மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

19-Jun-2009

Spring, Summer, Fall, Winter... and Spring [2003]

பெயர்: ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர்... அண்ட் ஸ்ப்ரிங் (2003)
இயக்குநர்: கிம் கி டுக்.
மொழி: கொரியன்.இதை ஏண்டா படிக்கணும்னு ஃபீல் பண்ணினா, இந்தாங்க:
ஆசிப் அண்ணாச்சி
தலைவர் லக்கி லுக்

சினிமா தகவல் பெட்டகம் வண்ணத்துப்பூச்சியார்
கலமுமே பூடகம். ஒரு புள்ளியின் மையத்திலேயே சுழன்று கொண்டிருக்கும் ராட்டினத்தைப்போல் வாழ்க்கையும் ஒரே பாதையில் தான் பயணித்துக்கொண்டிருக்கிறது. காலம் மாறினாலும் காட்சிகள் மாறாமல் இருக்கின்றன என்ற கருப்பொருளை விரித்துரைக்கிறது படம். அற்புதமான களத்தில், வண்ணங்களால் நகரும் ஓவியம் ஒன்றை நமக்காக புனைந்து தருகிறார்கள் கொரியர்கள். ரம்மியமான கிழக்காசிய (சீன, கொரிய, ஜப்பானிய, தாய்லாந்து) படங்களின் வரிசையில் இந்தத் திரைப்படத்திற்கு என்றும் இடமுண்டு. ப்ரெஸ்டீஜில் எப்படி மேஜிக் திரைக்கதை உத்தி ஆனதோ அவ்வாறே பருவங்களை வைத்து திரைக்கதை பின்னியிருக்கிறார் இயக்குநர். மூன்று தலைமுறைகளின் கதையை ஒரு தலைமுறையைக் கொண்டே புரியச்செய்வதே ஆகப்பெரும் சாதனை, கை என்பதை உணர்த்த நகம் மட்டும் காட்டுவது மாதிரி. மௌனத்தின் இசையும், ஆத்மாவின் வரிகளும் ஆக்கிரமிக்கும் திரையில் பசும்புல்லும், நீர்நிலையும், ஆகாயமும் பேசிக்கொண்டே இருக்கின்றன. மனநிலை பிறழ்ந்து, அசாதாரண நிலையில் அனுபவிக்கக் கூடிய வலியின் வெளிப்பாடாகவே படைப்பு எனக்கு படுகிறது. பளிச் என்றிருந்தாலும் எப்படியோ ஓரத்தில் ஒட்டிக்கொள்ளும் சோகம் கசப்பாகவே இருக்கிறது. ஆமா இல்லை?

கதவுகளைத் தாங்க சுவர் கிடையாது. வேலி இருக்கையிலேயே மாடு மேயப் பார்க்கும்! பரமார்த்த குருவின் சீடர்கள் கிடையாது. ஒரே படுக்கையில் இருக்கும் குருவைத் தாண்டி, இளம் பெண்ணுடன் அதே அறையில் உறங்கும் சீடன் தான் உண்டு. நீண்ட சொற்பொழிவுகளாற்றும் குருநாதர் கிடையாது. கன்னத்தில் அறைந்தால் முதுகில் டின் (கல்) கட்டும் குரு தான் உண்டு. ஆங்காங்கே சேவல், பூனை, ஆமை, மீன், பாம்பு, தவளை, மனிதன் என ஏகப்பட்ட ராம நாராயணன் செட் ப்ராபர்டிகள் வந்து போகின்றன. படத்தில் வரும் மிச்சம் மீதி ஜீவராசிகளும் எக்செண்ட்ரிக்காகவே இருப்பது தனிச்சிறப்பு. படத்தின் இறுதியில் வரும் பெண் யார் என்பதில் பலருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நம்ம ஊரில் கோவில்களிலும், குப்பைத்தொட்டிகளிலும் துணியால் போர்த்தப்பட்டு விடப்படும் கர்ணர்களின் தாய்மார்களின் வடிவமே அந்தப் பெண். ஏனெனில் பால்யத்தில் ஒரு சிறுவனால் துள்ளித்திரிந்து துறவியின் ஆசிரமத்தில் வாழ்வது இம்மாதிரி கைவிடப்பட்டு வேறு வழியில்லாத சிறுவர்களால் தான் முடியும். சந்நியாசத்திற்கு அத்தனை இளம் பிராயத்தில் ஆய்-அப்பனைத் துறந்து தம்மை கட்டுப்படுத்திக்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று என்று தோன்றுகிறது.
படம் பற்றிய அளாவிய மதிப்பீடுகள் எனக்கில்லை என்றே சொல்லவேண்டும். வயது பற்றாக்குறையோ என்னவோ, இந்த ஆன்மீக சித்தாந்தங்களில் மூழ்கி முத்தெடுப்பதும், இது போன்ற விஷயங்களை திரைப்படம் மூலம் சொல்வதும் ஏற்புடையதல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. அதற்கென ஆவணப்படமாக SSFWaS-கை கருதுவதும் தவறாகவே படுகிறது. பூனை வாலால் எழுதப்படும் ஜென் கோட்பாடுகளைப் புரியாமலே சிலாகிப்பதெல்லாம் எனக்கு ஒத்துவரவில்லை. வெவ்வேறு நிறங்களில் எழுதுவதற்கான காரணமென்ன, வலமிருந்து இடம் எழுதுவதன் உள்நோக்கமென்ன, எழுதி செதுக்கி எழுதுவதன் பயனென்ன, கொரிய எழுத்துகளுக்கு சப்-டைட்டில் போடாமல் பத்து நிமிடத்திற்கு மேல் கடத்துவதேன் என படம் நெடுக பல கேள்விக்குறிகள். ஆனாலும் கலை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு - இம்மூன்றும் அற்புதமாக கையாளப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே சொன்னதைப் போல-
* கிறிஸ்துவரான கிம் கி டுக் இத்தனை அழகாக புத்தமத கோட்பாடுகளை எடுத்துரைத்த பராக்கிரமம்,
* ஓவியம், சிற்பம், தற்காப்பு, இசை, புகைப்படம்(அசையாத் தன்மை), கட்டிடம் என பலவித கலை வடிவங்களை ஒருங்கிணைத்தது,

* கட்டிடக்கலையில் கதைக்கும் Symmetry, Axiality, Tangentiality, Unity, Flow, Focus, Proportion இன்னபிற குறிகள் திரைக்கதையில் வியாபிக்கும் அழகு.

* அடர்த்தி: ஒவ்வொரு சின்ன செயலுக்கும் புத்தக புத்தகமாக ரெஃபர் செய்யவேண்டியிருக்கிறது. அதில் ஒரு சின்ன கல்லை எடுத்தாலும் கட்டிடமே குலைந்துவிடும் நேர்த்தி.


இது கலை சார்ந்த படைப்பல்ல. இதனை ஒரு வரியில் சுருக்கிச்சொல்வது கஷ்டமான காரியம். மேலும், இவ்வகை பாட்டம் லைன் விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு உவந்ததும் அல்ல. டாக்டர் விஜய் சொன்னது தான், "வாழ்க்கை ஒரு வட்டம்டா!"

_________________________________________________________________________________________________

8 comments:

தமிழ் பிரியன் 19 June 2009 at 6:25 pm  

நல்ல ஆழ்ந்த கவனிப்பு உங்ககிட்ட இருக்கு! நல்லா எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்!

வால்பையன் 19 June 2009 at 8:14 pm  

இது தான் மிஸ் ஆகிருச்சு!
உடனே பார்க்கனும்!

ஹாலிவுட் பாலா 19 June 2009 at 9:11 pm  

சார்.........

நீங்க எங்கயோ... போய்ட்டீங்க..!!! :)

==============

வெங்கிராஜா 20 June 2009 at 9:39 am  

நன்றி தமிழ்பிரியன்!
நன்றி வால்பையன்!
நன்றி பாலா அண்ணே!

Nundhaa 20 June 2009 at 12:08 pm  

PIT June 2009 போட்டியில் தேர்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள்

வண்ணத்துபூச்சியார் 20 June 2009 at 12:28 pm  

கலக்கல்.

வெங்கிராஜா 20 June 2009 at 9:19 pm  

நன்றி நந்தா.. முதல் முயற்சிக்கு இந்த அங்கீகாரம் கிடைப்பதே பெருசு!

வாங்கண்ணே... வண்ணத்துப்பூச்சியார் அவர்களே! கருத்துகளை விரிவாக சொன்னால் நல்லாயிருக்கும்!

சேரல் 16 July 2009 at 10:48 am  

Good one Venki

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP