மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

07-Nov-2009

கொலாஜ் 9/11/09

போன மாசம் தொடர்ச்சியாக பதிவிட முடியவில்லை. கல்லூரி வேலைகளில் மூழ்கி முத்தெடுத்தாச்சு. ஒரு கல்லூரியை வடிவமைப்பது தான் வேலை. நத்தை வடிவில் ஒரு கட்டிடம் கட்ட முயன்று ஒரு மாதிரியாக முடித்துக் கொடுத்தேன். வடிவம் நல்லா இருந்தாலும் வட்டத்தின் அடிப்படையில் உருவானதால் இடம் விரயமாவதாக சொன்னார் எக்ஸ்டெர்னல் வாத்தி... பார்த்துக்கலாம்.அடுத்த அசைன்மெண்ட், சென்னை நகரில் ஒரு பூங்கா. வெறும் பூங்கா என்றில்லாமல், கூடவே உபயோகப்படும் இடங்களாகவும் வடிவமைப்பது. அதில் விசேஷம் என்னவென்றால், இது ஒரு தேசிய அளவிலான போட்டி. வெற்றிபெறும் வரைபடம் அநேகமாக கட்டமைக்கப்படும். எனவே, சென்னையில் எந்த இடத்தில் பூங்கா கட்ட இடமருக்கிறது என்று சொல்லவும் (மொக்கை பதில்கள் வேண்டாம், ப்ளீஸ். மொத்த இடம் 4 ஹெக்டேருக்குள் இருக்கவேண்டும்)

சென்னையில் பெரிய பெரிய கட்டிடங்கள் வரப்போகின்றன. ஸ்பென்சருக்கு எதிரில் இந்தியன் எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ் பக்கம் போயிருப்பீர்கள். சென்னையில் மீதமிருக்கும் பெரிய காலியிடங்கள் வெகுசில. அவற்றில், சற்றே பெரிய ஏரியா. நிச்சயம் 50C-க்கு விக்கலாம், கால்வாசிக்கும் கம்மி இடத்தை. சத்யம் சினிமாஸின் 8 ஸ்க்ரீன் மல்ட்டிப்ளெக்ஸ், ஏறத்தாழ 60 அயல்தேச ப்ராண்ட்களின் பிரத்தியேகக் கடைகள்... முழுக்க முழுக்க பச்சைக் கட்டிடம் (Eco-friendly) என ஏகப்பட்ட முஸ்தீபுகளோடு வருகிறது. தேனாம்பேட்டையில் கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருப்பதையும் பார்த்திருக்கலாம். அது ஒரு ஐந்து நட்சத்திர விடுதி.. நம்ம சோழா தான். அறுநூறு அறைகள் உண்டாம்! அதே வீதியில் ஒன்றரை கி.மீ தொலைவில் ரமீ மால் என்றொன்றும் வருகிறது. அம்பா ஸ்கைவாக் வந்து சற்று ஏமாற்றியதைப் போலில்லாமல், இவை இன்னும் கெத்தாக இருக்கப் பிரார்த்திப்போம். சென்னையின் இரண்டாம் ட்ராஃப்ட் வரைபடம் தயாராகிக்கொண்டிருக்கிறது. பூந்தமல்லி தாண்டியும் நீண்டு விரிகிறது. ஸோ, சென்னையின் மக்கள்தொகை மட்டுமே 80 இலட்சமாம்!

ஜன்னலோரம்

நீல லாரி

சிதறுதுளி

மோபியஸ் ரிங்

வர்ல்பூல்

எங்க ஏரியாவிலும் மழை பொத்துக்கொண்டு கொட்டுகிறது. நல்லவேளையாக போரூர் ஏரியை பழுது பார்த்து, மேடுகள் எல்லாம் அமைத்திருக்கிறார்கள். போன வருடமெல்லாம் இடுப்பளவு நீரில் சைக்கிள் மிதித்தது நினைவிருக்கிறது. தீபாவளிககு வந்து போனதிலேயே செம காண்டாகிவிட்டது. பதிவர் சந்திப்பு ஏற்கனவே பணால் ஆயிருச்சு. சரி, படத்துக்கு போலாம்னு பார்த்தா, அதுவும் புட்டுக்கும் போலத்தெரியுது. ஒரே பயன் ட்விட்டரில் ஹாஸ்யமான, சுவாரஸ்யமான ட்வீட்டுகள் வாசிக்க கிடைத்தது மட்டுமே. ஃப்ளிக்கர் அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்த ஃபோட்டோ வாக்கும் டுமீல். எப்போதாவதுதான் ஃப்ளிக்கரில் மொக்கை படங்கள் பார்க்கலாம். மலையாளத்தில் 'அடிபொளி' என்கிறார்கள். அவை மட்டுமே அங்கு கிடைக்கின்றன. சமீபத்தில் மணிக்கணக்கில் ரசித்த திரி இது.

சத்யம் சினமாஸின் ப்ளர் போயிருந்தேன். அட்டகாசமான இடம்! குறிப்பாக நிண்டெண்டோவின் WII. ஏற்கனவே போட்டிருந்தாலும், மறுபடி இதைப் பாருங்கள்.

சல்லிசான தொழில்நுட்பம் எத்தனை பராக்கிரம் படைக்கவல்லது என்றும், தெற்காசியர்கள் எப்படி இதில் பணம் பண்ணுகிறார்கள் என்பதும் விளங்கும். அதைவைத்தே எவ்வளவு எழவெடுக்க முடியும் என்பதற்கு அன்று பார்த்த ஷார்ட்ஸ் என்றொரு திராபை எ.கா. குழந்தைகள் படத்திருவிழா என்று போட்டிருந்தார்கள், ராபர்ட் ராட்ரிகெஸ் என்றும் போட்டிருந்தார்கள். சின் சிட்டி எடுத்த பிரகஸ்பதி நல்லா பண்ணியிருப்பார்னு நம்பி போனேன். கோட்டைச்சுவரில் நடக்கும் முதலைகள், மூக்குச்சளி அரக்கன், வானவில் கூழாங்கல், வேற்றுக்கிரக காமெடி பீஸ்கள்.... த்தா! படமாடா இது? திரையரங்கில் நான் பார்த்த மிகக் கேவலமான (படம் என்று சொல்லமுடியாது) சனியன் இது தான்.

கிரிக்கெட் டென்ஷன்ஸ் ஆஃப் இண்டியா ஆகிவிட்டது. முன்பெல்லாம் ஹர்ஷா போக்லேவும் பார்த்தோ முகர்ஜியும் மொக்கை போடுவதையெல்லாம் கூட கேட்டுக்கொண்டிருப்பேன். இப்போது க்ரிக்கின்ஃபோவோடு மட்டுமே சரியாப்போச்சு. சித்து எல்லாம் பேசுவதை கேட்பதற்கு, "சார் ரன் கே லியே", "சௌக்கா... பஹூத் அச்சா ஷாட் ஹே!" க்களை கேக்கலாம் போலிருக்கிறது. பிட்ச் ரிப்போர்ட், டாஸ் எல்லாம் கடைசி உலகக்கோப்பையில் பார்த்தது. அடுத்த கோப்பை இந்தியால இல்லை? இணையத்தில் சச்சின் vs. பாண்ட்டிங் சண்டைகளும் கடுப்பைக் கிளப்புகின்றன.. என்ன விதமான கேள்வி இது? ரஜினிகாந்தா விஷாலா என்பது மாதிரி? ஹ!

இளையராஜா 'பா' என்ற பிக்பி படத்திற்கு இசையமைத்திருக்கிறாராம். ட்ரெய்லர் வயலின்கள்... யானைகள் நெஞ்சில் மிதித்தல்!பல நாட்கள் தலைமறைவாக இருந்தாலும், விதூஷ் தோண்டித் துருவி விருது ஒன்று கொடுத்திருக்கிறார். அன்புக்கு நன்றி. நந்தா டெத் ட்ரைலாஜி பற்றி எழுத சொல்லியிருக்கிறார். அவசியம் செய்றேன் சகா.
_________________________________________________________________________________________________________________

11 comments:

Cable Sankar 9 November 2009 at 4:40 pm  

கலக்கலான கலர்புல் கொலாஜ்..

ஆ! இதழ்கள் 9 November 2009 at 7:53 pm  

செம கலக்கல்...

நான் அந்த இன்ஃப்ரா வேலையை யூடியுபில் சில மாதங்கள் முன்பு பார்த்தேன். அமேசிங்.

பின்னோக்கி 9 November 2009 at 8:20 pm  

paa நல்லாயிருக்கும் போல..

வெங்கிராஜா | Venkiraja 9 November 2009 at 8:51 pm  

நன்றி கேபிள் சார்!
நன்றி அனந்த்!
ஆமாம் பின்னோக்கி, இன்னைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸிலும் சின்ன ஆர்ட்டிகிள் வந்திருக்கு பாருங்க. ராஜா-ஸ்ரீராம்-பச்சன்... குழந்தைகள் தின ரிலீஸ்.

நேசமித்ரன் 9 November 2009 at 9:37 pm  

கலக்கல் நல்லா இருக்கு

ஹாலிவுட் பாலா 9 November 2009 at 10:17 pm  

இனிமேலும்.. ப்ளாக் வந்து எழுதலீன்னா..., ட்வீட்டர்ல வந்து அடிக்கலாம்னு இன்னைக்குத் தான் நினைச்சிகிட்டே இருந்தேன்.

தப்பிச்சீங்க! ஆனாலும்.. பல்ப் ஃபிக்‌ஷன் இன்னும் முடியாம இருக்கு! எதுக்கு ஜாக்கிரதையா இருந்துக்கங்க தல! நான் ஒரே மாதிரியே இருக்க மாட்டேன்.. சொல்லிபுட்டேன்!

ஒழுங்கா... ட்வீட்டர் பக்கமே சுத்தாம.. எங்க ஏரியாவுக்கும் கொஞ்சம் விசிட்டுங்க தல..!

வெங்கிராஜா | Venkiraja 9 November 2009 at 11:57 pm  

நன்றி நேசன். உங்க ரசனைக்கும் பிடிச்சிருக்கா? நீங்க வேற ஆசாமியாச்சே!

பாலா.. நக்கல் பண்ணாதீங்க! நீங்க ஷார்ட்ஸ் பார்த்தாச்சா? 2 நாள் ஜுரத்துல படுத்தவன் தான்.. படம் படுபயங்கரம். பை த வே, பணோரமல் ஆக்டிவிட்டி எப்படி இருக்கு? என் வட்டாரங்கள்ல பயங்கரமா பேசிக்குறாய்ங்க!

ஹாலிவுட் பாலா 10 November 2009 at 2:25 am  

ஷார்ட்ஸ்? அதை நீங்க எழுதின பின்னாடிதான்.. அப்படி ஒரு படம் வந்ததே தெரிஞ்சது. லிமிடட் ரிலீஸ் போல! இந்தப் படத்தையெல்லாம் தான்.. இந்தியாவுக்கு தள்ளிவுட்டுடுவானுங்க போல இருக்கு.

==============

பாராநார்மல்... அட்டகாசம்! பதிவு எழுதி வாரக்கணக்காச்சி.

படம் பார்க்கற மாதிரி இருந்தா.. படிக்காம.. நேரா போய்.. தியேட்டர்ல உட்காருங்க!

தியேட்டருக்கு வந்துடுச்சா?

Karthik 12 November 2009 at 11:52 am  

கலக்கல் கொலாஜ். அடுத்த அஸைன்மென்ட்டுக்கு வாழ்த்துக்கள் ஆர்க்கி. :)

ஸ்கைவாக் ஓபன் பண்ணதே தெரியாது. ஆவ்வ். :(

'பா' ட்ரெய்லர் இன்ட்ரெஸ்டிங்காதான் இருக்கு. பார்க்கலாம். பாட்டெல்லாம் போனமுறை மாதிரியே ரீமிக்ஸ்தானா?

வெங்கிராஜா | Venkiraja 13 November 2009 at 10:28 am  

நன்றி பாலா! முடிஞ்சவரையில சீக்கிரம் பார்க்குறேன்.

ஹாய் கார்த்தி! போப்பா நீ! அவரு பெரிய படத்தில பாட்டு போடுறதே பெருசு! நல்லா கேக்குறீங்க டீட்டெய்லு!

ajay 7 December 2009 at 7:43 am  

hi those shots are nice.. did u take those shots??

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP