மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

06-Jun-2009

விமர்சனம் என்றால் என்ன?

அண்ணன் தாமிரா அவ்வப்போது சிக்ஸ் சிக்மா, ஃபெயில் சேஃப் முதலிய தொழில் சார்ந்த பதிவுகள் போடுகிறார், கேபிள் சங்கரும், முரளிகண்ணனும் சினிமா நுணுக்கங்களை அணுகுகின்றனர், மைத்துனர் கார்க்கி காதல் பற்றி எழுதுகிறார், மதிப்புக்குரிய நாகார்ஜுனன் தத்துவம், கவிதை போன்ற பராக்கிரமங்களைக் கையாள்கிறார், கோவியார் ஆன்மீகம் பற்றி பேசுகிறார், நர்சிம் கார்ப்/கம்பர் சிலாகிக்கிறார். பதிவர்கள் கதைக்கும் இந்த அடுத்த தளத்திற்கு செல்லுதல் மேனியா என்னையும் (எந்த தளத்துலடா நீ இருந்த?) காந்தசக்தியால் இழுத்துக்கொண்டுவிட்டபடியால் இப்படி துறை சார்ந்த பதிவுகள் சிலவற்றைப் போடலாமென்ற எண்ணக் கல்லை குளத்தில் எறிந்ததற்கு வட்டமடிக்கும் நீர்த்திவலைகள் இனி இந்த லேபிளில்: தொழில் சார்ந்தவை.

எல்லா குழந்தைகளும் செய்வது பற்றிய ப்ரக்ஞையே இன்றி கிடைக்கும் கரித்துண்டால் சுவரில் தூரிகை புனையத் துவங்கும், மனிதன் குகைகளில் வாழ்ந்த காலம் தொட்டே ஒலி வரி வடிவங்கள் இல்லாத யுகங்களில் கிறுக்கல்களாலேயே கருத்து பரிமாற்றம் செய்து கொண்டான். இப்படியாக துளிர்த்த கலையின் பரப்பு விரியத் தொடங்க ஒன்றாக இருந்த திரி இடியாப்ப சிக்கலாகிப் போனதால் விமர்சனத்தின் தேவை வந்தது. வெறுமனே கலைப்படைப்பினை விவரிப்பது விமர்சனம் என்று விட்டுவிட முடியாது. இன்னொரு மழலைக்கு புரியும் கரித்துண்டு கிறுக்கலை நம்மால் அதே வேவ்லெந்த்தில் புரிந்து கொள்ள முடியாது, இன்னொரு குகைமனிதன் புரிந்துகொள்ளும் லிபிகளை நம்மால் அதேபோல அர்த்தம் செய்ய முடியாது. அப்படித்தான் பதிணெண்கீழ்கணக்கு நூல்களும் நமக்கு இன்று புரிவதில்லை. இவற்றுக்கு தெளிவுரை வேண்டியிருக்கிறது, விளக்கவுரை வேண்டியிருக்கிறது. இதிலும் மு.வ எழுதிய விளக்கமும், மு.க எழுதிய விளக்கமும் வெவ்வேறாக தொனிப்பது காண்க. இதுதான் சூட்சுமம். ஆர்க்கிடெக்சுரல் க்ரிட்டிசிஸம் என்று ஒரு பாடப்பகுதி இருந்தது, அதை ஜெனரலைஸ் செய்ததில் இதோ: விமர்சன வகைகள். இது ஒரு துறைக்கான விளக்கங்கள் மட்டுமே, எனில் இது எப்படி பிற துறைகளைச் சாரும் என்றால், கட்டிடம் என்பது ஓவியம், புகைப்படம், சிற்பம், திரைப்படம் வரை விரியும் ஒரு இயலே, அங்ஙனம். சுஜாதா சொல்வதைப் போல மேகங்களைப் பார்க்கும் இருவருக்கு மேகத்திரட்சிகள் வெவ்வேறு வித உணர்வுகளைக் கிளர்வது தான் கலையின் பண்பு. சரி, முதலில் விமர்சனம் என்றால் தான் என்ன? படைப்பின் பயனாக வாசகனாக நீங்கள் அடையும் அனுபவத்தின் குறிப்பு தான் விமர்சனம். ஆனால் கிளர்ந்த உணர்வின் பாங்கையும், ஒரு வித நிர்ணயிப்பையும் செய்வது விமர்சனம். நிதர்சனத்தில், வலையில் இருக்கும் அத்தனை பேரும் விமர்சித்துக்கொண்டிருந்தாலும் விமர்சனத்திற்கென்று சில சாம பேதங்கள், இலக்கணங்கள், ஏன் ரெஃபரன்ஸ் புத்தகங்கள் கூட இருக்கின்றன.
அடிப்படையில், விமர்சனம் மூன்று வகைப்படும்-
- நார்மேட்டிவ்
- இண்டர்ப்ரெட்டிவ்
- டிஸ்க்ரிப்டிவ்.

நார்மேட்டிவ் என்பது ஆசிரியர் எவ்வழியோ, மாணவன் அவ்வழி ரகம். கோடு போட்டால் ரோடு போடும் பேர்வழிகளுக்கு. ஒரு கலைப்படைப்பை அதை நிறுவியவர் எவ்வாறாய் விளங்கச்செய்ய முனைகிறாரோ, அதன் கூற்றுபடி செவ்வன நடந்துகொள்வது. ஏன் எதற்கு போன்ற கேள்விகள் எழாது. இவ்வகையானது ஊடகங்களை விட ஆய்வு, நூலாசிரியர், கல்லூரி பேராசிரியர் அந்தஸ்துகளில் இருப்பவர்களது தொழில்.

இண்டர்ப்ரெட்டிவ் என்றால்.. அதே தான் புரிந்து கொள்ளுதல். இன்னும் சொல்லப்போனால் எதிர்வினை புரிதல். இவ்வகை விமர்சகர்கள் தான் ஜாஸ்தி. "படம் மொக்க மச்சி!" தொடங்கி "..இது எழுத்தாளரின் ஆகச்சிறந்த ஆளுமை.." ரேஞ்சில் செயல்படக்கூடியது. கலைக்குள் மூழ்கி முத்தெடுத்து தனது அனுபவத்தை முன் வைக்கும் முயற்சி. இங்கு முந்தைய பகுப்பிற்கு நேரெதிராக விமர்சகனும் வாசகனும் சமநிலையில் இருக்கிறார்கள் என்பது காண்க.

டிஸ்க்ரிப்டிவ் என்பது வரலாற்றுப் புத்தகம் மாதிரி. வெறுமனே தகவல் தெரிவிக்கும் வேலையை செய்வது. விக்கிப்பீடியாவைப் போல. பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை.

மேலோட்டமாக இவ்வளவே. இன்னும் உபபிரிவுகளென முதல் வகையில் நான்கு, மீதியிரண்டிலும் மூன்று மூன்றாக மொத்தம் விமர்சனம் பத்து வகைப்படும். உலக சினிமா விமர்சகர்களாக பார் போற்றும் பெரியவர்கள் ஜோனதன் ரோசன்பாம், ரோஜர் ஈபர்ட் முதலியவர்கள், தேர்ந்த புகைப்பட/ கட்டிடக்கலை நடுவர்கள், விமர்சகர்கள் அனைவரும் இரண்டாம் வகையான இண்டர்ப்ரெட்டிவ் க்ரிட்டிசிசத்தையே செப்பனிட்டும், செவ்விய முறையில் தழைத்தோங்கவும் செய்ய விழைகிறார்கள்.

பி.கு 1: தி ப்ரெஸ்டீஜ் என்ற படம் ஒன்றை நான்காவது முறையாக பார்த்து விமர்சனம் எழுத எண்ணுகையில் பாடம் ஞாபகம் வந்தது... அரியர் பரீட்சை அடுத்த மாதம் இருப்பதன் சுய நினைவுகூரலின் ஒரு பாகம் இது.
பி.கு 2: பட விமர்சனம் வெகு விரைவில் உங்களைத் துன்புறுத்த ட்ராப்டில் தயாராகிக்கொண்டிருக்கிறது.
_______________________________________________________________

11 comments:

எம்.எம்.அப்துல்லா 6 June 2009 at 9:22 am  

ஹையா மீ த ஃபர்ஷ்ட்டூ :)

எம்.எம்.அப்துல்லா 6 June 2009 at 9:24 am  

அண்ணே எனக்கு முகஸ்துதி தெரியாது. நேரடியாவே சொல்லிடுறேன். இன்னும் கொஞ்சூண்டு எளிமையா இருந்து இருந்தா ரொம்ப அட்டகாசமா இருந்து இருக்கு. இப்ப அட்டகாசமாத்தான் இருக்கு

:)

வெங்கிராஜா 6 June 2009 at 11:18 pm  

@எம்.எம்.அப்துல்லா: நேர்மையான கருத்திற்கு நன்றி. எங்கே புரியாமல் போனது என அஞ்சலிலோ, பின்னூட்டத்திலோ விளக்கினால் தவறுகள் புரியும். இதை மிக்க அன்புடன் வரவேற்கிறேன்.

கடைக்குட்டி 7 June 2009 at 10:28 am  

இன்னும் கொஞ்சம் தண்ணி கலந்து லைட்டா சொல்லு தல...

ராவா இருக்கு இந்த சரக்கு. :-)

கடைக்குட்டி 7 June 2009 at 10:29 am  

முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

(அவங்களாம் ஏதாவது பண்ராங்க.. நானும் ஏதாவது பண்ணனும் நெனச்சதுக்கே ஒரு சலாம்)

(டிஸ்கி சூப்பர். ரசித்தேன்)

தீப்பெட்டி 8 June 2009 at 12:14 am  

//தி ப்ரெஸ்டீஜ் என்ற படம் ஒன்றை நான்காவது முறையாக பார்த்து விமர்சனம் எழுத //

பி.மு.கு 1: வெங்கி உங்க இடுகையை நான்காவது முறையாகப் படித்துவிட்டு பின்னூட்டம் போட நினைக்கையில்.. ஞாபகம் வந்தது பின்னூட்டமிட வேண்டிய பதிவுகள் பாக்கி இருக்கின்றன.

பி.மு.கு 2: இந்த இடுகைக்கான பின்னூட்டம் வெகுவிரைவில் உம்மை குஷிப்படுத்த எங்கோ தயாராகிறது.

அ.மு.செய்யது 8 June 2009 at 12:19 am  

விம‌ர்ச‌க‌ர்க‌ள் ம‌திக்க‌ப் ப‌டுகிறார்க‌ள்.ஆனால் நேசிக்க‌ப் ப‌டுவ‌தில்லை என்று எங்கோ ப‌டித்த‌தாக‌ நினைவு.

ப‌திவு என்னோட‌ ம‌ர‌ம‌ண்டைக்கு உக‌ந்த‌தாக‌ ப‌ட‌ வில்லை.

வெங்கிராஜா 8 June 2009 at 11:31 am  

//ப‌திவு என்னோட‌ ம‌ர‌ம‌ண்டைக்கு உக‌ந்த‌தாக‌ ப‌ட‌ வில்லை.//

இது என்னங்க வம்பா போச்சு! ஏதோ உங்களுக்கு புரிஞ்சதக்கூட குழப்பிவிட்டுட்டேனோ?

வெங்கிராஜா 8 June 2009 at 11:31 am  

//பி.மு.கு 2: இந்த இடுகைக்கான பின்னூட்டம் வெகுவிரைவில் உம்மை குஷிப்படுத்த எங்கோ தயாராகிறது.//

ஆரம்பிச்சுட்டீங்களா தோழரே! நடத்துங்க... நடத்துங்க...

கார்க்கி 8 June 2009 at 11:38 am  

இப்பவே கண்ணை கட்டுதே,...ஸப்பா

வெங்கிராஜா 8 June 2009 at 3:41 pm  

//கார்க்கி said...
இப்பவே கண்ணை கட்டுதே,...ஸப்பா//
அவனா நீயி-ன்றீங்களா சகா? விமர்சனம் வேணாவா?

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP