மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

10-Dec-2009

முகங்கள்

Bokeh!

இரவுகளில் தனியாக நடந்து சென்று சென்னையை அனுபவிப்பது பள்ளிக்காலங்களில் வாரக்கடைசி கடமைகளுள் ஒன்றாக இருந்தது. பெயர் தெரியாத தெருக்களில் நாலைந்து பேர் கத்திக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சைக்கிள்களில் வலம் வந்ததுண்டு. கல்லூரியில் சேர்ந்த பின்னால், இரவு பகல் பேதங்கள் எல்லாம் சுத்தமாக மறைந்தே போய்விட்டன. தூங்காமலிருந்த நாட்கள் என்றே அரை வருடம் கடந்துபோயிருக்கலாம். சென்னை வரும் போதெல்லாம் நண்பர்களுடன் பைக்குகளில் அர்த்தஜாமத்தில் உலாத்துவது ஒரு தனி சுகம்! மீண்டும் துளிர்த்தெழுந்த ஆசையில், ரொம்ப நாள் கழித்து சென்னையை பாதசாரியாக அனுபவிக்க நேர்ந்தது. சென்னை ராமாவரம் பாலம் முதல் தோமையர் மலை வரை வந்து, ஏர்போர்ட் ரோட்டில் ராடிசன் விடுதி வரைக்கும்! மீனம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர் சேர்ந்து, திருவல்லிக்கேணியிலும் இரவெல்லாம் சுற்றியலைந்து, நண்பன் ஒருவனின் வீட்டிலேயே உறங்கிவிட நேர்ந்தது. எத்தனை முகங்கள்! இந்த நகரம் முழுக்க முகங்களால் தான் நிரம்பியிருக்கிறது. சென்னையின் வரைபடத்தை இன்றும் என்னால் முகங்களின் கூடாகத் தான் பார்க்க முடிகிறது. அப்படி, என்னை பாதையெங்கும் பாதித்த சில முகங்கள், இதோ.

*Star(v)e*

St.Thomas mount

Flower vendor

Building a better future

Tea and smiles

Insomniac

Midnight oil

Sannidhi street

19 comments:

D.R.Ashok 10 December 2009 at 8:27 pm  

2 - best
I admired 4,6,7 too.

pappu 10 December 2009 at 10:12 pm  

வாவ்! நல்லாருக்கு!

Cable Sankar 11 December 2009 at 9:37 am  

உங்களை பற்றிய அறிமுகத்தில் நான் சொன்னது சரியே.. வாழ்த்துக்கள்.

பின்னோக்கி 11 December 2009 at 11:08 am  

வேறு என்ன சொல்ல..அற்புதம் என்பதை தவிர. Hats Off !!

பின்னோக்கி 11 December 2009 at 11:08 am  

எழுத்துக்களில் எஸ்.ராவின் பாணி தெரிகிறது. அருமை.

மண்குதிரை 11 December 2009 at 11:57 am  

எழுத்து நடை, படங்கள் இரண்டுமே அருமை வெங்கி

vel 11 December 2009 at 12:15 pm  

Hats off. Very good pictures

கிருஷ்ண பிரபு 11 December 2009 at 2:53 pm  

ஒரு வகையில் மனதை உலுக்கக் கூடிய புகைப்படங்கள். நல்லா எடுத்து இருக்கீங்க.

Anonymous 11 December 2009 at 4:35 pm  

அருமையான புகைப்படம்.
//சென்னையின் வரைபடத்தை இன்றும் என்னால் முகங்களின் கூடாகத் தான் பார்க்க முடிகிறது//
சிறப்பான வார்த்தை சேர்ப்பு

Pradeep 11 December 2009 at 7:46 pm  

Good one.....

Karthik 11 December 2009 at 8:24 pm  

செமயா இருக்கு எல்லாமே. :)

யாத்ரா 12 December 2009 at 2:18 am  

அன்பு வெங்கி, இந்தப் படங்கள் கொடுக்கிற உணர்வு,,,,,,,

ஆதிமூலகிருஷ்ணன் 12 December 2009 at 3:18 pm  

கிரேட் புகைப்படங்கள் வெங்கிராஜா.! Keep it up.!

வெங்கிராஜா | Venkiraja 12 December 2009 at 8:23 pm  

எண்ணிக்கை முகங்கள் மட்டுமா? இல்லை, தோமையர் மலை முதலா? எதுவானாலும், நன்றிகள்!

நன்றி அசோக் சார்! 2 மாதிரி மீதி பேரெல்லாம் போஸ் குடுக்கலைங்களே ;)

வெல்கம் பப்பு! தொடர்ந்து வரவும்.

வாங்க தலைவரே! இதெல்லாம் ரெம்ப பெரிய வார்த்தைங்க!

பின்னோக்கி, மிக்க நன்றி. எஸ்.ரா? தவிர்க்கப் பார்க்கிறேன். சுட்டியமைக்கு நன்றி.

வெங்கிராஜா | Venkiraja 12 December 2009 at 8:27 pm  

மண்குதிரை... நீண்ட நாட்களுக்குப் பிறகு. வருகைக்கு நன்றி!

Delighted by the comment. Please do come back, Vel.

கிருஷ்ணப்பிரபு, நன்றிங்க. அத்தனை வல்லமை படைத்திருப்பின், அறியாமைக்கு மன்னித்தருள்க. மிகச்சாதாரணமானவை.

நன்றி அடலேறு. நுட்பமான கவனிப்பிற்கு, நன்றி.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பிரதீப்.

வெங்கிராஜா | Venkiraja 12 December 2009 at 8:28 pm  

நன்றி கார்த்திக். சுருக்கமான, மனதிற்கு நெருக்கமான பதில்!

நன்றி யாத்ரா. வழக்கம் போல புதிர் போடும் ,,,,,,,,. வளர்க!

நன்றி ஆதி சார். வெங்கி என்று அழைத்தாலே போதும். ராஜா என்ற செருகல் வேண்டாம். அது ஐ.டி பிரச்சனையால் வந்த வால்.

Nundhaa 13 December 2009 at 8:05 pm  

அருமையான ஒளிப்படங்கள் ... Welcome Back

வெங்கிராஜா | Venkiraja 13 December 2009 at 9:49 pm  

வருகையை எதிர்பார்த்தேன். நன்றி நந்தா!

VISA 23 December 2009 at 10:54 pm  

Beautiful

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP