மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

07-Dec-2009

ப்ரொமோஷன்.

பீஸின் பக்கத்து சீட்டு பாஸ்கர் (கேண்டீனில் மாலை வெஜிடபிள் கட்லெட் ஸ்பான்ஸர்) காய்ந்த ரோஜாவுடன் சாலையை வெறித்துக்கொண்டிருந்தான். மாலினி செருப்பைக் காட்டியிருக்கிறாள். பின்னே, நிச்சயமான பெண்ணிடம் க்ரீட்டிங் கார்டும் ரோஜாவும் தந்தால், மெட்ராஸ் கண்ணகிகள் குறைந்தபட்சம் டி.எல்.எஃப் வளாகம் எரியுமளவிற்காவது பார்ப்பார்கள். வேறு வழியில்லாததால் (அன்று மாலை கட்லெட்டுடன் ஒரு பெப்சி வேறு), ஒரு டீச்சர்ஸ் விஸ்க்கி வரைக்கும் (என் பர்ஸிலிருந்து) சமாதானம் செய்ய நேரிட்டது. ஒழுங்காக அம்மா சொன்ன குலாப் ஜாமுன் மிக்ஸும், சிநேகிதியும் (மறக்காம அந்த 30 வகை உப்புமா கேட்டு வாங்கிட்டு வாப்பா!) வாங்கிக்கொண்டு வீடு சேர்ந்திருக்கலாம். இரண்டு நாட்களில் பாஸ்கர் பேக் டு ஃபார்ம் (ப்ராஜக்ட் மேனேஜர் ட்ரில் எடுத்திருக்கிறார்). மேற்படியெல்லாம் சுமூகமாக முடிந்து மாலினியின் கல்யாண ரிசப்ஷனில் (ஊஞ்சலாடும் குழந்தையுடன் கூடிய) கடியாரமெல்லாம் கிஃப்ட் ராப் செய்து தந்தும் முடிந்தது. அந்த மாசமே இன்னும் இரண்டு காய்ந்த ரோஜாக்களும் (ஒருத்தி அறைந்திருக்கிறாள். இன்னொருத்தியால் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் தர்ம அடி) சில கோப்பைகளும் (என் செலவல்ல, அதனால் 60 மில்லி ஃபெக்குகளில் ரம்) காய்ந்தன. கடைசி ரவுண்டுக்கு முன்னால் பாஸ்கர், "மாலினி ரொம்ப மாறிட்டா மாப்ளே! இப்போல்லாம் முறைக்கிறதில்லை.." என்றான். மறுநாள் காலை லிஃப்டிலிருந்து பாஸ்கரும், மாலினியும் வெளியே வந்தார்கள். அவளது சேலை கலைந்திருந்தது.

6 comments:

ஆதிமூலகிருஷ்ணன் 7 December 2009 at 10:04 PM  

என்ன லொச்சாத்தனமான கதையா இருக்குது? புதுசா கல்யாணமான பெண் காரெக்டரை ஏன் இப்பிடி ஸ்பாயில் பண்ணினீங்க.? :-((

pappu 7 December 2009 at 10:27 PM  

morality பேசல. ஆனா முடிவு ஓட்ட்டத்துக்கு ஒத்துப் போலயோ?

வெங்கிராஜா | Venkiraja 7 December 2009 at 10:46 PM  

http://twitter.com/nchokkan/status/6230426852
இந்த ட்வீட்டும் சிலபல பதில்களும் எதிரொலித்ததில், சும்மா பொழுதுபோகாமல் எழுதியது. ரொம்ப நாளா பதிவு போடலையேன்னு போட்டேன். கருத்துக்கு நன்றி ஆதி சார்.

பப்பு, கதையின் ஃப்ளோவே ஓ.ஹென்றி திருப்பம் தான்.

Anonymous 8 December 2009 at 12:27 PM  

சேலை கலைந்திருந்தது சரி, பாஸ்கர் கன்னம் எப்படி இருந்ததுன்னு சொல்லாதவரை கதை முடிவு தெளிவாகாதே ;)

- என். சொக்கன்,
பெங்களூரு.

வெங்கிராஜா | Venkiraja 8 December 2009 at 12:31 PM  

ம். நல்ல கேள்வி. (இதுக்கு மேல நீட்ட சொல்லாதீங்கப்பா)

மறுநாள் காலை லிஃப்டிலிருந்து வெடிச்சிரிப்புடன் பாஸ்கரும், மாலினியும் வெளியே வந்தார்கள். சிரிப்பு சத்தம் நின்றது. அவளது இஸ்திரி மடிப்பு சேலை கலைந்திருந்தது.

Karthik 8 December 2009 at 4:41 PM  

interesting read...:)

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP