மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

27-Jul-2009

ஊமைவீணை


மு.மேத்தாவையும், அப்துல் ரகுமானையும், ஈரோடு தமிழன்பனையும் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்த பனிரெண்டாம் வகுப்பு நேரம், இயற்பியல் பரீட்சையை ரொம்ப மோசமாக எழுதிவிட்டு அந்த கேள்வித்தாளுக்கு பின்னால் எழுதியது. கிட்டத்தெட்ட அதே போன்றதொரு கையறு நிலையில் தற்போது இருப்பதால் சில தினங்களுக்கு பதிவுகளும் பின்னூட்டங்களும் எழுதமுடியாத சூழல். கூடிய விரைவில் சந்திக்கலாம். நட்புக்கு நன்றி. _____________________________________________________________________

23-Jul-2009

செல்ஃபோன் படங்கள் - II

மெகாபிக்சல் என்பதில் இன்னும் பலருக்கு தவறான புரிதல் இருந்து வருகிறது. அது ஒரு விளம்பரத் தந்திரம் மட்டுமே. ஒரு ஆறு மெகாபிக்சல் படத்தையும் ஒரு பத்து MP படத்தையும் ஒரே அளவு காகிதத்தில் (20"X30" வரை) அச்சிட்டால் எந்தவித வேறுபாடும் நம் கண்களுக்கு புலப்படாது என்பதே மெய். சாதாரணமாக செல்லும் இடத்தின் நினைவாக படம் பிடிப்பதற்கு 5 MP கேமராக்களே போதுமானது. சற்றே உயர் தரத்தில் ப்ரிண்ட் போட மட்டுமே 6 முதல் 12 வரை MP தேவைப்படும். அதற்கும் மேல் செமி-ப்ரொஃபெஷனல், ப்ரொஃபெஷனல் ஆசாமிகளுக்கு மட்டுமே தேவை. மெகா என்றால் ஒரு மில்லியன் என்ற கணக்கே. முன்னாளில் படத்தை பிலிம் சுருளில் விழும் ஒளியாக பதிவு செய்து அதை இருட்டறையில் டெவலப் செய்தனர். இன்று ப்லிம் சுருளுக்கு பதில் சிலிக்கான் வந்துவிட்டது. அந்த சின்ன சென்சாரில் மேல்-கீழ், இட-வலம் என்று கோடுகள் ஒரு க்ரிட்-டை உருவாக்குகின்றன. இந்த சின்ன சின்ன சதுரங்களில் ஒளி டிஜிட்டல் மெகாபைட்களாக சேமிக்கப்படுகிறது. இந்த சதுரங்களின் எண்ணிக்கையையே மெகாபிக்சல் என்று குறிப்பிடுகின்றனர். பத்து மில்லியன் குட்டி குட்டி சதுரங்கள் அந்த சிறிய தகடில் இருந்தால் பத்து மெகாபிக்சல் கேமரா, அவ்வளவே. கடைக்காரர் விசாரிக்கையில் எத்தனை மெகாபிக்சல் என்ற ரீதியில் வித்தியாசம் காட்டி விற்க முயன்றால் கபர்தார்!
கொசுறு: பி&எஸ், எஸ்.எல்.ஆர் வகை கேமராக்களில் படம் பிடிப்பவர்கள் கருப்பு வெள்ளையில் படம் பிடிக்கத்தோன்றினால் கலரிலேயே முதலில் பிடித்துவிட்டு, பின்பு கணிணியில் ஃபில்டரிங் மாற்றுவது நலம். கேமிராவின் சென்சார் தன் வலுவை சில மாற்றுகள் குறைத்துக்கொண்டே டீஃபால்ட்டாக கருப்பு வெள்ளையில் படம் பிடிப்பதாகச் சொல்கிறார்கள். கணிணியில் நிறம் மாற்றுவதால், கருப்பு-வெள்ளையின் ஷேட்கள் இன்னும் மெருகேறி ஷார்ப்பாக இருக்கும் என்றும் சொல்கிறர்கள். இனி, கருப்பு-வெள்ளைப்படங்கள் இரண்டாம் தவணையாக.

ஒரு மரத்தக்கை


ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் போஸ்டர் பார்த்திருக்கிறீர்களா?


பெர்ஸ்பெக்டிவ்!

உணவு விடுதி ஒன்றில்

வரைகலை அறை

மேக்ரோ

சீப்பு!
உடுப்பி மடம் - சிற்பங்கள்
உடுப்பி மடம் - கல் தூண்

பாதம்!
CAD Laboratory


இவற்றில் கடைசி சில படங்கள் மோனோக்ரோம் வகையைச்சார்ந்தவை. ஆனால், வெறும் கருப்பு வெள்ளை அல்ல.
_____________________________________________________________________

21-Jul-2009

இ.பி.அ


"அதை யாருப்பா அசிங்கமா வாங்கி கையில எல்லாம் மாட்டிகிட்டு... உள்ள வாங்கி வெளிய வித்துற வேண்டியதுதான்!"
-கிருஷ்ணன் (எ) கவுண்டமணி, எம்.ஏ.. எம்.ஏ.. ஃப்ளாஸஃபி ஃப்ளாஸஃபி!


தேவையில்லாமல் நீட்டி முழக்க அவசியமிருக்காது என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த விருதுச் சங்கிலியில் கோத்துவிடும் அந்த ஆறு பேராவது வந்து பார்த்து பின்னூட்டமிட்டு, இணைப்பும் தரப்போகிறார்கள். ஹிட்டுகள் உத்தரவாதம். பின்ன என்னதுக்கு வியாக்கியானமும், உபந்நியாசமும்? மேட்டர் இதுதான். பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட அண்ணன் செ.ரவி (சோடா எங்கப்பா?) அவர்கள் தொடங்கிவைத்த இந்த இண்டரஸ்டிங்க் ப்ளாக் அவார்ட் (ஏன் சார், அதை தமிழிலேயே எழுத வேண்டியதுதானே?) ஒருவழியாக இந்த பக்கம் காற்றோடு வந்து சேர்ந்துவிட்டது. (நானும் ரவிடிதான்..!) அளித்த கவிஞர் சேரல் அவர்களுக்கு நன்றிகள். ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்படி, அதை அறுவருக்கு தரச்சொலியிருக்கிறார்கள். (எவ்வளவோ பண்றோம்.. இதப் பண்ணமாட்டமா?) பெரும்பாலும் இந்த கௌரவம் (அப்படித்தானே?) போய்ச்சேராத திசைகளுக்கு இதை தரப்பார்க்கிறேன். இவர்களையும் வாழ்த்துவீர்களாக. (ஏன்பா... நீங்களும் இதை ஆறு பேருக்கு கொடுத்துருவீங்களாம்பா)

1. பிரபு ராம்: இணைய நண்பர் தாம். சுருக்கமாக, நகைச்சுவையாக ஆங்கிலத்திலும் தமிழிலும் பதிபவர். தீவிர கவுண்டமணி ரசிகர். உள்ளூர் முதல் உலகப்படம் வரை அங்கலாய்ப்பவர். வயசுக்கு சற்றும் பொருந்தாத இண்ட்டெசெக்சுவல்.

2. ஹாலிவுட் பாலா: ஆங்கிலப் பட விமர்சகர். நான் பார்த்தவரையில் தொடர்ந்து இந்த தளத்தில் இயங்கிவரும் வெகுசில தமிழ்ப்பதிவர்களில் ஒருவர். ஆழ்ந்த ரசனையும், அற்புதமான மொழிநடையும் உடையவர்.

3. சுபாங்கன்: டெக் ப்ளாகர். இயல்பான தமிழில் கஷ்டமான கணிணி சமாச்சாரங்களை என் போன்ற மட்டிகளுக்கு புரியவைப்பவர். இலங்கைத்தமிழர்.. ஒரே வயதுக்காரர் வேறு. ஏற்கனவே ஹா.பா-விற்கு சொன்னதே தான். இந்த தளத்தில் இயங்கிவரும் வெகுசிலரில் ஒருவர்.

4. அனந்த்: புகைப்படக்காரர். அருமையான கோணங்களில் தனித்துவமான நிறங்களை சிறைபிடிப்பவர். இன்ஸ்பிரேஷன். இத்தனைக்கும், பலர் வெறும் விடுமுறையில் சம்பிரதாயமாக கொண்டுசெல்லும் பி&எஸ் வகை கருவி ஒன்றினால் முழுவருமானம் ஈட்டுமளவிற்கு படங்களைச் சுட்டுத்தள்ளுபவர்.

5. காம்ப்ளிக்கேட்யூர்: இவரையும் 'மையம்' என்ற ஃபோரமின் மூலமே அறிவேன். இசை, படங்கள், இலக்கியம் என்று ஏகப்பட்ட துறைகள் சார்ந்து ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதும் அளவிற்கு படிப்பாளி. சமீபத்தில் கமலஹாசன் நடத்திய திரைக்கதை பயிற்சிப்பட்டறைக்கு தேர்வானவர். இவரது ஆங்கிலம்... ஒரே குஷ்டமப்பா!

6. வினித்: நல்ல நண்பர். இசை விமர்சனங்கள் எழுதிக்கிழிப்பவர். துல்லியமான கணிப்புகள், தனது ப்ளேலிஸ்டுகள், விரிவான விமர்சனங்கள், பாடல்களினூடே சுவாரசியமான ப்ரிலூட், இண்டர்லூட், போஸ்ட்லூட்களை வெட்டி விமர்சிப்பவர். சென்னைவாசி, தமிழிலும் எழுதினால் தேவலை.

மற்றபடி இதை முதுகுசொறிதல் என்றெல்லாம் லேபிள் ஒட்டவேண்டாம். அப்படியே தன்னிச்சையாக தோன்றி செய்ததே, இவருக்குத்தான் தரவேண்டும் என்று திட்டமிட்டெல்லாம் தரவில்லை. விடுபட்டவர்கள் என்றே ஒரு பெரிய பட்டியல் உண்டு: ப்ரொஃபைலுக்கு சென்று பார்க்கவும்.
_____________________________________________________________________

15-Jul-2009

Vicky Christina Barcelona [2008]

மொழி: ஆங்கிலம்
வகை: காதல்
இயக்குனர்: வூடி ஆலன்
நடிகர்கள்: ஜேவியர் பார்டெம், ஸ்கார்லெட் ஜோஹான்சென், பெனலோப்பி க்ரூஸ்.


மரியா எலீனா: "நீ எல்லா பெண்களிடமும் என்னைத்தான் தேடுகிறாய்!" ழான் அண்டோனியோ: "முழுமையாகாத காதல் தான் ரொமாண்டிக்காக இருக்க முடியும்" விக்கி: "நீ என் கண்ணில் வந்த கண்ணீரை பார்த்தியா?" (முத்தமிடுகிறாள்) க்றிஸ்டினா: "ஆமாம், நான் மரியாவை காதலிக்கிறேன். பைசெக்ஷுவல்...? ஆனா என்னாத்துக்கு எல்லாத்தையும் 'லேபிள்' பண்ணனும்?"

இப்படி படம் நெடுக காமமும் கலையும் வழிந்தபடியே இருக்கின்றன. மகனிடம் "உன் மனைவி இன்னும் என் கனவுகளில் வருகிறாள்!" என்கிறார் தந்தை. கிட்டார் இசையை கேட்டுவிட்டு அங்கேயே ஒரு புதரில் புணர்கிறார்கள் ழானும், விக்கியும். எல்லா காட்சிகளிலும் விரலிடுக்கில் புகையோ வைன் புட்டியோ வளையவந்துகொண்டே இருக்கிறது. கட்டுடைப்பு கண்றாவியெல்லாம் பரிச்சயமில்லாதவர்கள் இவர்கள். பிறரைப் பற்றிய பிரக்ஞையே இன்றி தத்தம் இஷ்டப்படி வாழ்வது தான் ஐரோப்பிய லைஃப்ஸ்டைல். இசை, மது, கட்டிடங்கள், காதல், கடற்கரைகள் - ஸ்பெய்னின் அப்பட்டமான ஆனால் ரம்மியமான வாழ்க்கை முறையை அவரது பாணியில் சொல்லியிருக்கிறார் வூடி ஆலன். நகைச்சுவைக்கு புகழ்பெற்ற வூடி ஆலன் (சுருக்கமாக சொன்னால், நம்ம பாக்யராஜ் மாதிரியே தான்.. அதே மாதிரி நீள்சதுர கண்ணாடி + பெல்பாட்டம்மை மாட்டிகிட்டு நடிச்சிக்கிட்டும் இருந்தார்) ஐரோப்பிய கலை மற்றும் கலாச்சாரத்தை பின்புலமாகக் கொண்டு இயக்கிய படம் தான் விக்கி க்றிஸ்டினா பார்சலோனா.

கதை என்றெல்லாம் ஒரு இழவும் கிடையாது. இரண்டு மாத விடுமுறையை கழிக்க விக்கியும் க்றிஸ்டினாவும் பார்சலோனாவுக்கு வருகிறார்கள், திரும்புகிறார்கள். அவ்வளவே. வந்த இடத்தில் ழான் ஆண்டோனியோ என்கிற ஓவியக்கலைஞனின் மீது க்றிஸ்டினாவுக்கு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. ஓவியனுக்கு ஏற்கனவே மணம் முடிந்துவிட்டதென்பதும், மனைவி அவனை கொல்ல முயற்சித்திருப்பதும் அவர்கள் அறிந்ததே. விக்கி, க்றிஸ்டினா, ழான், மரியா, பார்சலோனா- பகடையின் ஐந்து முகங்களாக இருக்க ஆறாம் முகத்தில் இருந்தது யார் என்பது தான் படத்தின் கடைசி ட்விஸ்ட். திரைக்கதையில் மனிதர் பின்னியெடுத்திருக்கிறார். இவரது சற்றே பழைய பெர்பிள் ரோஸ் ஆஃப் கெய்ரோ என்ற படத்தைப் போலவே இந்த படத்தின் முடிவும்... ம்ஹூம் சொல்லமாட்டேன். படத்தில் என்னை குறிப்பாகக் கவர்ந்தது ஜேவியர் பார்டமின் நடிப்பு. ஆமாம், அவரே தான் - நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென்-னில் வில்லனாக வருவாரே, அவரே தான். தத்ரூபம்.

உலகின் முக்கியமான ஆர்க்கிடெக்ட்களில் ஒருவரான ஆண்டோனியோ காடியின் படைப்புகள் படத்தில் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. சிற்பங்கள், ஓவியங்கள், இசைக்கோவைகள் என கலை ஆங்காங்கே தூவப்பட்டிருக்கிறது. முதல் ஃப்ரேம் Vignette-டில் ஏர்ப்போர்ட் சுவரில் இருக்கும் ஓவியம் முதலே படத்தில் கலையின் ஆக்கிரமிப்பு தொடங்குகிறது. குறிப்பாக ஸ்பானிய படங்களின் சாயலிலேயே கேமிரா டோனும், ஸ்பானிய இசைக்கருவிகளும் மனதில் ரொம்ப நேரத்துக்கு ரீங்காரமிட்டுக்கொண்டேருக்கின்றன. ஒளிப்பதிவும் சும்மா சொல்லக்கூடாது, ஆர்ப்பரிக்கும் கடற்கரை, ஐரோப்பிய கிராமம், கலைப்பொருட்கள், லேண்ட்ஸ்கேப்புகள் என்று எல்லாவற்றையும் நல்லாவே பிடித்திருகிறார்கள். வசனங்களில் ஒளிந்திருக்கும் நகைச்சுவை முதல் பாதி முழுக்க இழையோடுவது வூடி ஆலனின் Trademark. சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெனலோபி க்ரூஸ் வாங்கியதை உங்களுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

படத்தின் Diametrically opposite கேரக்டரைசேஷன் தான் மிகச்சாதாரணமான ஸ்டோரிலைனை Masterstroke-காக மாற்றுகிறது. விக்கி சராசரியான அமெரிக்கப் பெண். பாய்ஃப்ரெண்ட், கடிவாளக் கம்மிட்மெண்ட், மாலை நேர வகுப்புகள் என்று நேரம் கழிப்பவள். க்றிஸ்டினா மெட்ரோ-செக்ஷுவல் யுவதி- கலைகளில் ஈடுபாடு, பாய்ஃப்ரெண்டுகளை மாற்றிக்கொண்டேயிருப்பது, நிலையற்ற மனநிலை. ழான் ஒரு ப்ளேபாய் - ஒரு கோணத்தில் வாலி அஜித்தைப்போல தன் மனைவி மரியா என்று தொடங்கி அடிச்சு ஊத்துறார், இவர்கள் இருவரை மயக்கி படுக்கைக்கும் அழைத்துச்சென்று விடுகிறார். மரியா எலீனா எக்சென்ட்ரிக்-கான பெண். இவர்களைத் தவிர ழானின் தந்தை, விக்கியின் அமெரிக்க காதலன், தங்க இடம் தரும் தம்பதி, ஸ்பானிஷ் வகுப்பில் விக்கியின் கையைப் பிடித்து இழுக்கும் அரை வேக்காடு என சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் கூட வூடி ஆலனின் அனுபவச்செறிவும், Craftmanship-பும் தெரிகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை சிகரெட் புகையும், தேநீருமாய் கழிகிற அழகான நிமிடங்களில் காதலியுடன் பார்க்க பலமாக பரிந்துரை செய்யப்படுகிறது.
_____________________________________________________________________

10-Jul-2009

ஆறாம் அறிவு

கௌரியை 
கௌரி என்றும் வாசிக்கலாம் 
கௌரி என்றும் வாசிக்கலாம்.


இத்தனை அழகென்று 
எதிர்ப்பார்க்கவில்லை 
கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் 
வானவில்.

கண்டுபிடிப்பவர்க்கு சன்மானம் 
காலையில் சோலையிலிருந்த 
"பனித்துளிகளைக் காணவில்லை"

வேண்டாமென 
வெட்டி எறிந்த 
பால் பாக்கெட் நுனியில் 
உயிர் வாழ்கின்றன 
சில எறும்புகள். 

கொஞ்சம் 
விளையாட்டுக்கு பிறகு 
மழையை ரசித்தபடி 
குடையை 
தூக்கி வீசுகிறது 
குரங்கு .
 
கண்ணன் பாதத்தை 
வினோதமாய் பார்த்து 
வாலாட்டுகிறது 
சங்கிலி பூட்டிய நாய்.
_____________________________________________________________________

04-Jul-2009

செல்ஃபோன் படங்கள் - I

ஒரு நல்ல புகைப்படக்காரரால் ஐந்நூறு ரூபாய் பெறுமானமுள்ள டிஸ்போசபிள் கேமராவிலேயே மாஸ்டர்பீஸ்களை எடுக்க முடியும் என்கிறார் கென் ராக்வெல். அப்படிப் பார்க்கையில் செல்ஃபோன் படங்கள் நிச்சயம் நன்றாகத்தான் இருக்க வேண்டும். இரண்டு/மூன்று மெகாபிக்சல் கேமராக்களிலேயே அற்புதமான தொழில்நுட்பம் இருக்கிறது. கதை தான் முக்கியமே தவிர எந்த பேனாவில் எழுதுகிறோம் என்பது அவசியமல்ல. அதனால் தான் பிட் போட்டியிலிருந்து சிலபல இணைய போட்டிகளிலும், கல்லூரி அளவிலான போட்டிகளிலும் தாழ்வு மனப்பான்மை ஏதுமின்றி பெரிய பெரிய லென்ஸ்காரர்களுடன் சரிசமமாக எனது படைப்பையும் தந்திருக்கிறேன். சுயதம்பட்டம் என்றில்லை. ஒளிப்படம் எடுக்கும் பலர் அதை வெளியிடாமல் ஒளித்து ஒளித்து வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். தமிழில் புகைப்படப் பதிவர்கள் சொற்பமே. அத்தனை பேரும் கவித்துவமான பல தருணங்களை தாண்டி வருகிறோம், ஏறத்தாழ எல்லோரிடமுமே ஒரு கேமிரா கூடிய அலைபேசி இருக்கிறது. சுட்டுத்தள்ளலாமே?
முதல் கேமிராவான மோட்டரோலா எல்-7 மற்றும் பத்து நாள் வைத்திருந்த ஐ-ஃபோன் படங்கள் கைவசமில்லை. மோட்டோ மிங் ஏ1200 மற்றும் சோனி எரிக்சன் ஜி700 படங்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. நோக்கியா என் 70, 73, 6300, கே 810-ஐ, டபிள் யூ 350-ஐ முதலிய பற்பல நண்பர்களின் கருவிகளிலும் படங்கள் எடுத்திருக்கிறேன், சிலவற்றை வைத்திருக்கிறேன்.

கல்லூரி விடுதி காரிடார்கள்

ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி ஓரம்
அச்சு அசலான படம் - பிற்சேர்க்கை ஏதுமில்லை.

கழிவறை விழிகள்

போரூர் ஏரி

டார்ச் லைட்

பவர் சேவர் பல்பு

ஜன்னலொளி
ஆட்டோ இரவு
மோட்டோரோலாவின் மிங் ஏ1200-ல் (சிவாஜியில் மொட்ட ரஜினி வச்சிருப்பாரே) ஃபோக்கஸ் மாற்ற முடிந்தது. அதனால் சிலபல மேக்ரோ ஷாட்கள் சோதிக்க முடிந்தது. அதில் எடுத்த படங்களே இவை.

புதிதாக எஸ்.எல்.ஆர் கேமரா ஒன்று வாங்கியிருப்பதால் அலைபேசி படங்கள் இனி எடுப்பது பெருமளவு குறையும் எனவே இதுவரை எடுத்த படங்களை தொகுதிகளாக தரலாம் என்ற எண்ணத்தில் இந்த பதிவு.
_____________________________________________________________________

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP