மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

17-Nov-2013

பரங்கிதேச படலம்

நீண்ட நெடும் இடைவேளைக்குப் பிறகு மனநிறைவான பயணம். பெரும்பாலும் நடைபயின்றே. பல்கலையிலிருந்து நடுச்சாமத்தில் கிளம்பி கருப்பு தொப்பிக்காரர்கள் அணிவகுக்கையிலேயே லண்டன் வந்தடைந்தாகிவிட்டது. தரையடியிலேயே தூரங்களைக் கடந்துவிட்டதால் தேம்ஸ் நதிக்கரையோரம் நெடுக பயணம். வெஸ்ட்மின்ஸ்டரில் பிரசித்தி பெற்ற லண்டனின் சின்னங்கள் - லண்டன் ஐ, பிக் பென், வெஸ்ட்மின்ஸ்டர் அபே, நாடாளுமன்ற சதுக்கம் கடந்து, ஆதர்சமான ஆர்செனல் மைதானத்தில் தரிசனம் முடித்து, பிரிட்டிஷ் நூலகம், புனித பேங்க்ரஸ், பார்ப்பிகன், டேட் நவீன கலை அருங்காட்சியகம், தெற்கு நதிக்கரையோரம் தொடங்கிய புள்ளிக்கே வந்து, ஸ்ட்ரேட்ஃபோர்டில் கசீனோவில் கால்பந்து பார்த்தும், சூது கவ்வியும் லண்டன் ஒருநாள் பயணம் இனிதே முடிந்தது.

காகிதம் சேமித்தல் பற்றி நிறைய பேசிக்கொண்டிருக்கிறார்கள். கற்றையளவு (Bandwidth) சேமித்தல் நிமித்தம் இங்கு ஃபேஸ்புக்கிலிருந்தே படங்களை கோத்துள்ளேன். தாராளமாக லைக்க/ கமெண்ட்டவும்.

1 comments:

Raju N 17 November 2013 at 7:10 pm  

சூப்பர்!

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP