஜெயிச்சிட்டோம்ல! நான் வாங்கிய முதல் பரிசாக வாழ்நாளெல்லாம் நினைவில் வைத்திருப்பேன்!
//எம்.ஜே மூன் வாக் நீங்க தான் பண்ணிங்களா வெங்கி ???//
அஜய் என்ற ஜூனியர் பய ஆடினான்... என்னைய பார்த்தா டான்சு வர்ற மாதிரி தெரியுது?
//ரமலான் வாழ்த்துகளுக்கு நன்றிகள் !!!//
:)))
பத்தி படு ஸ்வாரஸ்யம் :) கலக்குங்க வெங்கி
//பத்தி படு ஸ்வாரஸ்யம் :) கலக்குங்க வெங்கி//
டேங்க்சு பா!
வணக்கம்.
இன்று உங்கள் நட்பு கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி இனி வரும் நாட்களில் உங்களோடு உங்கள் எழுத்துக்களுடன் சேர்ந்து பயணிப்பேன்.
தோழமையுடன்
உங்கள் நண்பன் ஜெனா
”கண்கள் இரண்டால்” ஃபுளுட் இசை இன்னும் ரிஙகாரமிட்டுக்கொண்டே இருக்கிறது. ரசனை பதிவு!!!
உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்
உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்
னன் நன்றி ஜனா. உங்களுடன் உரையாட முடிந்தது குறித்து மகிழ்ச்சி!
நன்றி அடலேறு. அவ்வப்போது வந்து போகவும்!
தமிழ்10 திரட்டியினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
அண்ணே நான் சத்யபாமாவுலதான்ணே படிச்சேன்.
(எனக்கு என் பழைய ஃபிகர் ஞாபகம் வந்துருச்சு)
:)
Venkat its very interesting..."கண்கள் இரண்டால்" flute version excellent....good taste tooo
Post a Comment