மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

25-Dec-2009

அநாமதேயன்

”நீயி மூத்தவனாப் பொறக்காம தம்பிப் பாப்பாவா பிறந்திருந்தா விக்னேஷ்னு பேர் வைச்சிருப்பேன்” - அம்மா அடிக்கடி சொல்வதுண்டு. அதனாலோ என்னவோ, ரொம்ப செல்லமாக கொஞ்சும் போது விக்னேஷ் என்றே கொஞ்சுவாள். பண்டிகை நாட்களில் தவறாமல் வீடு வரும் மாமா காதலித்து கட்டிக்கொண்ட விசாகப்பட்டின அத்தை என்னை விக்ட்டரி வெங்கடேஷ் என்பார். அவர்கள் ஊரில் சரத்குமார் மாதிரியாம். நல்ல உயரமாம், நல்ல உடற்கட்டாம். அவள் வழிந்து தொலைப்பதற்கு என்னை தொடையில் நிமிட்டுவார் மாமா. அடிக்கடி க்ரிக்கெட் ஸ்கோர் என்ன என்று கேட்கும் பக்கத்துவீட்டு ரமேஷ் அங்கிள் ’எங்க வீட்டு கண்ணாடியை உடச்ச’ வெங்கடேஷ் பிரசாத்... எப்படி இருக்கே ‘ம்பார். அப்பாவிடம் நன்கொடை வாங்க வரும் கோவில் குருக்கள் ஸ்ரீஸ்ரீ ப்ரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமிகள் என்று என்னைப் பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே புள்ளையாண்டான் எப்படியிருக்கான் நல்லாயிருக்கானா என்று அவரே கேள்வி பதில் எல்லாம் சொல்லிக்கொள்வார். ”இளையராஜா தான்யா தெய்வம்! ஜனனி ஜனனி... சே! பாட்டுக்கு இன்னொருத்தன் வரணும்யா!” என்று உச்ச ஸ்தாயியில் பேசும் சித்தப்பாவின் சிகரெட் சிநேகிதர் என்னை வெங்கிடு வெங்கிடு என்பார். யார் அவர் என்று கேட்டால் தொடையைத் தட்டிக்கொண்டு ஏதாவது பாடிக்காட்டுவார். பதினொன்றாவது படிக்கும் பெரியப்பா மகள், ”ஆமா நீ பெரிய சர்.சி.வெங்கட்ராமனாடா? சாப்பாட்டு ராமா!” கெக்கேபெக்கே என்று இளிப்பாள். சோஷியல் ஸ்டடீஸ் க்ளாசில் மாஸ்டருக்கு குச்சி முடி, வால் எல்லாம் வைத்து ஜோடனையாக வரைந்துவிட்டு மங்கி பை வெங்கி என்று போட்டேன். கிண்டல் பண்ணினதுமில்லாம பேர் எல்லாம் வேற வச்சுக்குறியான்னு கைவிரலையெல்லாம் ஸ்கேலாலேயே நொறுக்கிட்டாங்க. இதையெல்லாம் விட நேத்து ரோட்டில ட்ராஃபிக் போலீஸ்கார், ”ஏம்பா கட்டம் போட்ட யூனிஃபார்ம் தம்பி சீக்கிரம் க்ராஸ் பண்ணு!” என்றார். யார் எப்படிக் காதுபடக் கூப்பிட்டாலும் அதற்கு மறுசெய்கை காட்ட பழகிக்கொண்டேன். என்னவோ இப்போதெல்லாம் ராக்கேஷை நாலு வாட்டி சத்தமாக ”ராக்.. ராக்கி கம் ஆன்!” என்று செல்லமாக கூப்பிட்டாலும் வாலைக் கூட அசைக்கமாட்டேன்கிறான்.

பி.கு: இது உரையாடல் கவிதைப் போட்டிக்கான முயற்சி தோல்வியுற்றதின் வினைப்பயன். ட்விட்டர் என்னை ரொம்ப கெடுத்துவிட்டிருக்கிறது.

9 comments:

pappu 25 December 2009 at 5:47 am  

ஒரு ரகமாக இருக்கிறது. பாவ்லாவிடம் கேட்டு பாருங்களேன். விடை புதரில் தீ வைக்கும் தேவதைகளிடமிருந்து வரலாம். :)

Cable Sankar 25 December 2009 at 8:14 am  

நான்லீனியர் கவிதை மாதிரி ட்ரை பண்ணீங்களோ..

Nundhaa 25 December 2009 at 10:00 am  

நல்லா தான் இருக்கு ஆனால் இன்னும் செதுக்கப்பட்டிருக்க வேண்டுமோ

பின்னோக்கி 25 December 2009 at 2:18 pm  

பேர் வெச்சு அழகான ஒரு பதிவு. பேரைச் சொல்லக்கூடிய பதிவாக வாழ்த்துக்கள்.

Anonymous 25 December 2009 at 7:54 pm  

:) அட்டகாசம் போங்க (நானும் ஒரு பெயரைச் சொல்லாமலே வாழ்த்திவிடுகிறேன் :)

- என். சொக்கன்,
பெங்களூரு.

ஆயில்யன் 25 December 2009 at 11:39 pm  

//சோஷியல் ஸ்டடீஸ் க்ளாசில் மாஸ்டருக்கு குச்சி முடி, வால் எல்லாம் வைத்து ஜோடனையாக வரைந்துவிட்டு மங்கி பை வெங்கி என்று போட்டேன். கிண்டல் பண்ணினதுமில்லாம பேர் எல்லாம் வேற வச்சுக்குறியான்னு கைவிரலையெல்லாம் ஸ்கேலாலேயே நொறுக்கிட்டாங்க.///


கலக்கல் பாஸ் :))))))


//ட்விட்டர் என்னை ரொம்ப கெடுத்துவிட்டிருக்கிறது.//

அவ்வ்வ்வ்வ்வ்

kamalesh 26 December 2009 at 4:15 am  

உரைநடையில் இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு...கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..

Sujay 31 December 2009 at 12:27 pm  

நீண்ட நாளுக்கு பின் வருகிறேன் உன் பக்கத்திற்கு...அருமை வெங்கி...ரசித்து படித்தேன். எனக்கு தோன்றிய தலைப்பு 'இப்படியும் கூப்பிடலாம் வெங்கி'

சுகுணாதிவாகர் 8 January 2010 at 5:31 pm  

ரொம்ப த்ராபையாக உள்ளது,முதல்ல படிங்க சார்,அப்புறம் கொல்லுங்க எழுதி.

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP