மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

06-Jan-2010

கொலாஜ் 2009

\|m|
நல்லாண்டு.

பிற்சேர்க்கை இல்லாத, அசல் படம்.
தலைப்பு : நகரவாழ்வின் நெருக்கடி

பன்னெடுங்காலம் முன்னால் சென்று வந்த ‘09 தென்னிந்திய கட்டிடக்கலை மாணவர்கள் ஒருங்கிணைப்பு விழா மாதிரி போன வருட இறுதியில் தேசிய கட்டிடக்கலை மாணவர்கள் ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. சென்றோம், வந்தோம். புகைப்படப் போட்டியில் கடைசி பட்டியலில் வந்தேன், வெல்லவில்லை. தவிர, சமர்ப்பித்த பிற வடிவமைப்பு போட்டிகள் எதிலும் எம் கல்லூரி தேறவில்லை. 102 கல்லூரிகள் (பாகிஸ்தான், இலங்கை, ஹாங் காங், சீனம், வங்கதேசம், இன்னபிற சேர்த்து) கலந்துகொண்ட SAARC விழாவாக இருந்தமையால் எஸ்.ஆர்.எம் பல்க்லைக்கழகமே கோலாகலமாக இருந்தது. குறிப்பாக பங்குகொண்ட ஆளுமைகள் ஹஃபீஸ் காண்ட்ராக்டர், ஜெய்சிம், கரண் க்ரோவர், மனித் ரஸ்தோகி அனைவரும் எளிமையாகவும், அன்பாகவும் நடந்துகொண்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸாஹா ஹதீத் வரவில்லை. மாணவர்களின் கைவண்ணமும் பெரிய அளவில் சோபித்தது என்றுதான் சொல்லவேண்டும். தரப்பட்டியலில் தென்னிந்தியக் கல்லூரிகள் பல டாப் 10ல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. மதுரை தியாகராஜா கல்லூரி 8வது இடம், சத்யபாமா 5வது இடம், அண்ணா பல்கலைக்கழக SAP 2வது இடம் என்றால் பார்த்துகொள்ளுங்கள். நான்கு நாட்கள் நடைபெற்ற திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி பென்னி தயாள் வந்து சிறப்பித்த இசை இரவு.
புகழ்பெற்ற ராப் இசைக்கலைஞர் எமினெம் மாதிரி தோட்டா தரணியின் தெறிக்க வைக்கும் அரங்கிற்குள் நுழைந்தவர் தொடர்ச்சியாக அதிரடிப் பாடல்களை தெம்பு குறையாமல் பாடினார். துணைக்கு ”சூப்பரே..” பாடல் பாடிய சூப்பர் ஃபிகர். கோடான கோடி பாடலுக்கு ரெண்டு பேரும் போட்ட ஸ்டெப்பை பெரிய லென்சுடன் ட்ராலி மேலேறி பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். மனிதர் அரங்கில் சங்கர் மகாதேவனை மிஞ்சுகிறார். பெரிய எதிர்காலம் இருக்கிறது!

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கால்கள் நோக நோக ஆடி முடித்து கிளம்பியும் வந்தாச்சு. அடுத்த தென்னிந்திய கூட்டமைப்பு மலையாளக்கரையோரம் எங்கோ நடக்கும் போலத் தெரிகிறது. தேசியக் கூட்டமைப்புக்கு ஸ்ரீநகர் கல்லூரி ஒன்று ஏலத்தில் முன்னால் இருக்கிறதாம். செல்வோம் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் இந்த ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறேன்.

கடந்த மூன்றாண்டுகளாக சும்மா பின்னாடி ரெஃபரன்சுக்காவது இருக்கட்டும் என்ற ரீதியில் எழுதிவைத்த கட்டுரைகள் இருக்கின்றன : 2006, 2007, 2008.
2009 பற்றி பகுதிவாரியாக எழுத விஷயமும் இல்லை, விருப்பமும் இல்லை. கட்டுக்கடங்காத காட்டெருமையாக என்னை அலைக்கழித்து, வாழ்க்கையின் விளிம்பிற்கு அழைத்துச் சென்ற இரண்டு விஷயங்கள் நேர்ந்தன. ஒன்று: சொல்லத் தேவையில்லை, வயசில் எல்லோருக்கும் நிகழ்வதே. இரண்டாவது: உடல்நிலை படுமோசமாகி, படிப்பே கேள்விக்குறியாகி வாழ்க்கை ஸ்தம்பித்துவிட்டதைப் போலக் கடந்து சென்ற இரண்டு மாதகாலம். அதைப்பற்றி யோசிக்கையில், என்னாலேயே இந்த ஆண்டு அதைக்கடந்துவந்து இன்னொரு கல்லூரியில் கடலைப் போட்டுக்கொண்டிருப்பேன் என்று நம்பமுடியவில்லை. போகட்டும். ஆங்கிலமும் சரி, தமிழும் சரி உருப்படியான படங்கள் ஐந்து கூட தேறவில்லை. நானும் படங்கள் பார்ப்பதைக் குறைத்துக்கொண்டுவிட்டேன். போன வருடம் மட்டும் 400 படங்கள் பார்த்தவன், அதில் கால்வாசிகூட இந்தாண்டு தொட இயலவில்லை. ஹிந்தியில் வெளிவந்த தேவ்-டி தான் எனக்கு ரொம்ப ஆதர்சமாகவும், அற்புதமாகவும் படுகிறது. பாடலும் அதே படம்:

தமிழைப்பொறுத்தவரை ஆட்டுமந்தைத்தனம் எரிச்சலூட்டியது. பிடித்த படம் வெண்ணிலா கபடிக்குழு. சசிக்குமார் அடுத்த படத்திலும் சொதப்பினால் லிங்குசாமி லிஸ்டில் அவரைச்சேர்க்கவேண்டியதுதான். பெரிதும் எதிர்பார்த்த ரஹ்மான் படமோ, தல படமோ இவ்வருஷம் வராமலே போனது பெரும் சோகம். பாடல்களும் ஏப்பை சாப்பை தான். வருடக்கடைசியில் துளித்துளி வராவிடில் நிலைமை ரொம்ப மோசமாகியிருக்கும். ஆயிரத்தில் ஒருவன் பாடல்களின் காட்சியமைப்புகள் பயங்கர கடியாய் இருக்கின்றன. ஆதவனில் வடிவேலு பின்னியெடுத்திருக்கிறார். சந்தானம் 2010 வரை தாக்குபிடிப்பார் போல, சிவா மனசில் சக்தி நம்பிக்கை தருகிறது. கனவுக்கன்னி சந்தேகமேயின்றி அனுஷ்கா செல்லம் தான். குளித்துவிட்டு எழுந்து வருகையில்... மந்திரக்காரி! அயல் சினிமாவுக்கும் வருவோம்: ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியது நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. "It was written." நான் எதிர்பார்த்த டார்க் நைட், இன் ப்ரூஜ்ஸ் பெரிதும் சோபிக்கவில்லை, வெளிநாட்டுப் பிரிவிலும் இஸ்ரேலியப் படமான வால்ட்ஸ் வித் பஷீர் வெல்லவில்லை (பிற விருது விழாக்களிலும்). கான்(ஸ்)-இல் க்வெண்டினும் ஏமாற்றிதான் விட்டார். ஆனால் கேட் வின்ஸ்லெட்டும், பெனலோப் க்ரூஸும் விருதுகள் வாங்கியதில் மிக்க மகிழ்ச்சி.

அலைபேசிகளில் என்னுடைய தேர்வு, ரொம்ப தேடித்தேடி வாங்கிய என்னுடைய ஃபோன் தான், நோக்கியா 5730. சோனி வயோ பார்க்க சிக்கென்று ஸ்ரேயா மாதிரி இருந்தாலும், பாவம் பெர்ஃபாமென்ஸில் பணாலாகிவிடுகிறது. மேக்புக் நம்ம மைலாப்பூரில் கிடைத்தாலும் கூட எனக்கென்னவோ எச்.பி பெவிலியன் / டெல் ஸ்டுடியோ தேவலை என்றே தோன்றுகிறது. ஐ-பாட், பிற PMP எனப்படும் போர்ட்டபிள் ம்யூசிக் ப்ளேயர்களுடன் வரும் இயர்ஃபோன்கள் எத்த்னை டுபாக்கூர் என்று விளங்கியது. க்ரியேட்டிவ், போஸ், சென்ஹைசர் முதலியவர்களது இயர்போன்கள் ஏதும் கொஞ்சம் செலவு செய்து வாங்கி இசை கேட்கவும். ”கும் சும் கும்...” சும்மா உயிர்பெற்று எழுந்து செவிகளை நிரப்புகிறது. சீப் & பெஸ்ட் க்ரியேட்டிவ். EP-635 எழுநூறுக்கு கிடைக்கிறது. என்.எச்.எம் ரைட்டர். ரொம்ப நன்றி, பத்ரி சார். அழகி, ஈ-கலப்பை இரண்டையும் விட சௌகரியமாக இருக்கிறது. நெருப்புநரி உலவியின் நீட்சிகள் சிலவற்றை எப்போதிலிருந்தோ பயன்படுத்துகிறேன். ட்விட்டருக்கான பவர்ட்விட்டர் இந்தாண்டின் கண்டாய்வு. ட்விட்டர்+ஃபேஸ்புக் பயனர்களுக்கென டிக்ஸ்பி இருக்கிறது. இதையும் ‘08 முதலே பயன்படுத்துகிறேன். இந்த வருடம் ட்விட்டருக்கும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். மெயில்/ஐ.எம்/ட்விட்டர்/சோஷியல் நெட்வொர்க்கிங் என்று இணையப் பயன்பாட்டையே புரட்சிகரமாக மாற்றும் கருவி! ஆர்க்கிகேட் v.13 வெளிவந்தது. பட்டையைக்கிளப்பும் வேகம். என்றுமே ரெவிட் எனக்கு பிடித்ததில்லை. எல்லாவற்றுக்கும் மேல், விண்டோஸ் 7. பிரித்து மேய்கிறது! வேகமென்றால் வேகம் அப்படி ஒரு அபரிமிதமான வேகம்! 80 mb/sல் காப்பி/பேஸ்ட் அடிக்கிறது. தளங்களைப் பொறுத்தவரை பைத்தியமாக்கும் ட்விட்டர். நாலு மாசத்துக்குள் 1900 குறும்பதிவுகள் அடித்தாயிற்று. பெரும் பதிவர்கள், எழுத்தாளர்கள், அயல்தேச டிசைனர்கள் என்று தொடர்பு எல்லைகளை நீட்டிக்கிறது, சுலபமாகவும் வேகமாகவும் இருக்கிறது. கவர்ந்த புகைப்படங்கள் நிறைய உண்டு. இந்தத் தொகுப்பை அதி சிறந்ததாகச் சொல்லலாம். முக்கியமான விஷயத்துக்கு வருவோம். நான் ஒரு யூட்யூப் பைத்தியம். வீடியோக்கள் காண்பதுதான் பிரதான பொழுதுபோக்கு. இந்தாண்டு டிசம்பர் திங்கள் 26ம் தேதி என்னையும், ட்விட்டர், ஃபேஸ்புக் புண்ணியத்தில் ஒரு சில வட்ட சதுரங்களைக் கலங்கடித்த ட்சுனாமி வீடியோ:


தொல்லைக்காட்சியுடனான உறவு ஏறத்தாழ முறிந்தே விட்டபடியால் எப்போதும் பார்க்கும் டாப் 10 எல்லாவற்றையும் தவற விட்டாச்சு. பொதிகையின் டாப் 10 பாடல்கள், என்.டி.டி.வியின் டாப் 10 விளம்பரங்கள், பிபிசியின் டாப் 100 நிகழ்வுகள், ஈபர்ட்டின் டாப் 10 படங்கள்... நிறைய. சுஜாதா அவார்ட்ஸ் நினைவுக்கு வருகிறது. ப்ச். நானும் பட்டியல்கள் எழுதியதுண்டு: நான்காண்டுகளுக்கு முன்னாடி பைத்தியமாக இருந்த ஆர்குட் பக்கம் இப்போதெல்லாம் போவதேயில்லை. நெட்ஸ்கேப் நாவிகேட்டர் வைத்து இணையம் உபயோகித்ததும், யாஹூவில் மெசஞ்சர் தந்த ஸ்மைலிகளின் ஆச்சரியமும் இன்னும் அடிமனசில் எங்கோ இருக்கிறது. ஹாட்மெய்ல் ஐ.டி ஒன்றின் கடவு எண் மறந்துபோய் அண்மையில் லைவ்.இன் ஐ.டி ஒன்று திறந்தது, யாஹூ.காம் கடவு எண்ணும் மறந்துபோய் கோ.இன் முகவரி ஒன்றும் வைத்திருப்பது எல்லாம் டைரிக்குறிப்புகளில் இடம்பெற்ற வரலாற்று நினைவுகள். ஃபேஸ்புக்கில் 400 நண்பர்கள் தாண்டியதும், ட்விட்டரில் 250 ஃபாலோயர்கள் கடந்ததும் தான் இவ்வாண்டின் வெற்றிவாகைகள். இணையம் என்ற மாய உலகத்தின் கவர்ச்சி அடங்கிப்போகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று சென்ற வருடம் மாதிரியே இந்த வருடமும் தோன்றுகிறது. எல்லாரையும் பிரபலங்களைப் போல லைம்லைட்டிலேயே வைத்திருப்பதாக நம்ப வைக்கும் இந்த கண்கட்டு வித்தை நல்ல சம்பாதியம் ஈட்டுகிறது. இன்றைய தேதிக்கு அன்றாடம் உலவும் தளங்களே பத்தைத் தாண்டிவிட்டன: ஃபேஸ்புக், ட்விட்டர், மன்றமையம், ஃப்ளிக்கர், புஷ்-புல் பார், அமினஸ்3, யூட்யூப், ஜிமெய்ல், ஃபைல்ஹிப்போ, ப்ளாகர், டாரண்ட், அமேடர்ஃபோரம்... (தவிர இவற்றிலிருந்து தாவிச்செல்பவை தனி) 2009ல் நான் அதிக நேரம் செலவழித்தது இந்தப் பெட்டியோடும், நகல் நட்புகளோடும் தான் என நினைக்கையில் என் தங்கையுடனும் தந்தையுடனும் இன்னும் சில நேரம் பேசியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. 2010ல் எனது ஒரே ரெசல்யூஷன் இதுதான்.

11 comments:

pappu 6 January 2010 at 2:05 pm  

Dev-D pick of the year. இன்னும் என் ப்ளேலிஸ்டில் அடம்பிடித்துக் கொண்டு இருக்கிறது..

ஹாலிவுட் பாலா 6 January 2010 at 7:46 pm  

///வெளிநாட்டுப் பிரிவிலும் ஈராக்கியப் படமான வால்ட்ஸ் வித் பஷீர் வெல்லவில்லை ///

அது இஸ்ரேலியப் படம் வெங்கி!! :)

புத்தாண்டு வாழ்த்துகள்! :)

பின்னோக்கி 6 January 2010 at 8:28 pm  

In Bruges நல்லாதான் இருந்துச்சுங்க.

ஐபோட்டுடன் வந்த ஹெட் போனைத் தொலைத்துவிட்டு, சோனி வாங்கினேன் ரூ 600 குடுத்து. ஆனால் ஆப்பிள் போல இல்லை. நீங்கள் சொன்ன க்ரியேட்டிவ் வாங்கி பார்க்கிறேன்.

Cable Sankar 7 January 2010 at 8:28 am  

nice venki
good writeup

வெங்கிராஜா | Venkiraja 7 January 2010 at 12:39 pm  

Pappu, We share the same age.. same taste!

பாலாண்ணே! நக்கீரர் நக்கீரர் தான்!

பின்னோக்கி.. க்ரியேட்டிவ்லயே ஆர்வானான்னு புதுசா ஒண்ணு வந்திருக்கு. அதையும் ட்ரை பண்ணுங்க! EP ரொம்ப நல்லாயிருக்கு!

வாவ்! தலைவரே... நன்றி!

Karthik 7 January 2010 at 7:17 pm  

பென்னி நான் முதல் வருஷம் படிச்ச போது எங்க காலேஜ் கல்ச்சுரல்ஸ் வந்திருந்தார். அப்போ டாக்ஸி டாக்ஸி பட்டைய கிளப்பிட்டு இருந்த நேரம். அவர் பாடின போது.. ச்சே சான்ஸே இல்ல. ஹையோ அந்த கோடானகோடி பாடின பிகரும் அன்னிக்கு வந்திருந்தாங்க. அந்த ஸ்டெப் ஞாபகம் இருக்கு. :)

தேவ்டி சான்ஸே இல்ல. அது ஒரு அற்புதம். ஆதவனில் வடிவேல் காமெடி பெரிதாக என்ன கவரல. சந்தானம் கலக்குறார். :)

henry J 7 January 2010 at 7:22 pm  

romba nalla iruku. i like it. தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

வெங்கிராஜா | Venkiraja 7 January 2010 at 7:28 pm  

செம எனர்ஜி! 20களில் இருப்பதால் கொஞ்சம் கூட அசராமல் அடிக்கிறார்! அந்த ஃபிகர் சான்சே இல்ல போங்க!

வருகைக்கு நன்றி கார்த்தி, ஹென்றி.

ஹாலிவுட் பாலா 8 January 2010 at 11:28 pm  

சுட்டின பின்னாடியும்... பதிவில் தப்பை திருத்தாம இருக்கறதுக்கு என்னா தைரியம் வேணும்..?!! :) :) :)

நாளைக்கு வந்து பார்ப்பேன்! :)

வெங்கிராஜா | Venkiraja 10 January 2010 at 12:04 pm  

ஹஹ்ஹா! தவறு சுட்டினவருக்கு பெருமை சேர்க்கணும் இல்லையா? அதான், எப்பவும் நினைவிலிருக்கட்டும்னு.. இப்ப மாத்திடேன். :)

Anonymous 14 May 2010 at 3:09 pm  

Semma Sir Neenga

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP