மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

27-Oct-2009

பல்ப் ஃபிக்ஷன் (1994)


பெயர்: பல்ப் ஃபிக்ஷன்
மொழி: ஆங்கிலம்
வகை: குற்றம்
இயக்குநர்: க்வெண்ட்டின் டாரண்ட்டினோ
நடிகர்கள்: சாமுவேல் ஜாக்ஸன், ஜான் ட்ரவோல்ட்டா, உமா த்தர்மன், ப்ரூஸ் வில்லிஸ்

pulp /'p&lp/ n.
1. A soft, moist, shapeless mass of matter.
2. A magazine or book containing lurid subject matter and being characteristically printed on rough, unfinished paper.
American Heritage Dictionary
New College Edition

ஹாலிவுட்டின் மிகப்பிரலமான படத்தைப் பற்றி எழுதுவதாக பாலா அண்ணனிடம் வாக்குமூலம் தந்துவிட்ட பிறகுதான் இது ஹாலிவுட்டிலேயே மிகுந்த வாக்குவாதங்களையும் விதைத்த படம் என்பதும் ஞாபகம் வந்தது. படத்தைப் பற்றி மாற்றுக்கருத்து என்றே எக்கச்சக்கமாக இருக்கின்றன. வினைகள், எதிர்வினைகள், அதற்கு துணைவினைகள், மீண்டும் எதிர்வினைகள், முரண்கள் என்று இணையத்திலும், பிற ஊடகங்களிலுமே குழாயடிச் சண்டை குடுமிப்பிடி சண்டை எல்லாம் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றன. படத்தின் தனித்துவமான திரைக்கதை தான் முக்கால்வாசி இம்சைகளுக்குக் காரணம். ஸ்டோரி-போர்ட் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். படத்தின் ஸ்டோரி போர்ட்டை கார்ட்டூன் படங்கள் நிரம்பிய ஃப்ளிப் புத்தகம் போன்ற ஒன்றில் பதித்துப் புரட்டினால், கதை உங்களுக்கு மையமாக புரியவேண்டும். மூன்று-அங்க அமைப்பை பின்பற்றும் படங்களுக்கு இது பொருந்தும். பல்ப் ஃபிக்ஷன் இங்கு மாறுபடுகிறது. அதாவது நிரல் நிரை எல்லாம் கிடையாது. க்வெண்ட்டின் இயக்குநர் ஆவதற்கு முன்னர் வீடியோ கடையொன்றில் வேலை பார்த்த சமயம் வெவ்வேறு படங்களின் சுருள்களை இணைத்து படம் ஒன்றை ஏரியா பொடிசுகளுக்கெல்லாம் காட்டி கைதட்டல் வாங்கியிருப்பதாக வரலாறு சொல்கிறது. அதன் பாதிப்பாகவே அவரது நான்-லீனியர் திரைக்கதை முறையை நான் பார்க்கிறேன், இதில் நிபுணத்துவம், அறிவுஜீவி, கலைநுட்பம் போன்ற இத்தியாதிகள் இருந்தாலும் கூட. இந்த வடிவத்தைப் பற்றி அதிகம் பேச அவசியமே இல்லை. எழுபதுகளில் பிரபலமான அமெரிக்க நாவல்கள் என்றெல்லாம் போட்டிருப்பார்கள், தற்போது வரும் மெகாசீரியல்களைப் போல என்று உருவகப்படுத்திக்கொள்ளவும், போதும். இவரது பிற படங்களில் எனக்கு மிகப்பிடித்தது கில் பில் - அங்கம் I & II : அதைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை.

ட்ரிப்ளிகேண் டைம்ஸில் கணவனை அம்மிக்கல்லால் அடித்துவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் என்று எட்டாம் பக்கத்தில் பத்து மார்க் விடையளவில் பக்கத்தில் இருந்து பார்த்தது போல எழுதியிருப்பார்கள். கூடவே தலை நசுங்கிய அந்த அப்புராணிக் கணவனின் ரத்தம் படிந்த ஃபோட்டோ கருப்பு-வெள்ளையில் பல்லிளிக்கும். பல்ப் என்றால் அந்த மாதிரி தரம் தாழ்ந்த சாணி பேப்பர் செய்திகள். குவெண்டினின் கதைகள் சாதாரணமானவை. அப்பா தந்த தாத்தாவின் கைக்கடிகாரத்தை பொக்கிஷமாக மதிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரன் ஒரு தாதாவிடம் மாட்டிக்கொள்வது ஒரு கதை. அந்த தாதாவை ஏமாற்றிய பார்ட்னரைக் கொல்ல சென்று திரும்பும் இரண்டு அடியாட்களின் கதை இரண்டாவது கதை. இரண்டு அடியாட்களில் ஒருவன் தனது பாஸின் மனைவியை ஒரு நாள் கவனித்துக்கொள்வது இதன் கிளைக்கதை. இரண்டு அடியாட்களில் இன்னொருவன் உணவு விடுதியில் பிக்பாக்கெட் தம்பதியை மெர்சலாக்குவது இன்னொரு கிளைக்கதை. இதுதான் ஃபிக்ஷன். குவெண்டின் இந்த மாதிரி ஸ்டீரியோடைப்பிக் பாத்திரங்களை அன்றாட நிகழ்வுகளில் உலவவிடும்போது, என் கதைகள் உருவாகின்றன என்கிறார். அப்படி, இந்தக்கதையில் இருக்கும் பாத்திரங்களின் போக்கை அவர்கள் இஷ்டத்துக்கு விட்டு, முன்பின்னாக மாற்றி, சிதறடிக்கும் இசையும், தோட்டா தெறிக்கும் வசனங்களும் படம் பார்ப்பதை ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம் ஆக்குகின்றன. இந்த அணுகுமுறை ஒவ்வொரு முறை படம் பார்க்கும்போதும், புதிதாகத் தெரியவைக்கிறது.

குவெண்டின் ஒரு உலக சினிமா ரசிகர். பல்வேறு பிராந்திய, பாஷைப் படங்களை பார்த்து, பிடித்திருக்கும் பட்சத்தில் அமெரிக்க வினியோகமெல்லாம் செய்பவர். கொரியப் படமான ஓல்ட்பாய், ஹாங்காங்கின் வொங்க் கர் வாய் இயக்கிய சங் கிங் எக்ஸ்ப்ரெஸ் முதலிய பற்பல படங்களை உலகிற்கு அறிமுகம் செய்தவர். இந்த சர்வதேச கலாச்சார தாக்கங்களை இவரது படங்களில் பார்க்கலாம். உதாரணத்திற்கு, ப்ரூஸ் வில்லிஸ் தோன்றும் அத்தியாயங்கள் ஒருவித ஸ்பானியத் தன்மை கொண்டதாகவே எனக்கு பட்டது. 'Restless' என்ற நிலையற்ற தன்மையுடன் ஓடிக்கொண்டேயிருப்பது, காட்டமான, வெக்கையான சூழலிலேயே அந்த அங்கம் நகர்ந்துகொண்டிருந்தது. அதுவே, உமா தர்மன் தோன்றும் அத்தியாயங்கள் ஒரு பிரிட்டிஷ் படத்தைப் போல கள-கதாபாத்திர அறிமுகம், மெல்லிய நகைச்சுவை, சின்ன நடன அங்கம், திடீரென்று ஷேக்ஸ்பியர் சொல்கிற 'பிரச்சனை' பின்னாடி அதன் 'தீர்வு' என்று சம்பிரதாயமாக நடந்து முடிக்கிறது. முடிக்கப்படாத ஜிக்ஸா புதிர் பார்க்க ஒரு தினுசான கிளர்ச்சியைத் தரும். என்ன படம் என்று அடுக்காமல் இருந்தாலும் தெரியும் அந்த அழகியலின் பால் பல்ப் ஃபிக்ஷன் உச்சத்தை தொட்டிருக்கிறது. படத்தில் நான் ரசித்த இன்னொரு விஷயம் இந்த 'பேஸிங்'- காட்சிகள் நகரும் வேகம். வெஸ்டர்ன் எனப்படும் அமெரிக்காவின் தென் பகுதி பாலைவனங்களை மையமாகக் கொண்டு பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிகளில் நடக்கும் கதைகளைப் போன்ற வேகம். (இது பற்றி இன்னும் விரிவாக அடுத்த பகுதியில் சொல்கிறேன்.)படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் வசனம். பொதுவாகவே நீண்ட வசங்களுக்கு பேர்பெற்றவர் குவெண்டின். குறிப்பாக இஸகீல் 25:17 என்ற விவிலிய வசனமும் அந்த மொத்த காட்சியுமே சரவெடி! இது தவிர அய்யனார் அண்ணன் குறிப்பிட்டிருந்த ஸெட்'ஸ் டெட் வசனமும் ரொம்ப சுவாரஸ்யமானதே. படத்தில் எனக்கு (அனேக இளைஞர்களுக்கு) பிடித்தமானவர் ஜூல்ஸ் வின்ஃபீல்டாக வரும் சேமுவல் ஜாக்ஸனே. படத்தின் தனித்துவமான கலர் டோன், படத்தின் அணுகுமுறைக்கேற்ற எடிட்டிங் மற்றும் கேமிரா கோணங்கள் (படத்தின் முதல் காட்சியிலேயே ஜான் ட்ரவோல்ட்டா பிண்ணனியில் மங்கலாக நடந்து செல்வார், இஸகீல் 25:17 இரண்டாவது முறையாக ஒலிக்கையில் மாறும் பாய்ண்ட் ஆஃப் வ்யூ, இன்னபிற) எல்லாவற்றையும் ப்ளு-ரே அல்லது எச்.டி-யில் கண்டுகளியுங்கள். நாம் நாளெல்லாம் என்ன செய்கிறோம்? ஆதவன் குப்பையா இல்லையா என்று வாதாடுகிறோம், உ.போ.ஒ ஹிந்துத்வ படமா இல்லையா என்று கும்மியடிக்கிறோம். படம் நெடுக இப்படி முக்கியத்துவமே இல்லாத விஷயங்களைக் கூட தன் கூர்மையான வசனங்களால் சிதறடிக்கிறார் குவெண்டின். ஃபுட் மஸாஜ் ஆகட்டும், ஆம்ஸ்டர்டாமும் ரொயா(ல்) வித் சீஸ் ஆகட்டும், 5$ மில்க்ஷேக் ஆகட்டும், டிவைன் இண்டெர்வென்ஷன் ஆகட்டும்..! அமெரிக்க குற்ற உலகை நுணுக்கமாக விவரிக்கும் பல்ப் ஃபிக்ஷன வெறித்தனமான பிரத்தியேக ரசிகர் கூட்டத்தையும் பெற்று கல்ட் க்ளாசிக் என்று போற்றப்படுகிறது. படம் வெளிவந்த 94ம் ஆண்டு ஃபாரஸ்ட் கம்ப் (5 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய டாம் ஹேண்க்ஸின் மாஸ்டர்பீஸ்), ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் (IMDb #1 ஆண்களையும் அழவைத்த படம் என்ற பெருமைக்குரிய) ஆகிய இரண்டு ஜாம்பவான்களுக்கிடையில் தன் திரைக்கதைக்காக ஆஸ்கர் வென்றார் க்வெண்டின் டரண்ட்டினோ.

(அடுத்த பகுதியோடு நிறைவு பெறும்)

15 comments:

அனுஜன்யா 27 October 2009 at 3:08 pm  

சொன்னவுடனேயே இன்னொரு இடுகை வந்ததற்கு நன்றி வெங்கி. அதுவும் எனக்கு மிகவும் பிடித்த Pulp Fiction பற்றி. பாலா, அய்ஸ் எல்லோரும் எழுதிட்டாலும், நீ எழுதியதும் அட்டகாசம்.

ஐந்து வருடங்களை மூன்றாக மாற்றிவிடலாமா என்று யோசிக்கிறேன் :)

Keep rocking buddy.

அனுஜன்யா

வெங்கிராஜா | Venkiraja 27 October 2009 at 3:46 pm  

//சொன்னவுடனேயே இன்னொரு இடுகை வந்ததற்கு நன்றி வெங்கி.//
ட்விட்டர் இன்னும் சுலபமாக இருக்கிறது. அலைபேசியிலேயே ட்விட்ட முடிகிறது. அதனாலேயே இந்த பக்கம் வருவது குறைந்துவிட்டது.

//ஐந்து வருடங்களை மூன்றாக மாற்றிவிடலாமா என்று யோசிக்கிறேன் :)//
LOL! நன்றிண்ணே!
அடிக்கடி வந்துட்டு போங்க!

வினோத்கெளதம் 27 October 2009 at 3:47 pm  

ரொம்ப நாளாச்சு உங்களை பார்த்து..
கொஞ்சம் ஆழமாகவே உங்கள் ஸ்டைல்ல ஒரு விமர்சனம்.

ஹாலிவுட் பாலா 27 October 2009 at 4:53 pm  

ட்ரிப்பில் இருந்து நேத்து காரில் வந்துகிட்டு இருந்தப்ப, ஏன் இன்னும் பதிவு நீங்க போடலைன்னு நினைச்சிட்டே வந்தேன். :) :)

I told you buddy! உங்க விமர்சனம், பதிவுகளின் விமர்சனங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும்னு!

And u did it bro! :) Hats off!!!

அனுஜன்யா-க்கு மூணு வருடம் வேணும். என் ஸ்டேண்டர்டுக்கு... u already there! :) :) :)

அடுத்தப் பகுதிக்கு வெய்ட்டிங்! :)

[அப்புறம் கொஞ்சம் கம்மியா ட்விட்டி.. இந்த ஏரியா பக்கம் அப்பப்ப வந்துட்டு போங்க]

அஜயன்பாலா சித்தார்த் 27 October 2009 at 5:15 pm  

மிக நல்ல பதிவு..ப்ரூஸ் வில்லிஸ் பகுதியில் ஸ்பானிய வாடை அடிப்பதாக கூறியிருக்கிறீர்கள் நல்ல கண்டுபிடிப்புதான். உண்மையில் அது ஸ்பானிய வாடை அல்ல அமெரிக்க பூர்வகுடி மக்களுக்கான மரபு அது. குவாண்டின் அடிப்ப்டையில் அந்த மரபை சார்ந்தவர்.பூர்வகுடி அமெரிக்க மரபும் ஸ்பானிய மரபும் கிட்டதட்ட ஒன்றோடு ஒன்று கலந்தவை.இரண்டுமரபும் கடந்த (கொலம்பஸின் தய்வால்) ஐந்து நூற்றாண்டுகளாக பின்னி பிணைந்தவை....இப்படி சுழல்மரபில் கதை சொல்லும் பின் நவீனத்துவ உத்தி இலக்கியத்திலும் சினிமாவிலும் முழுக்க முழுக்க கொண்டுவந்தவர்கள் செவ்விந்தியர்கள் மற்றும் ஸ்பானிய அமெரிக்கர்கள் எனப்படும் அமெரிக்க பூர்வகுடிமக்களே அதுஅவர்களுக்கு கைவந்த கலை.சிட்டிஆப் காட், 21கிராம்ஸ்.அமோரஸ் பெராஸ் பேபல்,போன்ற படங்கள் அவர்களால் மட்டுமெமுழுமையாக உருவ்வாக்க முடிந்துள்ளது. அசல் ஸ்பானியரான் பெட்ரோஅல்மோடவர் மட்டுமே இதில் ஓரளவு வெற்றியடைந்திருக்கிறார்.ஒருவேளை அவரது ரத்தம் அமெரிக்க பூர்வகுடியோடு கலந்திருந்ததோ என்னவோ

வெங்கிராஜா | Venkiraja 27 October 2009 at 5:30 pm  

பாலாண்ணே.. நன்றி! நீங்கள் குறிப்பிட்ட நாலு படங்களையும் பார்த்திருக்கிறேன். எல்லாவற்றிலுமே ஓட்டமும் நடையுமாகவே பாத்திரங்கள் ஓடிக்கொண்டேயிருப்பார்கள். பெத்ரோ அல்மதோவரின் படங்களில் அந்த தன்மை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆழ்ந்து ஊடுருவும் காற்றின் தன்மையிலேயே அவரது திரைமொழி எனக்கு புலப்படுகிறது. உங்களது ஆதிக்கூறுகள் விஷயம் சரி போலவே தோன்றுகிறது. ஸ்பானியர்கள் என்று போட்டதை தென் அமெரிக்கர்கள் என்று போட்டிருக்கலாம் தான். சுட்டியதற்கு நன்றி.
//குவாண்டின் அடிப்ப்டையில் அந்த மரபை சார்ந்தவர்//குவெண்ட்டின் இத்தாலியர் என்று நினைத்திருந்தேன், இல்லையா?

வெங்கிராஜா | Venkiraja 27 October 2009 at 5:33 pm  

பாலா அண்ணே! வாங்க.. வாங்க! நீங்க இல்லைன்னா இதெல்லாம் சாத்தியமா? உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

//I told you buddy! உங்க விமர்சனம், பதிவுகளின் விமர்சனங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும்னு!//
அப்படியெல்லாம் எனக்கு தோன்றவேயில்லை. விமர்சனத்தை விடுங்கள், நான் அயல்தேசப் படம் பார்க்கத் தொடங்கியே இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை.

//அப்புறம் கொஞ்சம் கம்மியா ட்விட்டி.. இந்த ஏரியா பக்கம் அப்பப்ப வந்துட்டு போங்க//
நீங்க எல்லாரும் வாங்களேன் ட்விட்டருக்கு(ம்)!

வெங்கிராஜா | Venkiraja 27 October 2009 at 5:34 pm  

நன்றி வினோத் கௌதம். உங்களையும் ஃபேஸ்புக்கில் கூட காணோமே? அமீரகத்தில் பயங்கர வேலையோ? இனி அடிக்கடி சந்திக்கலாம் தல!

D.R.Ashok 27 October 2009 at 5:58 pm  

nice venky :) keep going

Karthik 27 October 2009 at 7:54 pm  

wow.. superb one! :)

Nundhaa 27 October 2009 at 8:24 pm  

நல்லா எழுதியிருக்கீங்க ... முடிந்தால் Quentin Tarantino கதை எழுதிய Natural Born Killers பற்றியும் எழுதவும் ... இப்படத்தின் இறுதி jail riot காட்சிகளை விருமாண்டியில் சுட்டுப் போட்டிருந்தார்கள்

butterfly Surya 27 October 2009 at 11:51 pm  

வெங்கி.. Xlent.

Cable Sankar 28 October 2009 at 8:26 am  

வெங்கி அருமையான விமர்சனம்.. பல்ப்ஃபிஷன் இன்னும் எத்தனை வருஷங்கள் வந்தாலும் ஒரு கல்ட் க்ளாசிக் தான்..

மண்குதிரை 30 October 2009 at 4:37 pm  

romba arumaiya ezhuthiyirukkiingka venki

வெங்கிராஜா | Venkiraja 30 October 2009 at 11:34 pm  

நன்றி நந்தா, அஷோக், வானவில் வீதி கார்த்திக், கேபிள் அண்ணன், வண்ணத்துப்பூச்சி அண்ணன், மண்குதிரை.

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP